அமைதியை நோக்கி
உக்ரைன் – ரஷ்யா யுத்தம்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முதல் முறை, 2வது முறை மற்றும் 3வது முறை பதவிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி ஏதோ ஒரு அதிர்வெடியை வெடிக்கச் செய்து கொண்டே இருக்கின்றனர். இந்த வகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவான 370 நீக்கம், ராமர் கோயில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி என்று ஆகஸ்ட் 5ல்தான் நடந்தது.
மோடியின் நிர்வாகம் 3வது முறையாக பதவிக்க வந்துள்ள நிலையில், தனியாக 240 சீட்களும், கூட்டணியாக 293 சீட்களும் பெற்றுள்ள நிலையில், இந்தமுறை எந்த ஒரு தீர்மானத்தையும் கொண்டுவந்து, சட்டமாக்கிட முடியாது, அந்தத் தீர்மானம் எதிர்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் என்று ஜூன் மாதத்தில் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், ஆகஸ்ட் என்றால் அதிரடிதான் என்று சொல்லும் வகையில் கடந்த 8ம் தேதி, பார்லிமென்டில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வக்ப போர்டு திருத்தச்சட்டம் 2024ஐ தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உட்பட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. 2 நாட்கள் அவையை முடக்கின.
காரணம் என்ன?
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது தேசம் கடந்து சென்ற முஸ்லிம்களின் சொத்துக்களை நிர்வாகம் செய்யப்பட்ட உருவாக்கப்பட்ட வக்ப் அமைப்புக்கு காங்கிரஸ் அரசில் மெல்ல மெல்ல கொம்பு சீவிவிடப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் மதம் சார்ந்த நற் காரியங்கள், கல்வி, சமூக வளர்ச்சிக்காக வக்ப் போர்டுக்கு சொத்துக்களை வழங்கலாம். இதை போர்டு நிர்வாகம் செய்யும் என்பது விதி. ஆனால், 2004 -14ல் ஆட்சி செய்த மண்மோகன் சிங் தலைமையிலான பொம்மை ஆட்சியின் நிர்வாகத்தில், சோனியா தலைமையிலான நிர்வாகம் வக்ப் போர்டுக்கு வானாவிய அதிகாரத்தை வழங்கியது. கண்ணில் பட்ட சொத்துக்களை எல்லாம் வக்ப்போர்டு தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடடத் தொடங்கியது. அம்பானியின் வீடே வக்ப் போர்டு சொத்து என்று தமிழகத்தின் முஸ்லிம் அரசியல்கட்சித் தலைவர் ஒருவர் கூறியது, இங்கு நினைவுபடுத்த வேண்டிய விஷயம். திருச்சி அருகே திருச்செந்துறை கிராமத்தின் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோயிலும், அதன் சொத்துக்களும் 1954க்கு பின்னர் உருவாக்கப்பட்ட வக்ப் போர்டுக்கு சொந்தம் என்று மார்தட்டி, பதிவுத்துறையில் கடிதம் கொடுத்தது. ஆணவத்தின் உச்சம் எனலாம்.
மத்திய பிரதேச ஐகோர்ட்டில் வக்ப் போர்டு தொடர்பான விவாதம் ஒன்றில், ‘‘ஒவ்வொரு நாளும் ஏன் புதுப்புது நோட்டீஸ் பிறப்பிக்கிறீர்கள். ஒட்டு மொத்தமாக நாடே வக்ப்போர்டுக்கு சொந்தம் என்று அறிவிக்க வேண்டியதுதானே’’ என்று நீதிபதி ஒருவர் கடுப்பாகி கேள்வி கேட்கும் அளவுக்கு வக்ப் அட்டூழியம் அதிகரித்துள்ளது. தாறுமாறாக ஓடும் வக்ப் குதிரைக்கு கடிவாளம் போடும் வகையில்தான் இந்த புதிய சட்டத் திருத்தத்தை கிரண்ரிஜ்ஜூ தாக்கல் செய்தார்.
வக்ப் முக்கிய திருத்தங்கள் என்ன?
சில எம்பிக்கள் சீட்கள் பற்றாக்குறையாக உள்ளதால், சட்டங்கள் நிறைவேற்றுவதில் மோடி அரசு தயங்கும் என்ற பிம்பத்தை உடைப்பதற்காக இந்த சட்டத்தை திட்டமிட்டபடி மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 40 விதமான திருத்தங்கள் இந்த சட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ளன. வக்ப் போர்டு வழக்கம்போல் செயல்படும். ஆனால், முன்னதாக வக்ப் சட்டம் என்பது முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று குறிப்பிடவில்லை. இந்த ஒரு பாயின்ட்டை கையில் வைத்துக் கொண்டுதான், வக்ப் போர்டு என்ற ஆக்டோபஸ் எல்லோரின் சொத்துக்களையும் தனது என்று உரிமை கொண்டாடியது. முதலில் இந்தப் பல் பிடுங்கப்படும்.
முஸ்லீம் அல்லாதவரின் சொத்துக்களை..
இதன்படி, முஸ்லிம் அல்லாதவரின் சொத்துக்களை வக்ப் போர்டு இனி உரிமை கோர முடியாது. இனி அப்படி உரிமை கோரினால், வக்ப் ட்ரிப்யூனல் மட்டுமின்றி சிவில் கோர்ட்கள் வழியாக தீர்வு காணப்படும். அரசு சொத்துக்களை கோர முடியாது என்பது மட்டும் குறிப்பிட்டுள்ளதை மாற்றி, ஆர்க்கியாலஜிகள் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொல்லியல்துறையின் சொத்துக்களையும் கோர முடியாது என்பதையும் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கை.
வக்ப் சட்டப் பிரிவு 6 Person Aggrieved என்பதை உடனடியாக மாற்றி பழையபடி Person intereted என்று குறிப்பிட வேண்டும். இதன் மூலம் இந்துக்கள் மட்டுமல்ல முஸ்லிம்களின் சொத்துகளை கூட அவர்களாக விருப்பப்பட்டு கொடுக்காமல், வக்ப் போர்டு உரிமை கோர முடியாது. வக்ப் போர்டு முறையீட்டு தீர்ப்பாயம் முஸ்லிம்களின் பிரிவுகளான சுன்னி, ஷியா, அகமதியா போன்றவற்றைக்கு இடையில் இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே தீர்த்து வைக்கும். அதுவும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அரசு அதிகாரி (கலெக்டர், மாவட்டநீதிதி போன்றவர்கள்) கண்டிப்பாக இடம் பெறவேண்டும், அவர்கள் ஒப்புதல் பெறவேண்டும்.
இந்திய சட்டப்பிரிவு 323 மற்றும் 324ன்படி, குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டுமே தீர்ப்பாயத்தை அமைக்க முடியும், வக்ப் அல்லது மத சம்மந்தமான தீர்ப்பாயங்கள் அமைக்க முடியாது. இதன்படி, வக்ப் தீர்ப்பாயங்கள் முஸ்லிம் மதம் தனிப்பட்ட முறையில் இயங்கி தீர்த்து கொள்ள, சட்ட திருத்தம் வேண்டும், அதில் ஒருவருக்கு (இஸ்லாமிய சாதிகளில் ) அபிப்ராய பேதம் வந்தால், சிவில் கோர்ட் தீர்வுகாணும் வகையில் மாற்றம் வந்துள்ளது. அத்துடன், இப்போதுள்ள வக்ப் போர்டு சொத்துக்கள், பிரச்சனைகள் உள்ள சொத்துக்களை 6 மாதத்தில் வரையறை செய்து, இறுதி செய்ய வேண்டும். சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரம் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைக்குழு என்ன செய்யும்?
ஒன்றும் செய்யாது… காரணம், வக்ப் போர்டின் இப்போதைய நடைமுறை சட்டங்கள், விதிகள் எப்படிப்பட்டவை என்பதை திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளின் எம்பிக்களும் அறிவார்கள். மனசாட்சி என்று ஒரு விஷயம் இருக்குமானால், சத்தியம், தர்மத்தை பின்பற்றி எம்பிக்கள் உறுதிமொழி எடுத்திருப்பார்கள் என்றால், அடுத்தவர்கள் சொத்துக்கு உரிமை கொண்டாடும் வக்ப் போர்டின் தவறான செயல்பாடுகளுக்கு முடிவுகட்டுவதற்கு முன்வந்திருப்பார்கள். ஆனால், ஓட்டு வங்கி அரசியலை நடத்தும், காங்கிரஸ் திமுக உட்பட எதிர் கட்சிகளால் இப்போது இந்தச் சட்டம் பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 எம்பிக்கள் கொண்ட பார்லிமென்ட் குழு இந்த சட்டத்தை ஆய்வு செய்துவருகிறது. முதலாவதாக இந்த சட்டம் சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி கொண்டு வரப்பட்டுள்ளது. மாபியா கும்பல்கள் பிடியில் இருந்து வக்ப் சொத்துகளை மீட்பதே இதன் பிரதான நோக்கம் என்று மத்திய அரசு அறிந்துள்ளது, இந்த சட்டத்துக்கான எந்தத்தடையும் இருக்காது என்பதை மறைமுகமாக சொல்லும்வகையில் உள்ளது.
ஆகஸ்ட் 15ல் அடுத்த சரவெடி…
வக்ப் சட்டத்தை வைத்தே தன் 3வது ஆட்சிமுறை தொடக்கத்தின் அத்தியாயம் எப்படி இருக்கும் என்பதை சொல்லாமல் சொன்ன பிரதமர் மோடி, ஆகஸ்ட் 15ல் செங்கோட்டையில் சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து பேசிய பேச்சுக்கள் இன்னும் பல அதிரடிகளுக்கு நாடும், எதிர் கட்சிகளும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை சொல்லாமல் சொல்லியது.
எப்பவும் நான் ராஜா
சில எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், உள்நாட்டில் மோடியின் செல்வாக்கையும், சொல்வாக்கையும் குறைத்து, மூலையில் உட்கார வைத்துவிடலாம் என்று எக்காளமிட்ட எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சொல்லாமல் சொன்ன ஒரே விஷயம், நேற்று இல்லை, இன்று இல்லை, நாளைக்கும் நான்தான் ராஜா என்பதுதான். இதேநேரத்தில், வங்கதேச பிரச்சனையை மையப்படுத்தி, இந்தியாவுக்கு பீதியூட்டலாம் என்று திட்டமிட்ட அமெரிக்கா, சீனா உட்பட வல்லரசு நாடுகளுக்கும் சேர்த்தே பிரதமர் மோடி ஒரு செய்தியை சொல்லிவிட்டார். அதாவது ரஷ்யா, போலந்து மற்றும் உக்ரைன் பயணங்கள் வழியாக…
டிரம்ப்
அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலாஹாரீஸ் இடையே நேரடி மோதலும், செல்வாக்கும் சமமாக வளர்ந்து வரும் நிலையில், டிரம்ப்பின் வெற்றி ஒரு சதவீதம் இந்தியாவுக்கு சாதகமாகவும், கமலாஹாரிசின் வெற்றி 50 சதவீதம் இந்தியாவுக்கு பாதகமாகவும் இருக்கும் என்பது நிதர்சனம். காரணம், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஜார்ன் சோரஸ் கும்பலுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் கமலாஹாரீஸ் உள்ளார் என்பதுதான்.
ஒருபுறம் அமெரிக்காவுடன் நட்பு பாரட்டிக் கொண்டே, மறுபுறம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை, நிலக்கரி, உரம், போர் தளவாடங்கள் என்று பல்வேறு இனங்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா, மேற்கு நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது.
திகைக்க வைத்த ராஜதந்திரம்…
உக்ரைன் – ரஷ்யா மோதல் 2022 பிப்ரவரியில் தொடங்கியது முதல், இந்த 2 நாடுகளுக்கும் மத்தியில் சமாதானம பேசுப்போவது யார் என்ற பில்லியன் டாலர் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. ரஷ்யாவுக்கும், அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோவுக்கும் சுத்தமாக ஆகாது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பதால் ரஷ்யா ஏகக் கடுப்பில் இருந்தது. ரஷ்யா- உக்ரைன் இடையே சீனாவும் புக முடியாத நிலை இருந்தது. ‘‘இந்தப் போதை மோடி ஒருவரால் மட்டுமே நிறுத்த முடியும்’’ என்று ஜெர்மன், இத்தாலி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் பிரதமர்கள் கூறினாலும், 2024 லோக்சபா தேர்தல் நெருக்கடியால் மோடியால் உடனடியாக எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது உண்மைதான்.
ராஜகுரு
இந்நிலையில், பிரதமராக 3 முறையாக பதவியேற்றதும், உலக நாடுகளின் பார்வை மோடியின் மீது திரும்பியது. கடந்த ஜூலை 9ம் தேதி அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்குச் சென்ற பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் நீண்டதொரு பேச்சுவார்த்தை நடத்தினார். 2 தரப்பு பாதுகாப்பு, ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இதே காலகட்டதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அமைச்சரவையினர், அமெரிக்காவில் சுற்றுப் பயணம்செய்து, 2 தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற் கொண்டனர். ஒரே நேரத்தில் 2 வல்லரசுகளை கையாளும் மோடியின் ராஜதந்திரம், மேற்கு நாடுகளை திகைக்க வைத்தது.
போலந்து, உக்ரைன் பயணம்…
இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதமர் மோடியின் போலந்து மற்றும் உக்ரைன் பயணங்கள் தொடர்பான அறிவிப்பு, சர்வதேச அரசியல் சமூகத்தில் பெரும் சலசலப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது. ‘‘2 நாடுகளும் பரஸ்பரம் இடைவிடாது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், எந்த தைரியத்தில் மோடி உக்ரைன் செல்கிறார்?’’ என்று பல நாடுகளின் தலைவர்கள் திணறிக் கொண்டிருந்தனர்.
முக்கோண அரசியல் விளையாட்டு
ஆனால், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 21 முதல் 23ம் தேதிவரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற் கொண்டார். இதன் வழியாக, அமெரிக்கா – உக்ரைன் – ரஷ்யா என்ற முக்கோண அரசியல் விளையட்டை, முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இந்தியா உள்ளது. இதற்கு காரணம், வங்கதேசத்துக்கு கட்டுப்பட்ட செயின்ட் மார்ட்டின் தீவு வழியாக, ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா தடம் பதித்துவிடக்கூடாது என்ற நகர்வும்தான்.
போலந்திற்கு விசிட்
சுருக்கமாக சொல்லப்போனால் கத்திமேல் நடப்பதுபோன்ற இந்த அசாத்தியமான விஷயத்தை, பிரதமர் மோடி தனக்கே உரிய ஸ்டைலில் அசாத்தியமாக வெற்றிகரமான பயணமாக்கியுள்ளார். மோடி நேரடியாக உக்ரைனுக்கு செல்லவில்லை. அவர் நேரடியாக பயணம் செய்த இடம் போலந்து. இங்குதான் நேட்டோவின் ராணுவ தலைமையகம் உள்ளது. ரஷ்யாவுடனான நெருக்கம் எந்தளவுக்கு முக்கியமோ, நேட்டோவுடனான நட்பும் முக்கியம் என்பதை நிரூபிப்பதற்காக பிரதமர் மோடி போலந்தில் தடம் பதித்தார். இந்திய வரலாற்றில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின்னர், போலந்தில் கால் பதிக்கும் முதல் இந்திய பிரதமராக ஒரு சாதனையை மோடி படைத்துள்ளார்.
போர் நிறுத்தம்
அறிவித்த ரஷ்யா, உக்ரைன்…
போலந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு தலைநகர் வார்ஷாவில் குஜராத்தின் ஜாம்நகர் முன்னாள் மன்னர் ஜாம் சாகேப் திக்விஜய்சிங்ஜி ரஞ்ஜித்சிங்ஜி நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தினார். 2ம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படைகள், ரஷ்யாவின் செம்படைகளுக்கு மத்தியில் சிக்கி சின்னாபின்னமான போலந்தின் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக அடைக்கலம் தேடி ஓடினர். கடைசியாக அவர்கள் குஜராத்தின் ஜாம்நகரில் அடைக்கலமாகினர். போர் முடிந்து அவர்கள் விரும்பும்வரை தன் ராஜ்ஜியத்தில் வைத்து அவர்களை பராமரித்த மகாராஜாவின் நன்றிக்கும், விசுவாசத்துக்கும் பதில் மரியாதையாக போலந்து மக்கள் அவரை இப்போதும் கொண்டாடுகின்றனர். அவரது நினைவாக பள்ளிகள், கல்லூரிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நினைவுத்தூணில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்து முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தினார். 2 நாடுகளுக்கும் இடையே பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
ரெயில் போர்ஸ் ஒன் பயணம்…
போலந்தின் தலைநகர் வார்ஷாவில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இயக்கப்படும் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரெயில் போர்ஸ் ஒன் ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். கடந்த 23ம் தேதி வார்ஷாவில் இருந்து ரயிலில் பயணித்து உக்ரைனின் கீவ் நருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, உக்ரைன் நாட்டின் அமைச்சரவையினர், ரயில் நிலையத்துக்கே வந்து வணங்கி அழைத்துச் சென்றனர். இந்த ரெயில் போர்ஸ் ஒன் ரயில் என்பது, போலந்தின் விசேஷமான ரயில். குறிப்பாக அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளுடன், விவிஐபி தலைவர்கள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட, போலந்து அரசின் ஸ்பெஷல் ரயில் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்த ரயிலில் 10 மணி நேரம் பயணித்து, பிரதமர் மோடி கீவ் நகர் சென்றடைந்தார்.
இருதரப்பு போர் நிறுத்தம்!!!
உலக அதிசயம்
பிரதமர் மோடி போலந்தில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ஒரே நேரத்தில் 12 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தன. இது யுத்த வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சம்பவம். உக்கரைன் மீதான போரை ரஷ்யா 2022 பிப்ரவரியில் தொடங்கிய பின்னர் இத்தாலி, பிரான்ஸ் உட்பட பல மேற்கு நாடுகளின் அதிபர்கள் உக்ரைனக்கு சென்றனர். ஆனால், அப்போதெல்லாம் ரஷ்யா கண்டு கொள்ளவே இல்லை. தன் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி உக்ரைனுக்குள் நுழையவுள்ளார் என்று அறிந்ததும், ரஷ்யா 12 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இது உலக அரங்கில், மிகப் பெரிய வியப்பையும், மோடி என்ற பிம்பத்தின் மீதான ஆளுமைத் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்றால், இது மிகையல்ல.
அமைதி பேச்சு…
உக்ரைன், ரஷ்யா மோதலின் அடிப்படையே வேறு. உக்ரைன் பிரிவதற்கு முன்னதாக ரஷ்யா அங்கு எண்ணை அகழ்வு ஆய்வுக்கு லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் முதலீடு செய்திருந்தது. ஆனால், அவற்றை உக்ரைன் கண்டு கொள்ளாமல்,
அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து கும்மியடிக்கத் தொடங்க, ரஷ்யா கோபத்தில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று தொடங்கிய மோதலை யார் வந்தாலும் நிறுத்தாத ரஷ்யா, பிரதமர் மோடி உக்ரைனுக்குள் சென்ற நேரத்தில் நிறுத்தி, மோடி மீதான தன் மரியாதையை உலகுக்கு உணர்த்தியது. இது அமெரிக்காவுக்கு திகைப்பபையும், சீனாவுக்கு கோபத்தையும் கூட ஏற்படுத்தி இருக்கலாம். இதில் பிரதமர் மோடி செய்த ஒரு செயல், தான் அனைவருக்கும் பொதுவான நபர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.
அன்பளிப்பும் அரவணைப்பும்
விளாடிமிர் புதினை எப்படி ஆரத்தழுவி வரவேற்றாரோ, அதே பாணியில்தான் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை கட்டிப்பிடித்து வரவேற்றார். பெண் தலைவர்களை தள்ளி நின்றி வணங்கி வரவேற்கும் மோடி, ஆண் தலைவர்களை இந்திய மரபுப்படி வரவேற்று அசத்திக் கொண்டிருக்கிறார். இந்த வகையல் உக்ரைனுக்கு நமது தேசத்தின் அன்பளிப்பாக, ‘BHISHM CUBES‘ எனும் மருத்துவ தொகுப்பு கருவியினை வழங்கினார். இதன் முழு விரிவாக்கம் Bharat Health Initiative for Sahyog Hits & Maitri என்பதாகும்.
நம் தயாரிப்பு
இது இந்தியாவின் தயாரிப்பு. பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாகும். யுத்தம், பேரிடர் காலங்களில் பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கும் வசதியைக் கொண்டது. சிறிய சிறிய பொதிகள் கொண்ட தொகுப்பு இது, ஒரு கண்டெய்னர் எனப்படும் பொருள்பெட்டிக்குள் ஏகபட்ட பொதிகளை அப்படி அடுக்கலாம்
22 கூடாரங்கள்
ஒவ்வொரு பொதியும் ஒரு கூடாரமாகும், அதற்குள் அத்தியாவசிய மருத்துவ மருந்தும் கருவிகளும் இருக்கும் , எந்த அளவு என்றால் ஆக்ஸிஜனை தானே உற்பத்தி செய்யும் கருவிகளும் உள்ளே இருக்கும். 22 பிரம்மாண்ட கூடாரங்களை உக்ரைனுக்கு வழங்கினார் பிரதமர் மோடி. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் அடைந்துள்ள சேதங்களை பார்வையிட்டு, தெரிந்து கொண்ட மோடி, ‘இது அமைதிக்கான காலம். யுத்த காலம் அல்ல’ என்று அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு அச்சாரமிட்டு வந்தார்.
பைடன், புதினுடன் பேச்சு…
தன் போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய மோடி, அங்கு தான் பார்த்த நிலவரங்களை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பகிர்ந்து கொண்டார். இதன் வழியாக, தான் வெறும் சுற்றுப் பயணம் மேற் கொள்ளவில்லை. அமைதிக்கான அடிக்கல் நாட்டிவிட்டு வந்துள்ளதாக, உலகத்துக்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளார் மோடி. போரைத் தொடங்கிவிட்ட ரஷ்யாவும், எதிர்த்து மல்லுக்கு நின்ற உக்ரைனும் எப்படியாவது போர் நிறுத்தம் வந்தால் நல்லதுதான் என்று உள்ளூர புழுங்கிக் கொண்டிருக்கின்றன. கான்கிரீட் மேடான உக்ரைனும், பலத்த பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ரஷ்யாவும், இப்போதைய சூழலில் நம்பகமான தலைவராக நம்பிக் கொண்டிருப்பது பிதரமர் மோடியை மட்டுமே. காரணம், பிரதமர் மோடி உள்ளூர் நாட்டாமை மட்டும் அல்ல. ஆளுமை நிறைந்த, யாரை எப்படி கையாளுவது என்ற ராஜதந்திரம் தெரிந்த உலக நாட்டாமை.