Friday, April 19, 2024

உண்மையில் ஜமால் காஸோகி யார்?

JamalKhashoggi

கொடூரமாக கொல்லப்பட்ட ஜமால் காஸோகி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வரும் வேலையில் இருந்தார்.

 

அமெரிக்காவில் தஞ்சம்!

சவுதி அரேபியாவிலிருந்து தப்பி ஒடி அமெரிக்காவில் 2017ம் ஆண்டு தஞ்சமடைந்த ஜமால் காஸோகியின் கொடூர மரணம் சவுதி இளவரசரின் ஆணைப்படிதான் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்கள் இந்த கொலையை மையபடுத்தி எழுதி வருகின்றன.

உண்மையில் யார் இந்த காஸோகி?

59 வயதான ஜமால் காஸோகி மெதினாவில் பிறந்தவர். இவரது தந்தை சவுதி நாட்டின் ஆயுத பேரர் அட்னானி காஸோகி.

பல மீடியாக்களில் வேலை பார்த்து வந்து ஜமால் காஸோகி அமெரிக்காவில் முதுநிலை பட்டம் பெற்றவர். அவரது உண்மையான பணி ‘உளவு’ என்பது தான் பலரது கருத்து.

பழமைவாதி

ஊடகங்கள் கூறுவது போல அவர் புதுமையை விரும்புபவர் அல்ல. பழமைவாத இஸ்லாமை பழைய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

வகாபிஸம்!

வகாபிஸ இல்லாம் நாடாக தான் சவுதி அரேபியா இருக்க வேண்டும். அமெரிக்கா உடனான உறவு கூடாது என்பதே அவரது உண்மையான விருப்பம்.

சவுதி அரேபிய இளவரசரின் புதிய சமுதாய மறுமலர்ச்சி, பெண் சுதந்திரம் இவற்றால் கடுப்பான ஜமால் அவரை எதிர்த்து எழுத தொடங்கியதால் தான் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஒசாமா பின்லேடன் பாசம்!

binladen

ஜமால் இறுதி வரை ஒசாமா பின்லேடனின் பிரிவை எண்ணி வருந்தினார். அவரது நெருங்கிய நண்பரும் கூட! ஒசாமாவின் கனவான ‘இஸ்லாமிய உலகத்தை’ தான் ஜமால் காஸோகியும் கண்டார். அந்த கனவை அடையும் முறைகள் தான் வேறு என்பதே உண்மை.

 

அல்-கொய்தா பாசம்!

அல்-கொய்தாவை தோற்றுவித்த அப்துல்லா அசாம் இன் நெருங்கிய நட்பு உண்டு. சவுதி அரேபியா சுதந்திரமடைந்து வருவதால், முல்லாக்களால் நடத்தப்படும் நாட்டிற்க்கு தலை நகரை மாற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

 

சவுதி அரேபிய இளவரசர்

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின்சல்மான் தமது மக்கள் சிறிது சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். போர் தவிர்த்து, இஸ்லாமிய சுதந்திர நாடாக சவுதி மலர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், ஜமால் காஸோகி வேறுபட்டு நின்றார்.

சவுதியின் பல எழுத்தாளர்கள், புரட்சிகாரர்கள் அரசுக்கு எதிராக சில கருத்துகளை சொன்னவர்கள் சிறைபடுவதும், காணாமல் போவதும் புதிதல்ல. காலம் காலமாக நடந்து வருபவை…

ஊடகங்கள் ஏன் புலம்புகின்றன..

பழமைவாத இஸ்லாமிய நாடுகளில் பலர் அரசுக்கு எதிராக பேசி, உயிரை தொலைத்து, பலர் இன்றளவு சிறையில் வாடும் போது, ஏன் இந்த ஊடகங்கள், பழமைவாத இஸ்லாமியரான ஜமால் காஸோகியை கொண்டாடுகின்றன என்பது தான் ஆச்சரியம்.

கேள்விகள் பல...

ஜமால் காஸோகி சவுதி இளவரசரை விட பத்து மடங்கு அதிக பழமைவாதி இஸ்லாமியர். ‘‘இஸ்லாமிய சகோதரத்துவம்’’ எனும் அமைப்பை சவுதி அரவணைத்து, ஹமாஸ் போன்ற அமைப்புகளுடன் கை கோர்த்து, இஸ்ரேல் நாட்டை அடியோடு அழித்து விட வேண்டும் எனும் இவரது விருப்பத்தை சவுதி இளவரசர் ஏற்காமல், கத்தார் நாடு இஸ்லாமிய தீவீரவாதிகளுடன் இணைந்திருந்ததால் அதனை விட்டு விலகினார்.

இதனால் கோபப்பட்ட ஜமால் சவுதி இளவரசரை அப்புறப்படுத்தி விட வேண்டும் என திட்டமிட்டார் எனும் கருத்தும் உள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்கும் போது இவருக்கு எப்படி அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. எப்படி ‘வாஷிங்கடன் போஸ்ட்’ பத்திரிகையில் வேலை கிடைத்தது என்பதே கேள்வி

 

இடது சாரி ஊடகங்களின் ஆதிக்கம்

அமெரிக்காவிலும் இந்த உண்டியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் தான் ஊடகங்கள் உள்ளது போலும்.

டைம்ஸ் பத்திரிகை இவரை ‘உண்மையின் காவலன்’ என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்துள்ளது தான் ஆக உச்சம்!!

இரட்டை கோபுர வெடி குண்டு நிகழ்வை நிகழ்த்திய ஒசாமா பின்லேடனை தேடி பிடித்து கொன்ற அமெரிக்க அரசு ஏன் ஜமால் காஸோகியை ஹிரோவாக்கி வேடிக்கை பார்க்கிறது என்பது தான் கேள்விகுறி…

ஜமால் காஸோகியின் பெயரில் ‘வீர பத்திரிகையாளர் விருது’ ரோடுகளின் பெயர்கள் என்று சில பத்திரிகைகளின் சத்தம். டாலர்களின் வரும்படியை கணக்கிட்டு அதிகமாக ஒலிக்கிறது.

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வது, உளகளவில் இனி சமூக வலை தளங்களில் கையில் தான் உள்ளது என்று தான் நினைக்க தோன்றுகிறது.