Thursday, October 06, 2022

இடியாப்ப சிக்கலில் சிதம்பரம்! கதறும் காங்கிரஸ் தலைவர்கள்

இந்திய அரசியலில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக, ராஜபோக வாழ்வு வாழ்ந்தவர் யார் என்று கேட்டால், அது நிச்சயம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த பழனியப்பன் சிதம்பரமாகத்தான் இருக்க முடியும்.

இந்திராவின் மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தியுடன் நெருங்கிப் பழகியவர். அதன் பின்னர் நரசிம்மராவ், மன்மோகன் என்று பல்வேறு பிரதமர்களின் அமைச்சரவையில் பழம் தின்று கொட்டை போட்டவர். சோனியாவின் ஆக நம்பிக்கையான ஆலோசகர் அகமது பட்டேல், சிதம்பரமும் தான் சோனியாவின் இரு காதுகள் என்பர்.

 

மெகா ஊழல் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியும். ஆனால் அந்த ஒவ்வொரு ஊழலிலும் மக்களின் வரிப்பணம் மட்டும் திருடப்படவில்லை. தேசத்தின் நலனும் வளமும் விலை பேசப்பட்டுள்ள தான் கொடுமை.

நரசிம்மராவ் அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் பதவி வகித்தவர் சிதம்பரம். 1996ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதலீட்டாளர் கள் மாநாட்டில், இந்தியாவைப் பற்றிய சிதம்பரத்தின் கமென்ட் இது… ‘நாங்கள் உங்களை (ஆங்கிலேயேர்கள் என்ற கிறிஸ்தவர்களை) தெரியாமல் எங்கள் நாட்டில் இருந்து அனுப்பிவிட்டோம். இப்போது எங்கள் நாடு வறுமையில் உள்ளது. முதலீடு செய்ய ஆட்கள் இல்லை. நீங்கள் மறுபடியும் எங்கள் நாட்டுக்கு வரவேண்டும். தொழில் தொடங்க முழு சுதந்திரம் கொடுக்கிறோம். நீங்கள் மறுபடியும் சுதந்திரமாக தொழில் செய்யலாம்’ என்று அழைப்பு விடுக்கிறார். இந்த வீணரின் வாயில் வந்த வார்த்தைகள் இவை. இவர்தான் நாட்டுப்பற்றைப் பற்றி பேசுகிறார்!

 

சிதரம்பரம் அமைச்சராக மட்டுமல்ல, தொழில் ரீதியாகவும் ஒரு மிகப் பெரிய கிரிமினல்!

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகத்தில், என்ரான் என்ற மின்சக்தி உற்பத்தி நிறுவனம் மகாராஷ்டிராவில் தொழில் தொடங்க முன்வந்தது. ஆனால், உள்மாநில பிரச்னையால் நிறுவனம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடுப்பான ‘என்ரான் நிறுவனம்’, மத்திய அரசு மீது 38 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்குக் கேட்டது.

என்ரான் நிறுவனத்துக்கு எதிராக, இப்போது குல்பூஷன் வழக்கில் சர்வதேச கோர்ட்டில் நமக்காக ஆஜரான ஹரீஷ் சால்வேயை வாஜ்பாய் அரசு நியமித்து வாதாடும்படி கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த என்ரான் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வாதாடுவதற்காக நியமித்தது நம்ம கிரிமினல் பழனியப்பன் சிதம்பரத்தைத்தான். 2004ம் ஆண்டு ஆட்சி மாற்றம் கண்ட பின்னர், என்ரான் நிறுவனத்துக்காக வாதாடாமல் ஒதுங்கினாலும், சட்ட ஆலோசகராக தொடர்ந்தார்.

 

தேச துரோகம்!

என்ரானுக்காக தன் இஷ்டப்படி வழக்கை கையாளும் வகையில் அதிகாரம் தன்வசம் வந்ததும் சிதம்ரம் ஆடத் தொடங்கினார். மத்திய அரசுக்காக ஆஜராகி வந்த ஹரீஸ் சால்வேயை வழக்கில் இருந்து நீக்கச் செய்தார். சால்வேயின் இடத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த காவார் குரோஷியை நியமித்தார். இந்த காவார் குரோஷி யார் என்று கேட்டால், குல்பூஷன் வழக்கில் பாகிஸ்தான் வக்கீல். என்ரான் வழக்கில் இந்தியாவின் தோல்விக்கு குழிதோண்டியவர் இந்த பழனியப்பன் சிதம்பரம். கேட்டால் தொழில் தர்மம் என்பார். அவரது துரோகத்திற்கு இது இன்னொரு உதாரணம்.

இது லோக்கல் லெவல்

Indrani-Mukherjea

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் வருமானவரித்துறை கைசுத்தமானது. இப்படித்தான், கார்த்தி சிதம்பரம் தன் மச்சினனுடன் சேர்ந்து நடத்திய நூள்பாலையில் 45 லட்சம் ரூபாய் வருமானவரி முறைகேடு செய்தார். வருமான வரித்துறை இந்த ஓட்டையைக் கண்டு பிடித்து, அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், மத்தியில் ஆட்சி மாற்றம். நிதி அமைச்சர் சீட்டில் வந்து உட்கார்ந்த சிதம்பரம், தன் மகனின் ஸ்பின்னிங் மில்லுக்கு எதிரான வழக்கின் விசாரணையை மாற்றினார். அந்த வழக்கில், அரசு சார்பில் ஆஜராகும் வக்கீலாக நளினி என்பவரை நியமித்தார். வக்கீல் பீஸ் ஒன்றரை லட்சம் ரூபாய். வழக்கின் முடிவில் சிதம்பரம் குடும்பத்துக்கு 46.5 லட்சம் ரூபாய் லாபம். அதாவது, சிதம்பரம் நியமித்த வக்கீல் நளினி, கார்த்தியின் அம்மா, சிதம்பரத்தின் மனைவி. படித்த கிரிமினல்கள்.

 

இதுவேற லெவல்... சிதம்பரம் சிக்கிய கதை

ஐஎன்எக்ஸ் மீடியா… இன்றைக்கு சிதம்பரத்தை சிக்க வைத்து, சின்னாபின்னமாக்கி கம்பி எண்ண வைத்துவிட்ட வழக்கு. ஸ்டார் டிவியில் வேலை பார்த்த மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜிக்கும், அவர் கணவருக்கும் சொந்தமாக சேனல் தொடங்கிட ஆசை வந்தது. இதற்காக, நிதிப் பரிவர்த்தனை செய்ததில் அந்நிய நிதி கொஞ்சம் கூட, நிறைய பணம் பரிவர்த்தனையானது. 5 கோடி அனுமதி என்று அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் வந்ததோ 305 கோடிகள். நிதி அமைச்சர் என்ற முறையில் இந்த பைல்களை கவனித்த சிதம்பரம், ‘‘எல்லாம் ஒகே. என் மகன் கார்த்தி நிறுவனத்தையும் நீங்கள் கொஞ்சம் கவனிக்கணும்’’ என்று இந்திராணியிடம் கூறினார். எல்லாம் ஒகே ஆனது. எல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது.

"இந்தியாவின் பணம் அச்சடிக்கும் எந்திரத்தை பழையதானபின் உடைத்து போடாமல், பாகிஸ்தானுக்கு விற்றவர் நமது உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் சிதம்பரம்.."

P-Chidambaram-INX-Media-Case-CBI-Office

வண்ணத்துப்பூச்சி விளைவு

ராமன் விளைவு தெரியும், அதென்ன வண்ணத்துப் பூச்சி விளைவு (பட்டர்பிளை எபெக்ட்)? மும்பையில் குடிபோதையில், கார் ஓட்டிய சிக்கிய நபர் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்கிறார். கைதான போது போதையில் இருந்த அந்நபர், என்மேல் கையை வெச்சிப்பாரு நான் யார் வீட்டு டிரைவர் தெரியுமான்னு என்று போலீசிடம் உதார்விடுகிறார். போலீஸ்காரரும், சம்பந்தப்பட்ட நபர் சொன்ன விலாசத்தில், போலீஸ் விசாரிக்கிறது. ‘சாரி, அந்த நபர் யார்னு தெரியாது’ என்று எதிர்முனையில் பதில். ‘என்னது, என்னையவா தெரியாதுன்ன சொன்னாங்க? அந்தம்மா செஞ்ச கொலையை மறைக்க நான் எவ்வளவு உடந்தையாக இருந்தேன்?’ என்று போலீசில் போட்டுக் கொடுக்க, போலீஸ் அலர்ட் ஆனது.

 

கொலை வழக்கு!

போதை டிரைவர் போட்டுக் கொடுத்தது இந்திராணி முகர்ஜியை. ஷீனாபோரா கொலை வழக்கு இப்படித்தான் தொடங்கியது. இந்த வழக்கை விசாரித்த போலீசில் சிக்கிய இந்திராணி, ‘நான் யார் தெரியுமா? சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாம் என் பாக்கெட்டில்’ என்று இழுத்துவிட, இப்படித்தான் ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் கார்த்தியும், சிதம்பரமும் சிக்கினர்.

 

ஜாமீன்...

இதில் கார்த்தி ஏற்கனவே கைதாகி சிறையில் இருந்தார். இந்த வழக்கில் தான் எப்படியும் கைது செய்யப்படலாம் என்று தெரிந்து கொண்ட சிதம்பரம், டில்லி ஐகோர்ட்டில் 24 முறை முன்ஜாமீன் பெற்ற புதிய சரித்திரம் படைத்தார். (இவர்தான் ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று அடைமொழி கொடுத்தவர்).

 

ஏன் நீண்ட முன் ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில், தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் எப்ஐஆரிலும் என் பெயர் இல்லை என்று சிதம்பரம் ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலுக்கு, தன்மீது இல்லாத வழக்கில், எதற்காக 24 முறை ஜாமீன் பெற்றார் என்று கேட்டால், கபில்சிபல், அபிஷேக் மனுசிங்வி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

 

வலுவான வழக்கு

ஆனாலும், இந்த வழக்கில் தனக்கு எதிராக மிகப் பெரிய வலுவான வலைபின்னப் பட்டிருப்பது கண்டு சிதம்பரம் அஞ்சினாலும், சீனியர்கள் சிதம்பரத்துக்கு நிழல்போல் அடைக்கலம் கொடுத்ததால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது என்று சொல்பவர்களும் உண்டு.

 

புத்திசாலி கிரிமினல்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணிமுகர்ஜி கொடுத்த ரகசிய வாக்குமூலத்தை கையில் எடுத்துக் கொண்டு, அதையே பிரதானமான ஆதாரமாக வைத்து மத்திய அரசின் எந்த ஒரு விசாரணை அமைப்பும் நேரடியாக சிதம்பரத்துடன் மோதத் தயாராக இல்லை. காரணம், சிதம்பரம் 100 சதவீத புத்திசாலி கிரிமினல்.

 

பக்கா பிளான்!

தன் வீட்டு கல்லாப்பெட்டியின் கணக்கு முதல் சோனியா வீட்டின் காய்கறி கணக்குவரை ஐடிதுறையில் செட்டில்மென்ட் செய்து கொடுப்பவர். என்னசார், உங்க கணக்கில் பிசிறு இருக்கு என்று யாரும் அவரிடம் கேட்க முடியாத அளவுக்கு, பக்காவாக பிளான்போட்டு செட்டில்மென்டை முடித்திருப்பார். இப்படிப்பட்ட நபரிடம் மோதும்போது, விசாரிக்கும் அதிகாரியின் பாதுகாப்பும் முக்கியம். இல்லாவிட்டால், விசாரணை அதிகாரிகளின் கதி அதோகதிதான். இதனால்தான் இந்திராணி கொடுத்த வாக்கு மூலத்தை, பல ஆண்டுகளாக இன்ச் பை இன்ச்சாக அலசி, இதில் சிதம்பரம் சிக்குவது உறுதி என்று 100 சதவீதம் தெரிந்த பின்னர்தான் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை களம் இறங்கியுள்ளது.

 

சிதம்பரத்துக்கே இந்த கதின்னா? கதறும் காங்கிரஸ்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இலைமறை காய் மறையாக செயல்பட்ட சிதம்பரத்தையே மத்திய அரசு பொறி வைத்து பிடித்துள்ளது. இதனால், பாதிப்பு சிதம்பரத்துக்கா? இல்லை! காங்கிரஸ் கட்சிக்கே. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோரின் நேரடி தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய சுப்பிரமணியசுவாமியால், மீண்டும் அந்த வழக்கில் அவர்களை சிறைக்கு அனுப்பிட எவ்வளவு நேரமாகும். இன்னும் எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியை துரத்திக் கொண்டிருக்கிறது. சோனியாவின் எண்ணற்ற ஊழல் வழக்குகள் மருமகன் ராபர்ட் வாத்ரா தொடங்கி, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் தங்கை மகன் ரதுல்பூரியின் கைது, பிரியங்கா காந்தியுடன் பிரபல ரியல்எஸ்டேட் நிறுவனம் செய்து கொண்ட நில விற்பனை / லீஸ் வழக்கு, நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என்று எண்ணற்ற வழக்குகள் அணி வகுக்கத் தொடங்கியுள்ளன. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் கதறத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் அடுத்த ஊழல் வழக்கு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

sonia_gandhi_3
GettyImages-1146166156_0_0
robert-vadra-2_660_032615085617_020619045747

கல்லுளி மங்கர் சிதம்பரம்..

5 நாள் காவலில் எடுத்தும், சிபிஐ பழனியப்பன் சிதம்பரத்திடம் இருந்து ஒரு விஷயத்தையும் உருப்படியாக வாங்க முடியவில்லை என்பது கூடுதல் விஷயம். காரணம், சிதம்பரம் வாய் திறந்தால், இது டில்லியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் திமுக கட்சிக்கும் சேர்த்தே வேட்டு வைக்கும் வாக்கு மூலமாக இருக்கும். ஆனாலும், சிபிஐ தன்னை விசாரணைக்கு எடுத்த 5 நாட்களிலும் வீட்டுச்சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிட்ட சிதம் பரம், இந்த 5 நாட்களிலும் ஒரு வார்த்தை கூட பேச வில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரத்தை ஆஜர் செய்த சிபிஐ அதிகாரிளின் குற்றச் சாட்டாகும்.

 

அடுக்கடுக்கான வழக்குகள் பாயுமா?!

ராணி முகர்ஜியை பார்த்ததேயில்லை என்று சாதித்த சிதம்பரத்தற்கு, ராணி முகர்ஜி சில போட்டுக்களை ஆதாரமாக கொடுத்திருக்காராம். ஆடிப்போன சிதரம்பம் விரைவில் விஷயங்களை கக்கி விடுவார் என்று சிபிஐ காத்திருக்கிறது.

 

தேச துரோகி!

மெகா ஊழல் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியும். ஆனால் அந்த ஒவ்வொரு ஊழலிலும் மக்களின் வரிப்பணம் மட்டும் திருடப்படவில்லை. தேசத்தின் நலனும் வளமும் விலை பேசப்பட்டுள்ள தான் கொடுமை. சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை குவித்து வைத்துள்ள ஊழல்வாதிகளின் பணம் சும்மா கிடப்பதா என்று கலங்கிய இந்த சிதம்பரம் செய்தது பெரும் தேச துரோகம். ஜீணீக்ஷீtவீநீவீஜீணீtஷீக்ஷீஹ் ஸீஷீtமீs எனும் ஒரு புது யுத்தியை கண்டுபிடித்தார்.

நமது ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு துண்டு சீட்டு. அவ்வளவுதான். இன்னாருடைய சுவிஸ் கணக்கிலிருந்து 100 கோடி என்ற குறிப்பு, சுவிஸ் வங்கிக்கு ஊழல்வாதி தர, அந்த கருப்பு பணம் நமது மும்பை பங்கு சந்தை, நிலங்கள் என பாய்ந்து சுருட்டி வரும் லாபத்தில் வரி கூட கட்ட தேவையில்லாமல் மீண்டும் சுவிஸ் நாட்டுக்கு பறந்துவிடும். நிதி அமைச்சர் சிதம்பரத்தின் இந்த மாபெரும் துரோகத்தை எதிர்த்த வங்கி அதிகாரிகள், செபி அதிகாரிகள் காணாமல் போயினர்.

 

பணம் அடிக்கும் எந்திரம்... காகிதம்...

இந்தியாவின் பணம் அச்சடிக்கும் எந்திரத்தை பழையதானபின் உடைத்து போடாமல், பாகிஸ்தானுக்கு விற்றவர் நமது உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் சிதம்பரம். டி ரா லூ எனும் பணம் அச்சடிக்கும் காகித கம்பெனி நம்பதகுந்தது அல்ல என நமது அரசால் விலக்கி வைக்கப்பட்டது. அதனை எடுத்து சீராட்டி, நமது பணத்தை அச்சடிக்க கொடுத்தவர்! இதே நிறுவனம் தான் பாகிஸ்தானுக்கும் காகிதம் சப்ளை செய்கிறது.

 

என்ன ஒரு தேச துரோகம்!

மெகா ஊழல் ரிலிஸ் காத்திருக்கிறது.. இந்தளவு தேச துரோகம் செய்யும் சிதம்பரம் பதவியில் இருக்கும்போது எந்தளவு சேதம் விளைத்திருப்பார் என்பதை எண்ணிப் பார்த்தால் தலை சுற்றும்.

உலகம் முழுக்க சொத்துக்கள் உள்ளது என்று பட்டியலே உள்ளது.

இந்த ஊழல்களுக்கெல்லாம் மெகா ஊழல் ஒன்று வெளிவரப்போகிறது என்கிறார்கள்.

நமது ரூபாய் டுப்ளிகேட்டாகவும் அச்சடிக்கப்பட்டு வந்திருக்கிறது. நமது ரிசர்வ் வங்கி மூலமாகவே கூட இது விநியோகம் செய்யப்பட்டு இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் எத்தனை லட்சம் கோடிகள் அந்த ஊழல்…

தர்மத்தின் சுவடுகள் தான் இந்த கிரிமினல் கில்லாடி பானா சீனாவை கூண்டுக்குள் தள்ளியிருக்கிறது…