Friday, March 29, 2024

சுதந்திரம் எல்லையற்றதா

திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ராமசாமியின் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவர் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்ற சொற்களை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து இருக்கிறது!

ravidranathstatue

இந்திய குடிமக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்யும் அரசியல் சாசனத்தின் 19 வது ஷரத்து கடவுள் மறுப்பு உரிமையையும் உறுதி செய்கிறது என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது!
ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது!
வழிபாட்டு உரிமை உண்டு என்பதற்கு இணையாக கடவுள் மறுப்பு உரிமை உண்டு என்ற வகையில் நீதிமன்றத்தின்
இந்த தீர்ப்பில் குறைகாண முடியாது. அந்த வகையில் இது சரியான தீர்ப்பு என்றே சொல்லலாம்!
கடவுள் மறுப்பு என்கிற உரிமை அந்த கொள்கையை பின்பற்ற விரும்பும் ஒரு தனிமனிதனின் உரிமையும்
சுதந்திரமும் கூட!

கடவுள் மறுப்பை பிரச்சாரம் கூட செய்யலாம். இந்த உரிமையையும் கூட மறுக்க முடியாது!
அந்த வகையில் சிலையின் பீடத்தில் உள்ள கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்ற வாசகத்தை வைத்துக் கொள்ள உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது!

ஆனால் கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் அரசியல் சாசனத்தால் அளிக்கப்பட்டு இருக்கிறதா?
எனக்கு கடவுளை கற்பித்தவர்கள் எனது தாயும் தந்தையும்! அவர்களை முட்டாள் என்று ராமசாமி சொல்கிறார்!
கவிச்சக்கரவர்த்தி கம்பனில் தொடங்கி ஏராளமான அறிஞர்கள் கடவுளை என்னிடம் பரப்பினார்கள் கற்பித்த ஆசிரியர்கள் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களை அயோக்கியன் என்று
ராமசாமி சொல்கிறார் நான் கடவுளை வணங்குபவன் என்னை காட்டுமிராண்டி என்று ராமசாமி சொல்கிறார்! இது எனது தனிமனித சுதந்திரத்தின் மீது தொடுக்கப்கப்பட்ட தாக்குதல் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்!
கடவுள் மறுப்பின் சிறப்பை சொல்ல ஈ.வெ ராமசாமிக்கு உரிமை உண்டு! கடவுள் நம்பிக்கையை கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை இழிவுபடுத்த அவருக்கு உரிமை இல்லை!
தவிர, ராமசாமியின் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் இந்த வாசகங் கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன என்பது தான் பிரச்சினை. இந்த வாசகங்களால் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதாக இறை நம்பிக்கையாளர்கள் கருதுவதால் சமூக அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்!
சமூக அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இந்த வாசகங் கள் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வாசகங்கள் உரிமை ஆகாது!
சுதந்திரம் ஆகாது!
சுதந்திரம் எல்லையற்றது அல்ல கட்டுப்பாடுகள் அற்றது அல்ல என்று அரசியல் சாசனமும் சொல்கிறது!
உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் சொல்லி இருக்கின்றன!

நன்றி: வசந்தன் பெருமாள்.