கரப்பான்களின் ராஜ்ஜியம்....

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் தான் சிசியாங். இங்கு தான் ‘குட் டாக்டர்’ எனும் மருந்து கம்பெனி இரண்டு மிகப் பெரிய கால்பந்து மைதானம் அளவு ஒரு கட்டிடத்தை கட்டி அங்கு 6 பில்லியன் கரப்பான் பூச்சிகள் வளர்த்து வருகிறது.
மருத்துவ குணம்
இந்த கட்டிடங்களில் மைல் நீளத்திற்கு வரிசை வரிசையாக, இருட்டாக நீரோடு கலந்த பலகைகள் அடுக்கப்பட்டுள்ளன. இதில் தான் கரப்பான் முட்டையிட்டு பெருகுகின்றன.
இந்த இடம் சிறை போல வைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி கூட உள்ளே செல்ல முடியாது. இந்து கரப்பான்கள் தப்பிச் செல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
இந்த கரப்பான்கள் ஒடியாடி சிதறிக் கிடக்கும் உணவை தேடி தின்று, முட்டையிட்டு பெருகுவதை கண்கானிக்க ரோபோக்கள் உள்ளன.

வருவாய் அதிகம் தான்

இந்த கரப்பான்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், அவை அங்கேயே ஒரு பெரிய அரவை மெஷினிலில் போட்டு ஜூஸாகவோ அல்லது பொடியாகவோ பார்சல் செய்து அனுப்பப்படுகிறது.
சீனாவில் உள்ள 4000 மருத்துவ மனைகளுக்கு இந்த கரப்பான் ஜீஸ் அனுப்பபடுகிறது, இதனால் இந்த மருத்துவமனையின் வருவாய் 684 மில்லியன் டாலர்.
கரப்பான்களின் பவுடரை பல அழகு சாதனை உற்பத்தியாளர்கள் புரத சத்து என வாங்கி கொள்கின்றனர்.
கரப்பான் ஜீஸ் மருத்துவ குணம் கொண்டது. தொண்டை, மூச்சு தினறல், வயிற்று உப்பிசம் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணி.
99% சதவீத மக்களுக்கு தாங்கள் குடிப்பது என்ன என்று தெரியாது என்கிறார் ஒரு மருத்துவர்.
உணவும் கூட
ஒரு கிலோ உலர்ந்த கரப்பான் 4 டாலர்கள் என உணவாகவும் விற்கபடுகிறது.
இன்னும் 100 வருஷம் கழித்து இந்த உலக மக்கள் தொகை கூடகூட, அதற்கான புரதம் இந்த வகை பூச்சிகளால் தான் கிடைக்கும் என்கிறார் குட் டாக்டர் மருத்துவ நிறுவன அதிகாரி லீ.
சீனாவில் 100க்கும் மேலான கரப்பான் பண்ணைகள் உள்ளன. ஆனால் இது தான் ஆக பெரியது என்கிறார் லீ…
இந்த நிர்வாகியை பேட்டி காண சென்ற நிருபரை உள்ளே கூட்டி சென்ற லீ அங்கே ஒடிக் கொண்டிருந்த கரப்பான்களை பிடித்து, கொதிக்கும் எண்ணெய்யில் வறுத்து தானும் சாப்பிட்டு அந்த நிருபருக்கும் கொடுத்தாராம்!!!
இதுவும் ஒரு சுவை தான் என்று லீ கூறியுள்ளார்!! சரி தான்!!!
