Friday, March 29, 2024

போதும் ராகுல்... உண்மையைப் பேசுங்கள்!

mface

ஒரே பொய்யை 10 முறை அழுத்தமாக சொன்னால், ஆணித்தரமாக சொன்னால், எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாகச் சொன்னால், அந்தப் பொய்யும் உண்மையின் உருவத்தைத் தற்காலிகமாக பெற்றுவிடும். இந்த(து) தர்மத்துக்குப் புறம்பான இந்த லாஜிக்கை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மிகவும் விடாப்பிடியுடன் பிடித்துக் கொண்டுள்ளனர்
இதன் காரணமாகவே, அனைத்துக் கட்சியினரும் இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான பிரசாரத்தை ஒரே மாதிரியாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களது பிரதான பிரசார ஆயுதம், ‘‘மோடி கார்ப்பரேட்களுக்கு ஆதரவானவர். விவசாயிகள், ஏழைகளுக்கு எதிரானவர்’’ என்பதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உட்பட அனைத்துக் கட்சியினரும் ஒரே மாதிரியாக, அச்சுப்பிழை, உச்சரிப்புப் பிழையின்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

rface

“வங்கி கடன்கள் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சியில். திரும்ப கேட்டது மோடியின் ஆட்சியில். திவால் சட்டமும், மோடி அரசின் கிடுக்குபிடியும் வங்கிகளை காப்பற்றியுள்ளன. 1947 முதல் 2004ம் ஆண்டு வரை இந்திய வங்கி கொடுத்த கடன் தொகை 18 லட்சம் கோடி 2008-2014ம் காங்கிரஸ் ஆட்யில் அதிகபட்சமான கடன் 52 லட்சம் கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.”

 
rre

காங்கிரஸ் உட்பட எதிர் கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டு நேற்று இன்று மட்டுமல்ல, நாளைக்கும் இப்படித்தான் இருக்கப்போகிறது. ‘‘கார்ப்பரேட்களுக்கு மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிகப்படியான கடன் கொடுக்கப்பட்டது. இதனால் நாட்டின் வராக்கடன் அளவு 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகிவிட்டது. கடன் பெற்றவர்கள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்கு மோடியின் நிர்வாகம் உதவிக் கொண்டிருக்கிறது’’ இதைத் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியும் சொன்னார்.

 

ஆனால், உண்மை என்ன வென்றால், காங்கிரஸ் கட்சியின் கடைசி 6 ஆண்டுகளில், நாட்டில் உள்ள வங்களில் இருந்து அதிகப்படியான தொகை தொழில் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2009-&2014ம் ஆட்சியில், காங்கிரஸ் கொடுத்த வங்கிக் கடன் குறித்து பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் விட்டு விளாசினார். மொத்தம் 70 லட்சம் கோடி வங்கிக் கடனில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மட்டும் மின்னல் வேகத்தில் கடன்கள் வளர்ந்துள்ளன என்றார்.

arun

பிரதமர் மோடியின் உண்மை பேச்சு!

mon

கடந்த ஆண்டில் போஸ்ட் பேமென்ட் வங்கியின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 2008ம் ஆண்டு வரை 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 2008 முதல் 2014ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் நாட்டில் வங்கிகள் கொடுத்த கடன் தொகை
52 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. ஆளும் கடச்சியாக இருந்த காங்கிரஸ், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்க கடன் கொடுக்க, போன் மூலம் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்த வகையில் நாட்டின் 12 பெரிய குடும்பங்களிடம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயும், மீதம் உள்ள 27 குடும்பங்கள் வசம் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வராக்கடனாக உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பாஜ ஆட்சியில் ஒரு பைசா கூட வங்கிக் கடனாக கொடுக்கப்படவில்லை. இதை எங்களால் சவால்விட்டுக் கூறிட முடியும்’’ என்றார். எதிர்கட்சிகளின் முகத்தில் கரியைப் பூசுவது போன்ற இந்தப் பேச்சுகுறித்து முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் என்று யாரும் ஒரு கருத்தும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

களையெடுக்கப்பட்ட வாராக்கடன் வழக்குகள்!

2014ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர், வங்கிகள் கடன் கொடுக்கும் நடைமுறையில் கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்தன. கொடுத்த கடனையும் திருப்பிக் கேட்கத் தொடங்கின. அப்போதுதான் 72 லட்சம் கோடி ரூபாயில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வராக்கடன்களாக மாறிவிட்டது தெரியவந்தது. இதனால், வங்கிகள் பதட்டத்தில் தத்தளித்தன.

வங்கிகள் தவிப்பு!

கொடுத்தக் கடனில் 15 சதவீதம் வராக்கடனாக மாறிவிட்ட நிலையில், வங்கிகள் நடைமுறை மூலதனத்துக்கே பணம் இல்லாமல் அல்லாடத் தொடங்கின. இதனால் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கோபத்தில் கொந்தளித்தாலும், நிலைமையை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது பொதுத்துறை வங்கிகளின் நடைமுறை மூலதனச் செலவுக்கு மத்திய அரசின் நிதியில் இருந்து பணம் வழங்கி, மக்கள் பணத்தைப் பாதுகாக்கத் தொடங்கினார்.

திவால் சட்டம்!

அதே நேரத்தில், வராக்கடன் கணக்கைப் பராமரிக்கும் நபர்களின் பொருளாதார வளத்தை ஆய்வு செய்த பிரதமர், இவர்களிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக ஐபிசி எனப்படும் வங்கிக் கடன் திவால் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதிரடி சட்டம்!

ஐபிசி சட்டம் அவரசமாக நடைமுறைக்கு வந்தது. ஜனாபதி ஒப்புதலுடன் வந்த இந்த சட்டத்துக்கு தடை விதிக்கும்படி, நூற்றுக் கணக்கான மோசடி நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத்தட்டின. ஆனால், ‘பொதுமக்கள் பணத்துடன் விளையாடும் உங்களுக்கு, இந்தச் சட்டம ஒரு பாடம்’ என்று சுப்ரீம் கோர்ட் விரட்டியது.

நொந்து நொந்து பணம் கொடுத்த நிறுவனங்கள்!

ஐபிசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்தால், எந்த ஒரு நிறுவனமும் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது. அதன் சந்தை மதிப்பு பாதிக்கப்படும் என்பதால் அலறத் தொடங்கின. இதனால், பூஷண் ஸ்டீல், எஸ்ஸார் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் உட்பட பல நிறுவனங்களும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கியில் பெற்றக் கடன்களை உடனடியாக திருப்பிக் கொடுக்க சம்மதித்தன.

இந்த வகையில், ஐபிசி சட்டத்தின் கீழ் இதுநாள் வரை 3 லட்சம் கோடி ரூபாய் அளவு வராக்கடன்கள் மீட்கப்பட்டு, வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக மத்திய பட்ஜெட் அறிவிப்பின்போது, பட்டவர்த்தனமாக அறிவித்தார் பட்ஜெட் தாக்கல் செய்த சுரேஷ்பிரபு.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்!

sd

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், வங்கிக் கடன் பெற்ற செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இருந்த விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் (இதில் கடன் 7 ஆயிரத்து 500 கோடி, வட்டி ஆயிரத்து 500 கோடி), நிரவ்மோடி 12 ஆயிரத்து 500 கோடி, ஹிதேஸ் படேல் 8 ஆயிம் கோடி என்று கடன் பெற்றனர். பிரதமர் மன்மோகன் மவுனம் சாதிக்க, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் ஆதரவுடன் கோடிகளை வாங்கிக் குவித்தனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜ்யசபா எம்பியான விஜய்மல்லையா, தன் அரசியல் செல்வாக்கில் மிதமிஞ்சிய அளவு கடன் பெற்றார். கடைசியாக நிரவ்மோடி, 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், போலியான வணிகக் கடிதங்கள் தாக்கல் செய்து 12 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்றார். இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில், வழங்கப்பட்ட கடன் தொகை. இதை காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கே மறுக்க முடியாது.
மாநிலத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த சந்தேசரா சகோதரர்கள் மற்றும் அவரது மைத்துனர். இவர்களும் பல்லாயிரம் கோடிகளுடன் தப்பிச் சென்றனர்.

 

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றனர்.

ஆனால், தேசத்தின் ‘சவ்கிதார்’ மோடி, தப்பிச் சென்றவர்களை விடுவதாக இல்லை. இன்டர்போல் உதவியுடன் வளைத்துப் பிடிக்கத் தொடங்கினார். சவ்கிதாரின் சவுக்கடியில் விஜய் மல்லையா, நிரவ்மோடி லண்டனில் கைதாகி சிறையில் உள்ளனர். சந்தேசரா சகோதரர்களில் நிதின் சந்தேசரா நைஜீரியாவில் சிக்கியுள்ளார். இன்னும் இந்தப் பட்டியல் நீளும் என்கிறது மத்திய அரசும், அமலாக்கத்துறையும்.

இன்னும் ஏன் பொய் பிரசாரம்!

இப்படி பொருளாதார குற்றவாளிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி விளக்குப்பிடித்துக் கொண்டிருக்க, ‘சவ்கிதார்’ என்று பிரதமர் மோடியை ராகுல் கிண்டலடித் தார். ஆமாம், நான் சவ்கிதார்தான். நாட்டின் சவ்கிதார்தான் என்று மோடி பதிலடி கொடுத்தார். தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் மட்டுமல்ல, அதன் கடைசித் தொண்டனும், கூட்டணியான திமுகவும் சேர்ந்தே மோடியின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, பொய்யை உண்மையாக்குகின்றன. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். உண்மை உறங்கிக் கொண்டிருக்கும் வரை, ராகுல், ஸ்டாலின், கனிமொழி உட்பட பலரும் வேஷம்போடலாம். ஆனால், உண்மை விழித்துக் கொண்டால், ஜமீன் குடும்பங்கள் போல் வாழ்பவர்கள் எல்லாம், ப.சிதம்பரத்தைப் போல் ஜாமீன்தாரர்களின் குடும்பங்களாக வாழத் தொடங்க வேண்டியிருக்கும்.

நாடும், மக்களும் மோடியின் பக்கம்.