Thursday, October 06, 2022

காஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க...

ஐநாவுக்கு மலாலா கோரிக்கை... இந்தியர்கள் கடும் பதிலடி!

மலாலா

பாகிஸ்தான் ஸ்வாத் பள்ளத்தாக்கில் மின்கோராவின் மக்கான் பாக் பகுதியைச் சேர்ந்தவர் மலாலா 22. பெண் கல்வியை வலியுறுத்தியதால் 2012 டிசம்பரில் மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் லண்டன் நகரில் தீவிர சிகிச்சை பெற்று உயிர்ப் பிழைத்தார். அதன் பிறகு அங்கேயே தங்கி விட்டார்.அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.

 

டுவிட்டரில்...

தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா யூசப், தனது டுவிட்டர் பதிவில், ஐநா சபை தலைவர்கள், காஷ்மீரில் அமைதிக்காக பணியாற்ற வேண்டும், காஷ்மீரிகளின் குரல்கள் கேட்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல உதவ வேண்டும்.

கவலை அளிக்கிறது

41 நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் உள்ளார்கள். பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டு வாழ்ந்து வருவதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கிறது. உலகில் இருந்து காஷ்மீர் மக்கள் துண்டிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களின் குரல் களை கேட்க முடியவில்லை என கூறியிருந்தார்.

 

ஹீனா சிந்து பதிலடி!

மலாலாவின் இந்தப் பதிவுக்கு, இந்தியாவைச் சேர்ந்த ஹீனா சிந்து பதில் அளித்துள்ளார். இவர், சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பலபதக்கங்களை வென்ற வீராங்கனை. அவரின்பதிவில்,
‘‘சரி, பாகிஸ்தானியர்கள் விருப்பப் படுவது போன்று காஷ்மீரைஉங்களுக்குக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது, இந்தியப் பெண்களின் கல்வி நிலை தங்களைப்போன்று சிறப்பாக இருக்கும். ஆனால், சொந்த நாட்டிலே தனக்கான அடையாளத்தைத் தொலைத்து, வாழ்க்கையை இழந்தஉங்களின் நிலைதான் காஷ்மீர் பெண்களுக்கும் வரும்.
சொந்த நாட்டில்வாழப் பயந்து கொண்டு இங்கிலாந்தில் வாழும் நீங்கள், ஏன் பாகிஸ்தானுக்கு மீண்டும் சென்று உங்கள் நாட்டில்பெண்களின் வளமானநிலையை நிரூபிக்கக்கூடாது. நீங்கள், முதலில் உங்கள் நாட்டுக்குச் சென்று, உங்களை நிரூபித்து, அதன்பின் இந்தியாவுக்கு அறிவுரை வழங்குங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரியங்கா சதுர்வேதி

சிவசேனா கட்சியின் துணை தலைவர் பிரியங்கா சதுர்வேதி, தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் எவ்வாறு பயங்கரவாதத்தை திட்டமிட்டு ஆதரித்தது, சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்பட்டனர். கல்வி கற்க முயன்ற சிறுமிகளைக் கொல்ல முயற்சித்தார்கள். மலாலா இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

 
 

பாஜக தலைவர் ஷோபா

கர்நாடகாவின் சிக்மங்களூரு எம்பியும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாகிய ஷோபா கூறுகையில், நோபல் பரிசு வென்றவருக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்காவும் சிறிது நேரம் பேச வேண்டும். சொந்த நாட்டில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து நீங்கள் உரக்க பேச வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் காஷ்மீரிலும் செயல் படுத்தப்படுகினற்ன. அதுவும் அங்கு தடுக்கப் படவில்லை என கூறியுள்ளார்.

ராஜானி சர்மா

பெங்களூருவைச் சேர்ந்த ராஜானி சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், மலாலா ஜி, பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள், பாகிஸ்தான் இந்துக்கள், பாகிஸ்தான் சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு உங்கள் உதவி தேவை. அதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். காஷ்மீருக்காக 130 கோடி இந்தியர்கள் இருக்கிறோம். நாங்கள் பார்த்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

தன் சொந்த நாட்டில் பெண் கல்வியை வலியுறுத்தியதால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டவர்… தன் சொந்த நாட்டில் மீண்டும் குடியேற முடியாமல் அன்னிய நாட்டில் தஞ்சம் அடைந்து உயிர் பிழைப்பவர்.அதை எல்லாம் மறந்து விட்டு காஷ்மீர் மக்களுக்காக நீலிகண்ணீர் வடிப்பதை என்ன சொல்ல…