Wednesday, April 24, 2024

முகிலன்... போராளியின்

கருப்பு பக்கம்...

சமூக ஆர்வலர் என்றாலே, இப்போதெல்லாம் பெண்கள் நாலு அடி பின்னால் நின்று கொண்டு, என்ன, ஏதுவென கேட்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கிய முகிலனை நம்பி, அவன் பின் சென்ற மக்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கியதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

2019

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக, பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட முகிலன், எழும்பூரில் இருந்து ரயிலில் புறப்பட்டபோது மாயமானார். இதற்கு முக்கிய காரணம், பிப்ரவரி 16ம் தேதி நடைபெறவிருந்த கட்டப் பஞ்சாயத்து ஒன்றை முகிலன் எதிர் கொள்ள வேண்டியிருந்ததே. இதற்கும், முகிலனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம்? சமூக போராளி என்றாலும், முகிலன் தன்னுடன் களத்தில் இறங்கிய போராடிய பெண்ணை, கட்டாயப்படுத்தி, வல்லுறவு கொண்டு துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், முகிலனின் நண்பர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடம் முறையிட, இதுகுறித்த விசாரணை பிப்ரவரி 16ம் தேதி சென்னையில்

நடைபெறவிருந்தது. இந்த பஞ்சாயத்தில் முகிலன் கலந்து கொண்டே தீரவேண்டும், பாதிக்கப்பட்ட பெண் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று முகிலனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், ரயில் பயணத்தின்போதே முகிலன் கம்பி நீட்டினார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது.

உடனே, ‘வேதாந்தா நிறுவனம் முகிலனை கொன்று புதைத்துவிட்டது. மத்திய அரசு ஆள் வைத்து முகிலனை போட்டுத் தள்ளிவிட்டது. பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன் இங்கிருக்க, இங்கிருந்த முகிலன் எங்கே?’ என்று டுமில் போராளிகள் போஸ்டர் யுத்தம் நடத்தத் தொடங்கினர். இதற்கிடையே, முகிலனின் மனைவியும் தன் பங்குக்கு கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாரும் விசாரணையைத் தொடங்கினர்.

‘‘முகிலன் உயிருடன்தான் உள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளது’’ என்று போலீசார் கோர்ட்டில் திட்டவட்டமாக கூறினர். அத்துடன், முகிலனை நெருங்கிவிட்டோம் என்று கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இந்தப் பரபரப்புக்கு இடையேதான், திருப்பதி ரயில் நிலையத்தில் போலீசார் பிடித்துச் செல்வது போன்ற வீடியோக்கள் செய்திகளில் ஒளிபரப்பானது. போலீசாரும் முகிலனை கைது செய்தனர்.

சரி, மாயமான நாட்களில் அவர் எங்கிருந்தார்? ரொம்ப சிம்பிள், தன் மீதான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டு, தானே தலைமறைவாகிவிட்டார். ஆனால், அவர் தலைமறைவானது அவரது மனைவிக்குத் தெரியும் என்றும், தொடர்ந்து போனில் பேசிக் கொண்டுதான் இருந்துள்ளார் என்கின்றனர் ஆந்திர போலீசார் ஆதரங்களுடன்.

தலைமறைவான முகிலன், எப்படி போலீஸ் பிடியில்? கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்துள்ளார். ரயில்வே போலீசார் முகிலனை கொத்தாக தூக்கிச் சென்றுள்ளனர்.

“அவர் தலைமறைவானது அவரது மனைவிக்குத் தெரியும் என்றும், தொடர்ந்து போனில் பேசிக் கொண்டுதான் இருந்துள்ளார் என்கின்றனர் ஆந்திர போலீசார் ஆதரங்களுடன்.”

ஆக, அவர் நானும் ரவுடிதான் என்ற வடிவேலு ஸ்டைலில், ‘பதுங்கி வாழ்ந்தது போதும், பொங்கிப் போய் ஆஜராவோம்’ என்று வாண்டடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

‘என் கணவரை போலீசார் அடித்துக் கொல்லப் பார்க்கின்றனர்’ என்று முகிலன் மனைவியும் தன் பங்குக்கு மிகப் பெரிய டிராமாக்களை எல்லாம் அரங்கேற்றியுள்ளார். தானாகவே மறைந்து வாழ்ந்துவிட்டு, தானாகவே வெளிச்சத்துக்கு வந்த முகிலனை எப்போது போலீசார் பிடித்துச் சென்றனர்? அதுவும் ஆந்திர போலீசார்? முகிலனைப் பொறுத்தவரை, தன் மீது குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம், இப்படி தலைமறைவாகிவிடுவார் என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள்

இப்படி பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் கெட்ட நபரைத்தான், நம் தமிழ் போராளிகள், சூழியல் போராளிகள் என்று கொண்டாடுகின்றனர். ஆனால், இந்த சூழியல் போராளிக்கு விரைவில் சிறை வாசம் இருக்கிறது. இதற்குக் காரணம், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், தேச விரோத பேச்சுக்காக கடந்த 29ம் தேதி கரூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த முகிலின் திமிர் பேச்சு இது…‘‘தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது. தமிழகத்தின் உரிமைக்கான போராட்டத்தை, தமிழ் மொழியை காக்கின்ற போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று அரசு நம்புகிறது. அது நடக்காது. இந்தியாவில் இருந்து விடுதலை பெறுவதுதான் தமிழினத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறை. அரசின் அடக்குமுறைக்கு அஞ்சி எங்களது போராட்டம் ஓயாது’’ என்று பேசியுள்ளார்.

வா… ராசா வா… உன்னைப் போன்ற ஆளுங்களுக்குத்தான் என்ஐஏ ரொம்ப ஸ்ட்ராங்கா வந்திருக்கப்பு…