Friday, March 29, 2024

திரை & இந்து பெண்கள் படிக்க வேண்டும்...

எஸ். எல்.பைரப்பா கன்னடத்தில் ‘ஆவரணா’ (தமிழில் திரை) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதுவரை படிக்காதவர்கள், குறிப்பாக ஹிந்துப் பெண்கள், நிச்சயம் படிக்க வேண்டுகிறேன். இஸ்லாமியக் கொடூரங்கள் குறித்து இத்தனை விவரமாக சமீபத்தில் எழுதவில்லை. அறியாமையில் உழலும் தமிழர்கள் முக்கியமாக இதனைப் படிக்க வேண்டும். தங்களின் கலாச்சாரப் பொக்கிஷங்கள் எவ்வாறு இஸ்லாமியப் படையெடுப்புகளால் அழிந்தன என்பதினை உணராத இந்தியன் நடைப்பிணத்திற்குச் சமமானவன்.

லக்ஷ்மி

‘முற்போக்குச் சிந்தனையுள்ள’ லஷ்மி, அதுபோலவே முற்போக்குச் சிந்தனையுள்ள(!) ஒரு முஸ்லிமைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறாள். ஆனால் அவளை ‘லஷ்மி’யாகவே இருக்கவிடாத அந்த முற்போக்குத் சிந்தனையுள்ள முஸ்லிம் அவளை மதம் மாறக் கட்டாயப்படுத்தி, அதன்படி அவள் ‘ரேஷ்மி’யாகிறாள். அவர்களுக்குப் பிறக்கும் மகனும் முஸ்லிமாகவே வளர்க்கப்படுகிறான். இப்படி அடுத்த மதத்துக்காரனைக் கல்யாணம் செய்து கொண்ட அவளை அவளது தகப்பனார் தள்ளி வைக்கிறார். அவளும் அதுகுறித்துக் கவலைப்படாமல் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக, கணவனின் வற்புறுத்தல்காரணமாக மாட்டிறைச்சி தின்னும், நமாஸ் செய்யும் ‘முற்போக்கு’ முஸ்லிம் பெண்ணாக வாழுகிறாள்.

 

சுயரூபம்!

காலப் போக்கில் கணவனது சுயரூபம் தெரிந்து அவனை விட்டு விலகிப் போகிறாள். இறந்துபோன அவளது அப்பாவின் ஊருக்குப் போய் அவர் சேர்த்து வைத்திருக்கிற இஸ்லாமியப் படையெடுப்புகள் பற்றிய புத்தகங்களை ஆழ்ந்து படிக்கிறாள். உண்மை தெளிவாகிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் நடத்திய படுகொலைகள், வெறியாட்டங்கள், ஆலயச் சேதங்கள் ஆகியவற்றைக் குறித்துப் படிக்கிறாள். அவள் இனிமேல் தனக்குக் கட்டுப்பட்டு வாழமாட்டாள் என அறிகிற அவளது ‘முற்போக்கு’ முஸ்லிம் கணவன் அவளுக்குத் தலாக் சொல்லாமலேயே இன்னொரு சிறுவயது முஸ்லிம் பெண்ணை மணந்து கொள்கிறான்.

 

பைரப்பாவின் ‘ஆவரணா’ (2007) என்ற நாவல் தமிழில் ‘திரை’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பதிப்பகத்தி லிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது.

ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. (திரை – கன்னட மூலம் எஸ்.எல்.பைரப்பா, தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், வெளியீடு: விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை-600031. விலை: ரூ.300/-) போன்: 044 – 24620870

முற்போக்கு எனும் பட்டம்

ரேஷ்மி ஒரு ‘முற்போக்கு’ என இந்தியா முழுவதும் அறிமுகமாகி இருந்ததால் மத்திய அரசாங்கம் பாடப் புத்தகங்களைத் திருத்தி எழுதும் ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறாள். அங்கு இருந்தவர்களில் பெரும் பாலோர் ஹிந்துக்களுக்கு எதிரான ‘முற்போக்குகளும்’, முஸ்லிம்களும் நிறைந்து இருக்கிறார்கள். இஸ்லாமியப் படையெடுப்புகளையும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற முக்கியத் தலங்களைத் தகர்த்த அவுரங்கஸிப் போன்றவர்கள் மீது ஹிந்துக்களுக்கு இருக்கும் கோபத்தையும் மாற்றும் விதமாக அவர்களை உயர்த்தி இந்திய பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

 

வரலாறு உண்மையாக இருக்க வேண்டும்!

லஷ்மி (ரேஷ்மி) அதனைக் கேட்டுக் கோபமடைகிறாள். அப்படி மாற்றுவது தவறு என வாதிடுகிறாள். ‘வரலாறு உண்மையின் அடிப்படையிலேயே இருக்க வேண்டுமே தவிர போலியான தகவல்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த வரலாறுகளைப் படித்து வளரும் ஒருவன் பிற்காலத்தில் உண்மையை உணர்ந்து கொண்டே ஆக நேரிடும். அதனால் விளையும் கசப்புகள் அதிகமிருக்கும். எனவே உண்மையான வரலாற்றைக் குழந்தைகள் படித்து அறிவது முக்கியம்’ எனச் சொல்லும் அவளது கருத்தை அங்கிருந்த முஸ்லிம்களும் பிறரும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தியப் பாடத்திட்டம் பொய்யான தகவல்களுடன், இஸ்லாமிய மதவெறியர்களை உயர்த்திப் பிடித்து மாற்றி எழுதப்படுகிறது.

 

நாவல்

மனம் வருந்தி ஊருக்குத் திரும்பும் லஷ்மி (ரேஷ்மி) தான் அறிந்தவற்றை ஒரு நாவலாக எழுதுகிறாள். ஆனால் எவரும் அதனைப் பதிப்பிக்க முன்வராததால் தானே பணம் செய்து அந்தப் புத்தகத்தை வெளியிடுகிறாள். ‘முற்போக்குகள்’ அவள் மீது கோபம் கொள்கிறார்கள். அரசாங்கத்திடம் சொல்லி அந்தப் புத்தகத்தைத் தடைசெய்கிறார்கள்.

 

உண்மை கசக்கும்

அடிப்படையில் உண்மையைச் சொல்லவரும் ஒரு சராசரி ஹிந்துவுக்கு இந்த தேசத்தில் நிகழ்கிற துன்பத்தைக் குறித்துப் பேசுகிறது ‘ஆவரணா’.

லஷ்மிக்களுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதே இங்கு நான் சொல்ல வருவது.

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் ஹிந்துக்களின் இந்த அவல நிலையை மாற்ற வேண்டும். மாறும். அல்லது மாற்றியே தீரவேண்டும்.

இஸ்லாமியப் படையெடுப்பின் கொடூரங்கள். வரலாற்று உண்மை பேசினால் மிரட்டுவதா?!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ‘இஸ்லாமியப் படையெடுப்பு களின் காரணமாகத் தான் ஹிந்து ஆலயங்களின் சிலைகளை மறைத்துவைக்கும் வழக்கம் துவங்கியது’ என்கிற எதார்த்தமான, உலகறிந்த உண்மை யைச் சொன்னால் அவர் மீது ‘மதங்களுக்கு இடையே பிரச்சினையைத் துவக்குகிறார்’ என்று சொல்லி எவனோ காவல்நிலையத்தில் பிராது கொடுத்திருக்கிறான்.

வரலாறு முழுக்க இஸ்லாமிய வந்தேறிப் படையெடுப் பாளர்கள் ஹிந்துக் கோவில்களை இடித்து, அதன் சிலைகளை உடைத்தது குறித்து அவர்களே பெருமை பொங்க எழுதிய வரலாறுகள் இருக்கின்றன. அதை இல்லை என யாரால் மறுக்கமுடியும். அப்படி மறுத்தால் பாபர்நாமாவும், மாஸிர்-இ-ஆலம்கிரியும், ஷாஜஹான்நாமாவும், ஜஹாங்கிர்நாமாவும் பொய் சொல்வ தாக அல்லவா அர்த்தம்? ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் சிலையைத் தூக்கிக் கொண்டு ஹிந்துக்கள் ஊர் ஊராக ஓடியதும், மதுரைக் கோவிலை இடித்ததும் கட்டுக் கதைகளா என்ன? அலாவுதீன் கில்ஜியும், மாலிக் கபூரும் கிரிக்கெட் விளையாடுவதற்காகவா தென்னிந்தியா மீது படையெடுத்தார்கள்? திப்புவும், ஹைதரும் இடித்த கோவில்களுக்கும், கொன்ற ஹிந்துக்களுக்கும் கணக்கிருக்கிறதா என்ன?

இந்த உண்மையை ஒருவன் சொன்னால் அவன் மீது கேஸ் போடுவதா? அப்படிக் கேஸ் போட்டால் மேற்சொன்ன கொடுமைகளை எல்லாம் ஹிந்துக்கள் அனுபவிக்கவில்லை என்று ஆகிவிடுமா? இந்திய தேசத்தில் 200 மில்லியன் ஹிந்துக்களை இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் கொன்று குவித்திருக்கிறார்கள். ரத்த ஆறு ஓடியிருக்கிறது இந்த தேசத்தில். அதையெல்லாம் நாங்கள் மறந்துவிட வேண்டுமா? என்ன நியாயம் இது?