பெண்களை பெண்மைக்குரிய அழகுடன் வாழ்க்கையை வாழச் செய்வதில், இந்து மதத்துக்கு இணையான ஒருவேறு ஒரு மதம் இல்லை எனலாம். இந்தியாவில் உள்ள பிற மதங்கள் எல்லாம் பெண்களை அடிமைகளாக, அவர்கள் தங்கள் சுதந்திரத்தை வெளிப்படுத்த முடியாத வகையில் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் அடிமைத்தனமாக நடத்தும் நிலையில், இதே மதத்தின் பெயரால் பெண்களைப் போற்றும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே.
பொட்டு வைத்து…
மஞ்சள் பூசுதல், குங்குமம் இடுதல், பூச்சூடுதல் என்று பெண்மைக்குரிய அழகியலை வெளிப்படுத்துவதில், இந்து மதத்துக்கு நிகர் வேறெதுவும் இல்லை எனலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு பொட்டு வைத்துக் கொண்டு செல்வதையும், பூச்சூடிக் கொண்டு செல்வதையும் பல பள்ளி நிர்வாகங்கள் தடை செய்துள்ளன.
பூ சூடுவது ஆரோக்கியமும் கூட
ஆனால், உண்மையில் பூக்கள் சூடுவது அழகுக்காக மட்டுமல்ல, பெண்களின் ஆரோக்கியத்துக்கான ஒன்றாகவும் இருப்பதை பலரும் அறியாததால், இதுபோன்ற இம்சையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். காரணம், பூச்சூடும் பூவையருக்கு தாங்கள் சூடும் பூக்களின் மகத்துவம் தெரியாமல் போனதுதான்.
என்ன பூக்களை சூடலாம்?
ரோஜா, மல்லிகை, செண்பகப்பூ, செவ்வந்தி, முல்லை, பிச்சி, பாதிரிப்பூ, செம்பருத்தி, மகிழம்பூ, வில்வம், தாழை, சித்தகத்திப்பூ மற்றும் கனகாம்பரம் பூ என்று சூடுவதற்காகவே நிறை மலர்கள் உள்ளன.
பூக்களின் பயன், சூடும் கால அளவு
மல்லிகை: இதன் வெண்மை நிறம் மனதுக்கு அமைதியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரும். 5 முதல் 6 மணி நேரம் வரை தலையில் சூடிக் கொள்ளலாம். அல்லது வாடும் வரை சூடிக் கொள்ளலாம்.
ரோஜா : தலைச்சுற்றல், கண் நோய் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வாகும் பூ. வாடாமல், உதிராமல் இருந்தால் ஒன்று முதல் 2 நாட்கள் வரை சூடிக் கொள்ளலாம்.
பிச்சி , முல்லை ; மன அமைதி தரும். பிச்சிப்பூ 5 மணி நேரத்திலும், முல்லை 7 முதல் 8 மணி நேரம் வரையிலும் வாடாமல் இருக்கும் வரை சூடிக் கொள்ளலாம்.
செண்பகப்பூ : வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். இது அவ்வளவு எளிதில் வாடுவதில்லை. எனவே, ஒருவாரம் வரை சூடலாம்.
பாதிரி பூ : காது தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சலை குறைக்கும். வாசம் இருக்கும் வரை சூடலாம்.
செம்பருத்திப்பூ : தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் சூட்டைக் குறைக்கும். சில மணி நேரங்களில் வாடிவிடும்.
மகிழம் பூ : தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும். சாப்பிடும்போது மட்டும் சூடிக் கொள்ளலாம்.
வில்வம் : சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும். வாடும் வரை சூடிக் கொள்ளலாம்.
சித்தகத்திப் பூ : தலை வலியைக் குறைக்கும். மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். 8 மணி நேரம் வரை சூடிக் கொள்ளலாம்.
தாழம் பூ : மிகுந்த நறுமணம் கொண்டது. மனதை அமைதியாக்கி ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். உடல் சோர்வை நீக்கும். 3 முதல் 4 நாட்கள் சூடிக் கொள்ளலாம்.
தாமரைப் பூ : தலை எரிச்சல், தலைச் சுற்றலை சரி செய்யும். மனஉளைச்சலை நீக்கி, அமைதி கொடுக்கும். தூக்கமின்மையை நீக்கி, நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். 7 முதல் 8 மணி நேரம் சூடிக் கொள்ளலாம்.
கனகாம்பரம் பூ : தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும். 8 மணி நேரம் அல்லது வாடாமல் இருக்கும் வரை சூடிக் கொள்ளலாம்.
அல்லி பூ ; மன அமைதி கொடுக்கும், 2 நாட்கள் சூடலாம்.
சந்தனப்பூ : வாசனை, மன அமைதியைக் கொடுக்கும். சிந்தனை உறுதிப்படும். ஒரு நாள் மட்டும் சூடிக் கொள்ளலாம்.
தவிர, மகிழம்பூ, தாழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ ஆகியவை கபத்தை குறைக்கும் சக்தியுள்ளது.
குருக்கத்திபூவை சாப்பிடும்போது மட்டும் சூடிக் கொள்ளலாம். கூடவே, மாசிப்பூ, மந்தாரை, பாதிரிப்பூ ஆகியவற்றை வாசம் இருக்கும்வரை சூடிக் கொள்ளலாம்.
பூக்களை எப்படி சூடவேண்டும்?
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக்கூடாது. மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. உதாரணமாக மல்லிகை, கனகாம்பரத்தை இணைத்து சூடக்கூடாது. இது கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும்.
இதில், ஜாதி மல்லி, செவ்வந்தி, குடசப் பாலை, பாதிரிப்பூ, மகிழம், செண்பகம், சந்தம் மற்றும் ரோஜா ஆகியவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடலாம்.
மந்தாரை, தாமரை, கருங்குவளைப் பூக்களுடன், கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெறஉதவும். இதில், மல்லிகையை குளிப்பதற்கு முன்னரும், முல்லை, வில்வம் ஆகியவற்றை குளித்த பின்னரும் சூடிக் கொள்ளலாம்.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
பூக்கள் என்ன செய்யும்?
பெண்கள் தங்கள் கூந்தலில் பூ சூடும்போது, பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்தைத் தூண்டி, அவற்றின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. பூக்களின் பிராண ஆற்றலால், மன அழுத்தம் குறைந்து, மனம் அமைதியாகிறது. தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும். மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
தேர்வு வெற்றி சொல்லும் ரகசியம்
பெண் குழந்தைகள் பள்ளிக்கு பூக்கள் சூடிச் செல்லும்போது, அவர்களை அறியாமலேயே மன மாற்றம், மூளையின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்போது பாடங்களை கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெண் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இதனால்தான் அரசு மற்றும் பொதுத்தேர்வுகளில் பெண் குழந்தைகள் அதிகளவு வெற்றி பெறுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.