Friday, March 29, 2024

தமிழ்நாடு அரசு இதை செய்யுமா?

ஆந்திர இந்து அறநிலையத்துறையில் 3 முஸ்லிம்கள் மற்றும் 14 கிறிஸ்தவர்கள் என்று 17 மாற்று மதத்தினர் தங்களது பெயரை இந்து பெயர்களாக மாற்றி வைத்துக் கொண்டு பணி புரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது…

 

ஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…
ஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…
அதாவது இந்து அறநிலையத்துறை கோயில்களில் பணி செய்து வருபவர்கள் இந்து மதம் இல்லாத பிற மதங்களை வீட்டில் பின்பற்றி வருகிறார்களா என்று திடீரென சோதனை நடத்தப்பட்டது…

 

அப்படி சோதனை நடத்தியதில்….
3 முஸ்லிம்கள் மற்றும் 14 கிறிஸ்தவர்கள் இந்து அறநிலையத்துறையில் வேலை செய்து வருகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாற்று மதத்தினர் தங்களது பெயர்களை இந்து மத பெயராக மாற்றம் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று பெயரை மாற்றிக் கொண்டு உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பணியாளர்கள் தாங்கள் மாலா மற்றும் மடிகா ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால், இவர்கள் வீட்டில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர்….
இந்த மோசடி குறித்து தகவல் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் தரப்பட்டுள்ளது…
இதன் அடிப்படையில், இந்து மத பெயரில் பணி செய்து வரும் மாற்று மதத்தை சேர்ந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார்….
இதே போல, திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து மத பெயரில் மாற்று மதத்தினர் வேலை செய்தால், அவர்களும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்தார்….

இதே போல தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.....