Thursday, October 06, 2022

காங்கிரஸ் கட்சியின்

பொய், பித்தலாட்டங்கள்!

பெஃரோஸ்கான்

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் முழங்கினார். ஆனால், அதே ஜனவரி மாதத்தின் 24ம் தேதி அவர் பயணம் செய்த விமானம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மோதிய விபத்தில், மர்மமான முறையில் பலியானார்.

 

முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பெரோஸ்கான் காண்டி, ஒரு இஸ்லாமியர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்திராவால், தன் பிரதமர் பதவிக்கு சிக்கல் வரும் என்று பயந்த ஜவஹர்லால், பெரோஸ்கான் காண்டியை, பெரோஸ்கான் காந்தி என்று மாற்றம் செய்தார். நேரு குடும்பத்தின் இந்திய அரசியலில் ஏமாற்றுதல் என்ற 2வது அத்தியாயத்தை சிறப்பாகத் தொடங்கிவைத்தார் இந்திரா காண்டி என்ற இந்திரா காந்தி.

indira

எத்தை தின்னால்...

பெயர், இனத்தில் மட்டுமல்ல, தனக்கு அதிகாரப் பசி வந்துவிட்டால், யாரையும், எதையும் பலி கொடுக்க அஞ்சாத கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் அரசியல் விளையாட்டுகள், அவ்வளவு எளிதில் யாரையும் சந்தேகப்பட வைக்காது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, காங்கிரஸ் கட்சியின் முடிச்சவிக்கித் தனமும் மெல்ல வெளிப்படும்.

மன்மோகன்சிங்

delhi

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டால், அது ஆட்சிக்கு வருவதற்காக பெரிய அளவில் நாடகமாடும். பெரும்பான்மை உள்ள கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக கூறும். இதன்பின்னர் குள்ள நரித்தனத்தை அரங்கேற்றும். 1991&96 காங்கிரஸ் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதி அமைச்சர். ஆனால், இந்த நிதி அமைச்சர் 1985ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, துரத்தியடித்த பெருமை ராஜீவ் காண்டிக்கு போய் சேரும். இவர்கள் இப்போது செய்யும் நாடகத்துக்கு, சமீப காலத்திய குருநாதர் ராஜீவ்காண்டி.

 

வாஜ்பாயின் உதவி!

இதன்பின்னர், 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தது. திமுக, தமாக உட்பட பிராந்திய கட்சிகளை ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு வந்த வாஜ்பாய் ஆட்சியை 16 நாளில் கவிழ்த்தது காங்கிரஸ்.

” தனக்கு அதிகாரப் பசி வந்துவிட்டால், யாரையும், எதையும் பலி கொடுக்க அஞ்சாத கட்சி காங்கிரஸ்.”

இதன் பின்னர் பொம்மை பிரதமர்களை நியமித்து, ஆட்டுவிக்கத் தொடங்கியது. தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் என்று ஆட்டம் கண்ட ஆட்சியை நேரம் பார்த்து கவிழ்த்தது காங்கிரஸ். 1998 ம் ஆண்டு மீண்டும் வாஜ்பாய் பிரதமராக, மறுபடியும் ஆட்சிக் கவிழ்ப்பு. 1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பீகாரின் ஜனதா கட்சி உட்பட பல்வேறு கட்சிகளுடன் உதவியுடன் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் பாகிஸ்தானின் கார்கில் போர் ஆகும். 1999ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய போர் 1999ம் ஆண்டு ஜூலை வரை நீடித்தது. இந்தியத் தரப்பில் 527 வீரர்கள் தங்கள் இன்னுயிரை தாய் நாட்டுக்காக தியாகம் செய்தனர். போர் நடைபெற்ற காலத்தில் நாடு முழுவதும் இருந்து பல நூறு கோடி ரூபாய், மக்கள் பணம் ராணுவ வீரர்கள் நல நிதிக்கு அனுப்பப்பட்டது.

கார்கில் போர்!

கார்கில் வெற்றியுடன் லோக்சபா தேர்தலிலும் வெற்றிபெற்று, வெற்றியின் நாயகனாக அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக, பதவியேற்றார். நாட்டின் வளர்ச்சிக்காக 4 வழிச்சாலைத் திட்டம் உட்பட பல முன்னேறியத் திட்டங்களைக் கொண்டு வந்தார். இடையே, தேசிய முற்போக்கு கூட்டணியில் அதாவது வாஜ்பாய் அரசில் ராணுவ அமைச்சராக இருந்த, ஜனதா கட்சியைச் சேர்ந்த பீகார் எம்பி ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ் மீது, அப்போதைய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒரு கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

 

ராஜீவ்காண்டியால் ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பொருளாதார புலி மன்மோகன்சிங்கை பொம்மை பிரதமராக்கி, பொம்மலாட்டத்தை தொடங்கி வைத்தார் சோனியா காண்டி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஒரு பொய்யை வைத்து ஆட்சியில் இருந்தனர். எதிராளியை வீழ்த்துவதற்கு உண்மை தேவையில்லை. ஒரு பொய் போதும் என்று நிரூபித்தனர்.

oldmanpic

ராணுவ சவப்பெட்டி ஊழல் என்ற பொய் குற்றச்சாட்டு!

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக ராணுவ சவப்பெட்டிகள் வாங்கியதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் மோசடியும், ஊழலும் செய்ததாக குற்றம் சாட்டினர். கிட்டத்தட்ட 2 லட்சம் டாலர் அளவுக்கு மோசடி செய்ததாக அபாண்டமாக குற்றம் சாட்டினர். அன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஊழல் பேசப்பட்டது. வெளிப்படையான விவாதத்துக்குத் தயார் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்தும், அதை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஜக தொடர் வெற்றி!

இந்நிலையில், 2003ம் ஆண்டில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றிபெற, அது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. தேசத்தின் கட்சியாக இருந்த காங்கிரசை, குடும்பத்தின் சொத்தாக மாற்றிய சோனியா, தனக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கை கோர்த்தார்.

பொய் பிரச்சாரம்!

SinghLiveMint

‘ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் சவப்பெட்டித் தயாரித்தால், அதிலும் கூட ஊழல் செய்பவர்கள் தேசிய முற்போக்கு கூட்டணியினர். அவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால், நாளை நாட்டையே விற்றுவிடுவார்கள்’ என்று லோக்சபா தேர்தல்களில் பொய் பிரசாரம் செய்தார். இதை பொய் பிரசாரம் என்று சொல்வதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன் ஒரே பொய்யை 10 முறை சொன்னால், அது உண்மையாகிவிடும். அதே பொய்யை 10 பொய்யர்கள் சேர்ந்து சொன்னால், அது வரலாற்றிப் பதிவாகிவிடும் என்ற உண்மை அப்போதுதான் உரைத்தது.

 

2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், சோனியாவின் நரித்தந்திரம் பலித்தது. வாஜ்பாய் பிரதமர் பதவியை இழந்தார். காங்கிரஸ் கட்சியில் சரியான நிர்வாகிகள் இல்லாத நிலையில், பொருளாதார மேதை சிதம்பரத்தை நம்பாமல், ராஜீவ்காண்டியால் ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பொருளாதார புலி மன்மோகன்சிங்கை பொம்மை பிரதமராக்கி, பொம்மலாட்டத்தை தொடங்கி வைத்தார் சோனியா காண்டி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஒரு பொய்யை வைத்து ஆட்சியில் இருந்தனர். எதிராளியை வீழ்த்துவதற்கு உண்மை தேவையில்லை. ஒரு பொய் போதும் என்று நிரூபித்தனர்.

ஊழல் வழக்கு!

இடையே, ஆட்சிக்கு வந்ததும் 2006 ஆண்டில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 8 கோடி ரூபாய் சவப்பெட்டி ஊழல் நடைபெற்றதாக கூறி 2006ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். 1988ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் வழக்குத் தொடர்ந்தனர். பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் 120 பி (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ் மற்றும் 3 மூத்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2009ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ராணுவ அதிகாரிகளின் திண்டாட்டம்!

இந்த வழக்கு விசாரணையின்போது மூத்த ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் அருண்ராய், கர்னல் எஸ்.கே.மாலிக், எப்.பி.சிங் ஆகியோர் அலைகழிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நடைபெற்றது இந்த வழக்கு. இந்த வழக்கில் ஊழலுக்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ அறிக்கைத் தாக்கல் செய்தது. இதன் பின்னர் இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மீண்டும் அதேபோல் ஒரு பொய்!

ஏறக்குறைய, அதேபோன்று ஒரு ராணுவப் பிரச்னையை காங்கிரஸ் கையில் எடுத்து விளையாடத் தொடங்கியுள்ளது. சமீப ஆண்டுகளில் குறிப்பாக 2017ம் ஆண்டு தொடக்கத்தில் (மோடி அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர்) இருந்தே காங்கிரஸ் கட்சி கையில் எடுத்த விஷயம் ராபேல் போர் விமானங்கள். ஒன்று அறிவாளியாக இருக்க வேண்டும், அல்லது அறிவாளிகளோடு இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதும் துரோகிகள், விரோதிகள் கூட்டத்துடன்தான் இருக்கும் என்பது பொதுவான நியது.

 

ரபேல் விமானங்கள்!

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ராபெல் விமான நிறுவனத்துடன், 2009ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலகத்தில் செய்து கொள்ள ஒப்பந்தத்தைவிட, கூடுதல் விலைக்கு போர் விமானங்களை வாங்கிடுவதற்கு மோடி அரசு சதி செய்துள்ளது. இதனால், 540 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய விமானங்களுக்கு கூடுதலாக ஆயிரம் கோடி கொடுத்து, ஒரு விமானத்தை ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான விலையில் வாங்கத் திட்டமிடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதில், ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு, மத்திய அரசு ஆதாயம் தேடிக் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியது.

rocketpic

உண்மை என்ன?!

ஆனால், 2007ம் ஆண்டில் தான் மேற் கொண்ட ஒப்பந்தம், ராபெலின் அடிப்படை மாடல் என்பதையும், பரிசோதனை நிலையில் பேசப்பட்ட விலை என்பதையும் காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. ராபெல் விமானத்தின் முழு வடிவம் வெளிவந்த நிலையில், ஒரு விமானத்தின் விலை சராசரியாக 2 ஆயிரம் கோடியாக ராபெல் நிர்ணயம் செய்தது. இந்த விலையில்தான் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தலா 2 டஜன் விமானங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளன.

ஸ்பெஷல் சலுகை விலை!

ஆனால், பிரதமர் மோடி நேரடியாக பிரான்ஸ் சென்று, அந்நாட்டின் அதிபரையும், விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். இதனால், இந்தியாவுக்கு மட்டும் ஒரு விமானம் ஆயிரத்து 600 கோடிக்கு விற்பனை செய்ய ராபெல் ஒப்புக் கொண்டுள்ளது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், பிற நாடுகளின் ராபெல் விமானங்களின் ரேடார் 180 டிகிரியில் செயல்படும் என்றால், இந்தியாவுக்கு வழங்கும் விமானங்களில் 360 டிகிரி சுழல் ரேடார்கள், 15 ஆண்டுக்கான பராமரிப்பு ஆகியவற்றை தாங்கள் ஏற்பதாக டஸ்ஸால்ட் ராபெல் நிறுவனத்தினர் அறிவித்தனர்.

விஷ பிரச்சாரம்!

ஆனால், காங்கிரஸ் 2003ம் ஆண்டு மேற் கொண்டதைப் போன்ற ஒரு பிரசாரத்தை திட்டமிட்டே தொடங்கியது. நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பாஜக மிகப் பெரிய அளவில் மோசடி செய்கிறது. ராபெல் விமானங்கள் வாங்குவதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்து, தேசத்தின் பாதுகாப்புடன் விளையாடத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் பப்பு ராகுலும், அவரது தாய் சோனியா காண்டியும் வாய் கூசாமல் அடித்துவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

அதற்கு ஏற்றார்போல், காங்கிரஸ் வால்பிடித்த அனைத்துத் தலைவர்களும் பொய்யை வழிமொழிந்து, அதை உண்மையாக்கும் செயலில் ஈடுபட்டனர். பிரசாந்த்பூஷண் போன்ற வக்கீல்கள் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, ‘ராபெல் ஆவணங்களை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

குட்டு!

கோர்ட் உத்தரவுப்படி ராபெல் குறித்த ஆவணங்களை, ஒரு உறையில் இட்டு சீல் வைத்து மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களைப் படித்த நீதிபதிகள் கடந்த 14ம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு சரமாரியாக குட்டு வைத்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, ராபெல் விமானத்துக்கு எதிரான வழக்குகைளத் தள்ளுபடி செய்து…கீழ் கண்ட கேள்விகளை முன்வைத்தது.
* நாட்டின் முன்னாள் மத்திய அரசான காங்கிரஸ், தேசத்தின் பாதுகாப்பை முன் வைத்து அரசியல் செய்யும் அளவுக்குத் தாழ்ந்துபோய்விட்டதா?
* இந்த வழக்கில், ராபெல் போர் விமான பேரத்தில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் வணிக ரீதியிலான பலன் பெறுவதற்கான வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.
* விலை மதிப்பீட்டு விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பது கோர்ட்டின் வேலை அல்ல. (காங்கிரஸ் கூட்டணி அரசு நிர்ணயித்த விலை, பாரதீய ஜனதா கூட்டணி அரசு நிர்ணயித்த விலை ஒப்பீடு)
* ராபெல் போர் விமான கொள்முதல், விலை நிர்ணயம், உடன் இணைந்து பணியாற்றும் கூட்டாளி நிறுவன தேர்வு ஆகியவற்றில் கோர்ட்டு தலையிடுவதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை.
* இந்திய விமானப்படையில் ராபெல் போர் விமானம் போன்ற 4ம் தலைமுறை மற்றும் 5ம் தலைமுறை விமானங்கள் சேர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இதில் சந்தேகம் இல்லை. விமானத்தின் தரம் குறித்த கேள்விக்கு இடம் இல்லை.
* ராபேல் போர் விமான கொள்முதலில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் எல்லா அம்சங்களையும் பேரத்தில் தெளிவுபடுத்தி உள்ளனர். இதில் கோர்ட்டு தலையிடுவதற்கு எந்த காரணத்தையும் நாங்கள் கண்டறியவில்லை.
* ராபெல் போர் விமான பேரம், 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டபோது யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை.
* 36 ராபெல் விமானங்களை வாங்குங்கள் என்றோ, 126 ரபேல் விமானங்களை வாங்குங்கள் என்றோ மத்திய அரசை கோர்ட்டு கட்டாயப்படுத்த முடியாது. அது மத்திய அரசின் முடிவை பொறுத்தது.
* கோர்ட்டு ஆய்வின் முன் சில சவால்கள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை நாங்கள் மனதில் கொள்ள வேண்டியது இருக்கிறது. ராபெல் போர் விமானங்கள் கொள்முதல் என்பது நாட்டின் இறையாண்மைக்கு முக்கியமானதாகும். அதில் தலையிடுவதற்கு நீதித்துறைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம்தான் இருக்கிறது.
* இதில் டெண்டர் என்பது சாலைகள் அமைப்பதற்கோ, பாலங்கள் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கோ அல்ல. இது போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை கோரியது ஆகும்.
* அது சட்ட விரோதமானது, பகுத்தறிவுக்கு புறம்பானது, சரி இல்லாதது என்ற 3 நிலைகளில் மட்டும்தான் கோர்ட்டு ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
* ராபெல் போர் விமான கொள்முதல் நடவடிக்கையில், உண்மையிலேயே சந்தேகப்படுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என்று நாங்கள் திருப்திகொள்கிறோம் என்று தீர்ப்பளித்துள்னர்..

என்ன செய்ய போகிறோம்!

இப்போது, நம்முன் இருக்கும் கேள்வி ஒன்றுதான். 2003ம் ஆண்ட காங்கிரஸ் மேற் கொண்ட பொய் பிரசாரத்தால் நாடு 10 ஆண்டுகள் பட்ட இன்னல்கள், சந்தித்த ஊழல்கள் எண்ணற்றவை. மீண்டும் அப்படியொரு பிரசாரத்தை நம்பி, பொய்யான கட்சியின் பிரசாரத்தையும் நம்பி நாட்டை மீண்டும் ஊழல்வாதிகளுடன் ஒப்படைக்கப் போகிறோமா? என்பதுதான்.

ராணுவத்தை மதிக்காத காங்கிரஸ்!

கட்டுரையின் ஒரு இடத்தில் சவப்பெட்டி ஊழலில் பொய் பிரசாரம் செய்த காங்கிரஸ் என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆம், தேசத்தையும், ராணுவ வீரர்களையும் காங்கிரஸ் எப்போதும் மதித்தது இல்லை. இப்போது 2வது முறையாக ராபெல் விமான பிரச்னையில் தேசத்தின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளது இந்தக் காங்கிரஸ் கட்சி. என்ன செய்யப்போகிறீர்கள் வாக்காளர்களே?