Friday, April 19, 2024

சர்ச் பெண்களுக்கு மாற்றாந்தாய் - கதறும் கன்னியாஸ்திரிகள்!

WEW

‘இதோ உன் தாய்’’ என்று சர்ச்சை காட்டி தான் நான் வளர்க்கப்பட்டேன். ஆனால் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது சர்ச் பெண்களுக்கு ஒரு ‘‘மாற்றாந்தாய்’’ என்பது.

 
 

மிஷினரீஸ் ஆப் ஜீசஸ் எனும் கிறிஸ்த்துவ பிரிவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தனது 7 பக்க கடிதத்தில், ஜலந்தர் பிஷப் ஜேம்ஸ் பிரான்கோ முலக்கல் தன்னை பலமுறை கற்பழித்துள்ளதாக பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்தளவு சர்ச்மேல் நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்தளவு ஏமாந்து போனார்! முழு சர்ச் நிர்வாகங்களும் அவருக்கெதிராகவே திரும்பி தாக்கி வருகின்றன. இடிந்து போய்விட்ட அந்த அபலை பெண்ணுக்கு ஆதரவாக சக கன்னியாஸ்திரிகள் 5 பேர்கள் உதவிக்கரம் நீட்ட, மக்கள் மன்றத்தில் இந்த 5 கன்னியாஸ்திரிகளும், பாதிரி குரியகோஸ்ம் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

 

கேரள அரசு கள்ள மௌனம் காத்தது!

கேரளாவின் கம்யூனிஸ்டுகளும் கள்ள மௌனம் சாதித்தனர்! நீதிதுறை காவல் துறை என்று எங்கும் கள்ள மௌனம்

தற்போது பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை தவிர மற்ற ஐவருக்கும் வேறு வேறு இடங்களில் மாற்றம் தரப்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகளுக்கு பெரிய கலவரம் உண்டாகி விட்டது.

மக்களும் சில ஊடகங்களும் தாக்கி பேச தொடங்கிய பின்னர், அதாவது போராட்டம் தொடங்கிய 1000 நாட்களுக்கு பிறகு தான் பிரான்கோ முலக்கல் கைது செய்யப்பட்டு இரண்டே நாட்களில் பெயிலில் வந்துவிட்டான். ஜலந்தரில் அவனுக்கு தடபுடலான வரவேற்பு வேறு.

 

கொலை!

62 வயதான குரியகோஸ் எனும் பாதிரி தான் இந்த கற்பழிப்பு சம்பவத்தின் சாட்சி. பிரான்கோ முலக்கல் பெயிலில் வெளியே வந்தவுடன், இரண்டே நாளில் குரிகோஸ் பாதிரி தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 
 

மாற்றல்கள்

மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் (எம்.ஜே) எனும் கிறிஸ்த்துவ பிரிவை சேர்ந்த இந்த கன்னியாஸ்திரிகள், கேரளாவில் உள்ள குருவிளங்காடுவில் கத்தோலிக்க டயோஸிஸில் தற்போது உள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அவர்களது குடும் பத்தினருக்கும் தொடந்து, கேலை வாபஸ் பெறும்படி மிரட்டல்கள் வந்து கொண்டேயிருக் கின்றன. தற்போது பாதிக்கப்பட்ட கன்னி யாஸ்திரியை தவிர மற்ற ஐவருக்கும் வேறு வேறு இடங்களில் மாற்றம் தரப்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகளுக்கு பெரிய பயம் உண்டாகி விட்டது. நீதிமன்றங்கள் சாட்சி சொல்ல கூப்பிட்டாலும் இவர்களால் வர முடியாது. முக்கியமாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தனித்து விடப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் கேரளா முதலமைச்சர் பிணராயி விஜயனிடம் தனக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை என்றும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 
 
28ndkdr01-VijayGK24EISMG3jpgjpg

இதுவரை மௌனமே பதிலாய் உள்ளது. பல பெண்கள் அமைப்பினரும், தொண்டு நிறுவனங்களும் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தை தொடங்கியுள்ளன.

 
 
image2 (1)

பாதிரியார் பிரான்ஸிஸ் முலக்கல்லுக்கு எதிராக சாட்சி சொன்ன குரியகோஸ் கட்டுதரா எனும் 62 வயது பாதிரியார், தனது பணியிடத்திலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார் பூர் நகரின் அருகே உள்ள தசூயா எனும் இடத்தில் உள்ள கத்தோலிக்க சர்ச்சுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய இடத்தில் வந்து சேர்ந்த 15 நாட்களில் அவர் மர்மமான முறையில் இறந்து விட்டார்.

தற்போது நாங்கள் 5 கன்னியாஸ்திரிகளும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியுடன் கோட்டயம் பகுதியில் குரு விளங்காடு நகரில் உள்ள கத்தோலிக்க கான்வென்டில் தங்கி உள்ளோம். ஆனால் எங்களுக்கும் பணிமாற்ற உத்தரவு கொடுத்துள்ளனர்.

Kuriakose-Kattuthara_d

2014 மே மாதம் பிரான்ஸிஸ் முலக்கல் முதல்முதலாக தன்னை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் பலமுறை தன்னை கற்பழித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக போராடி வரும் கன்னியாஸ்திரிகள் தங்கள் உயிருக்கு பயந்து கேரள முதல்வர் பிணராயி விஜயனிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர்!

புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரி தான் தனிமை படுத்தபடுவதாகவும் தனது உயிருக்கு பாதுகாப்பு தேவை என்றும் அரசிடம் கேட்டுள்ளார்!! நீதிமன்றம் உதவுமா…