Thursday, April 18, 2024
“Our Situation is the Result of What Happened in the past”: Al-Houthi
ee

1998ல் அல்உம்மா

இப்போ அன்சருல்லா?

தமிழகத்தை தகர்க்கத்துடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதம்!

உலகம் முழுவதும் 50க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகள் இருந்தாலும், இந்த நாடுகளின் வளர்ச்சியை சிதைப்பதற்கென்றே, அந்தந்த நாடுகளில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இருக்கத்தான் செய்கிறது. நோயால் இறக்கும் மக்களைவிட, தீவிரவாதிகளின் வெடி குண்டுத் தாக்குதலால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இப்படியொரு கொத்து கொத்தான உயிர் பலியை 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் தொழில் நகரான கோவை சந்தித்தது. அல்உம்மா தீவிரவாத இயக்கம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 900க்கும் அதிகமானோர் நிரந்தர ஊனமடைந்தனர். இந்தப் படுகொலையை நிகழ்த்திய பாவிகளைத்தான், சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பதாக கூறி, சில முஸ்லிம் இயக்கங்கள் போராட்ட அழைப்புகள் விடுத்துள்ளன என்பது, இன்றைய தலைமுறையினருக்கு மறைக்கப்பட்ட உண்மை.

 

இலங்கையில் தாக்குதல்!

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை நாளில், இலங்கையில் ஓட்டல்கள் மற்றும் சர்ச்சுகளில் 9 இடங்களில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 290க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த ஈவு இறக்கமற்ற தாக்குதூலுக்கு, மேற்கு ஆசியாவின் சிரியா, ஈராக் உட்பட பல நாடுகளில் செயல் படும் ஐஎஸ் பயங்கர வாத அமைப்பு பொறுப்பேற்றதும், இந்த அமைப்புக்கு இலங்கையில் செயல்பட்ட ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ நிர்வாகி ஜஹ்ரான் ஹாஷிம் உதவி செய்து, தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.

image3

தமிழகத்தில் தொடர்பு

இலங்கையில் தாக்குதல் நடத்தினாலும், தேசிய தவ்ஹீட் ஜமாத் நிர்வாகியான ஜஹ்ரான் ஹாஷிம் சில மாதங்கள் தமிழகத்தில் தங்கியிருந்தது, இலங்கை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதேநேரத்தில், இலங்கையில் இப்படியொரு மாபெரும் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் என்ஐஏ அமைப்பு இலங்கையை எச்சரித்து இருந்தது. இதில், ஹாஷிம் சில மாதங்கள் தமிழகத்தில் தங்கியிருந்த நிலையில், இதுகுறித்து என்ஐஏ மோப்பம் பிடித்தது. மேலும், இலங்கைத் தாக்குதலைப் பாராட்டி, தமிழக முஸ்லிம்கள் சிலர் முகநூலில் கொண்டாட்டம் தெரிவித்து பதிவிட, நிலைமை சிக்கலானது. இதில், என்ஐஏவின் பிடியில் முதலில் சிக்கிய நபர் கோவையைச் சேர்ந்த அசாரூதீன். அவரை விசாரித்ததில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்தத் தகவல் அடிப்படையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரும் சிக்கினர்.
மேலும், இலங்கைத் தாக்குதலைப் பாராட்டி, தமிழக முஸ்லிம்கள் சிலர் முகநூலில் கொண்டாட்டம் தெரிவித்து பதிவிட, நிலைமை சிக்கலானது. இதில், என்ஐஏவின் பிடியில் முதலில் சிக்கிய நபர் கோவையைச் சேர்ந்த அசாரூதீன். அவரை விசாரித்ததில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்தத் தகவல் அடிப்படையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரும் சிக்கினர்.

 

துபாயில் சதிவலை

image2

ஹசன் அலியும், ஹாரிஸ் முகமதுவும் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை வேலைக்கு எடுத்து, அவர்களை துபாய்க்கு பணிக்கு அனுப்பியது தெரியவந்தது. துபாயில் அவர்கள் வேலை செய்து கொண்டே, சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின், தொப்புள்கொடி உறவான அன்சருல்லா என்ற தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வந்ததை என்ஐஏ கண்டு பிடித்தது. மேலும், 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அல்உம்மா நடத்திய தாக்குதலைப் போல், மிகப்பெரிய ஒரு தாக்குதலுக்கு அன்சருல்லா அடிபோட்டிருப்பதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.

 

துபாயில் அவர்கள் வேலை செய்து கொண்டே, சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின், தொப்புள்கொடி உறவான அன்சருல்லா என்ற தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வந்ததை என்ஐஏ கண்டு பிடித்தது.

வலை விரித்த துபாய் போலீஸ்

ஹசன் அலி, ஹாரிஸ்முகமது குறிப்பிட்ட 14 பேர் குறித்து பட்டியல் தயாரித்த என்ஐஏ அமைப்பு, அந்தப் பட்டியலை அப்படியே துபாய் போலீசாருக்கு பார்வார்டு செய்தது. ‘‘பட்டியலில் உள்ள 14 பேரும் அன்சருல்லா என்ற இயக்கத்துக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கவனம்’’ என்ற செய்தியை கவனித்த துபாய் போலீஸ், இந்த 14 பேருக்குள் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாட்ஸ் அப் பக்கத்தை கண்காணிக்கத் தொடங்கியது. அதில் சங்கேத பாஷைகளுடன், இவர்களது தகவல் பரிமாற்றத்தை புரிந்து கொண்ட துபாய் போலீசார், 14 பேரையும் அப்படியே தூக்கிச் சென்று விசாரித்தனர். இதில் 14 பேர் மீதான குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்பட்டதால், உடனடியாக அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

டில்லியில் கைது செய்த என்ஐஏ

துபாய் அரசால் தேச விரோத குற்றத்தின் கீழ் நாடு கடத்தப்பட்ட 14 பேரும், சிறப்பு விமானம் மூலம் டில்லிக்கு கொண்டு வரப்பட்டனர். டில்லி விமான நிலையத்தில் அவர்கள் 14 பேரும் கைது செய்யப்பட்டனர். மொய்தீன் சீனி சாகுல் ஹமீத், மொஹமத் இப்ராஹீம், மீரான் கனி, மொஹமத் சேக், மொஹமத் அசாருதீன், தவ்பீக் அகமத், மொஹமத் அக்சார், குலாம் நபி ஆசாத், ரபி அஹமத், உமர் பாரூக், முன்தப்சீர், பாரூக், பைசல் ஷெரீப் மற்றும் முகமது இப்ராஹிம். இவர்கள் தவிர, ஏற்கனவே கைது செய்யப்பட்ட 2 பேருடன் மொத்தம் 16 பேரும் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120 (பி), 121 (ஏ), 122, தேச விரோத சட்டத்தின்பிரிவு 17, 18 மற்றும் 18 பி, மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக போர்

கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 14 பேரும், இந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதல் நடத்துவதற்காக துபாயில் வேலை செய்து கொண்டே நிதி திரட்டியுள்ளனர். இதை துபாய்அரசு உறுதிப்படுத்திய பின்னரே, அவர்களை கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. அவர்கள் இந்தியர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதே குற்றத்தை துபாய் வாழ் குடிமகன்களாக செய்திருந்தால், சிரச்சேதம்தான் நடந்திருக்கும்.
இதுகுறித்து என்ஐஏ அமைப்பின் வக்கீல் சி.எஸ்.எஸ்.பிள்ளை கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட 14 பேரும் இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு, இதற்காகவே நிதி திரட்டியதை துபாய் அரசு கண்டு பிடித்து, உறுதி செய்துள்ளது. பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் பின்னர் இந்தியாவுக்கு விரட்டப்பட்டுள்ளனர். இந்த அமைப்பினர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில் மிகச் சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.
இந்த அமைப்பினர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில் மிகச் சரியான நேரத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்

இந்த அமைப்பினர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில் மிகச் சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

வாட்ஸ் அப் அசைன்மென்ட்

இந்தியாவுக்கு எதிராக போர் சதி திட்டத்தின் கீழ் துபாயில் கைது செய்யப்பட்ட 14 பேரும், தமிழகத்தின் தேனி, மதுரை, கீழக்கரை மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 14 பேருக்கும் நாகையில் இருந்து கட்டளைகள் பறந்துள்ளன. எங்கு, யாரிடம், எப்போது பேச வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 14 பேருக்கும், குண்டுகள் தயாரிக்க, வெடிக்கச் செய்யவும், தற்கொலைப் படை தீவிரவாதிகளாக செயல்படும் அளவுக்கு மூளைச் சலவையும் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இத்தனையையும் வாட்ஸ் அப் வழியாக செயல்படுத்திக் கொண்டிருந்ததுதான் இதில் ஹைலைட்.

என்ஐஏ சல்லடை!

டில்லியில் கைது செய்யப்பட்ட இவர்கள் 14 பேரும் அன்சருல்லா என்ற இயக்கத்தின் கீழ் செயல்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர், இவர்களது வீடுகளில் என்ஐஏ போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் மெமரி கார்டுகள், 14 சிம்கார்டுகள், பென் டிரைவ் உட்பட பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் 14 பேரின் பாஸ்போர்ட்களும் முடக்கப்பட்டுள்ளன.

அன்சருல்லா எந்த நாட்டின் இயக்கம்?

அன்சருல்லா என்பது தமிழகத்தின் தோன்றிய பெயர் அல்ல. இது ஏமன் நாட்டில் 1990ம் ஆண்டில் தொடங்கியது. ஏமன் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக, ஹூசைன் பக்ரூதீன் என்பவனால் தொடங்கப்பட்ட தீவிரவாத இயக்கம்தான் அன்சரூல்லா. அன்சர் அல்லா என்பதன் பொருள் இறைவனின் ஆதரவாளர்கள். இது சுருங்கி அன்சருல்லா ஆனது. இந்தத் தீவிரவாதிகள் ஏமன் அரசை எதிர்த்து யுத்தம் நடத்தினர். 2004ம் ஆண்டு ஹூசைன் பக்ருதீன் கொல்லப்பட்டார்.
உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கம். ஏமனில் தொடங்கிய இந்தத் தீவிரவாத இயக்கம் வங்கதேசத்தில் வளர்ந்து, வங்கிக் கொள்ளை, கொலை, கடத்தல் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது. 2010ம் ஆண்டில் இந்த அமைப்பு இந்தியாவில் பரவத் தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் இந்த அமைப் பினர் ரகசியமாக செயல்படத் தொடங்கினர். இதுகுறித்து உளவுப் பிரிவினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த சிலரை, 2015ம் ஆண்டில் மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பிஹார் மாநிலத்திலும் இந்த அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இயக்கம் அல்கொய்தாவின் முதன்மையான துணை இயக்கமாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் தாக்குதல்!

தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகளும், நடுநிலையாளர்களும், இடது சாரிகளும் அரசுக்கு எதிரான யுத்தத்தில் தீவிரமாக இருக்கும்போது, அரசின் கவனத்தை திசை திருப்பி, மீண்டும் ஒரு மாபெரும் தாக்குதலுக்கு இந்த இயக்கம் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இப்போது, ஒரு படி முன்னேறி, தாக்குதலுக்கு முன்னர் அன்சருல்லாவை தேசிய புலனாய்வு முகமை வேருடன் வீழ்த்தத் தொடங்கியுள்ளது. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மீண்டும் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் திட்டம், என்ஐஏவால் முன் கூட்டியே முறியடிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் அமைதியாக வாழும் நாடுகளை பட்டியலிட்டால், அவர்கள் ஜனநாயக உரிமையுடன் வாழும் நாடுகளைப் பட்டியலிட்டால் முதலில் இருப்பது இந்தியாவாகத்தான் இருக்கும். இப்படி, தங்களை முதன்மை மரியாதையுடன் நடத்தும் நாட்டுக்கு தீங்கு நினைக்கு குடிமக்கள் யாராக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், அவர்களை தண்டிக்க வேண்டிய கடமை என்ஐஏவுக்கு உள்ளது.

இந்த தேச துரோகிகளை அடையாளம் காண வேண்டியது மக்களின் பொறுப்பு.