முழுசா முடிக்காம திரும்ப முடியாது…இஸ்ரேலின் இடிமுழக்கம்

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் ‘இதோட நிறுத்திக்கலாமே…’,
‘இல்ல, ரொம்ப தூரம் வந்துட்டோம். முழுசா முடிக்காம திரும்ப முடியாது’ என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இப்படித்தான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹெய்தி, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளும், ‘இத்தோட நிறுத்திக்கலாமே?’ என்று இஸ்ரேலை பார்த்து கதறிக் கண்ணீர் விடத் தொடங்கியுள்ளன. ஆனால், இஸ்ரேலோ, ‘‘இல்லை, தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ரொம்ப தூரம் வந்துட்டோம். இதை அடியோட முடிக்காமல் திரும்ப முடியாது’’ என்று கூலாக கூறிக் கொண்டு, ஒவ்வொரு தீவிரவாத இயக்கத்தையும் கதறக் கதற அடித்து, துவைத்துக் கொண்டிருக்கிறது,.

ஆரம்பப்புள்ளி ஹமாஸ்தான்..

மத்திய கிழக்கில் இஸ்ரேலைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளும் அதற்கு எதிரிகள்தான். பாலஸ்தீனம், சிரியா, ஈரான், லெபனான், ஏமன், எகிப்து, துருக்கி என்று இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுக்கும் நாடுகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஹமாஸ்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் முதன்மை இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஒரே நேரத்தில், இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்களை ஏவியும், எல்லையை உடைத்து ஆயிரத்து 500க்கும் அதிகமான இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் மத்திய கிழக்கில் யுத்தத்தை தூபம் போட்டுத் தொடங்கியது ஹமாஸ்!!!

ஹமாஸ் எஜமானர் ஈரான்தான்

சும்மா மிரட்டி கொண்டே இரு.. நிம்மதியாக விடாதே என்று ஈரான் கூறியதை மதிக்காமல் அக் 7ந் தேதி ஹமாஸ் அசட்டு தைரியத்தில் இஸ்ரேலை தாக்கியது.

இதனால், கடுப்பான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இப்போது வரை குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஹமாசுக்கு எதிரான போரில், இந்தமுறை கடைசி தீவிரவாதியையும் விடப்போவதில்லை என்று இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்தது ஆனால், பாலஸ்தீன அரசு ஆதரவுடன் செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கு, மக்களும் ஆதரவு அளிக்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை, மதத்துக்கு பின்னரே, மற்றவைகள். இதனால், மக்களுடன் இணைந்து, மக்களை கேடயமாக வைத்தே ஹமாஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், அசராத இஸ்ரேல், நிலத்துக்கு கீழ் பல மீட்டர் ஆழத்தில் பல கி.மீட்டர் தூரத்துக்கு ஹமாஸ் உருவாக்கிய சுரங்கப்பாதை நெட்வொர்க்கை சல்லி சல்லியாக நொறுக்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் தீவிரவாதத்துக்கு எதிரான இந்த யுத்தத்தில், சில நேரங்களில் பொது மக்களும் சேர்ந்தே பலியாகின்றனர் என்பது வருத்தமான விஷயம்.

வாண்டடாக வண்டியேறிய ஹெய்தி மற்றும் ஹிஸ்புல்லா

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தங்கள் தேசங்களைவிட மதமே பிரதானம் என்பது உலகறிந்த விஷயம். இந்த வகையில் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளுக்கு சவால் விடும் குட்டி நாடான இஸ்ரேலை ஒழித்துக் கட்டும் வகையில், ஈரான் பல்வேறு நாடுகளின் தீவிரவாத குழுக்களை ஊக்கம் கொடுத்து வளர்த்துவிட்டது. சிரியாவில் ஐஎஸ் அமைப்பு வளர்ந்தது போல், லெபனானின் ஹிஸ்புல்லா குழுவுக்கு ஆயுதம், பணம் கொடுத்து பால் ஊற்றிக் கொண்டிருந்தது. இதில் ஏமன் நாட்டின் ஹெய்தி அமைப்பும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டன. ஏமனில் இருந்த ஹெய்தி அமைப்பு, இஸ்ரேலுக்கு வரும் வணிக கப்பல்களை தாக்கத் தொடங்கி, செங்கடல் பகுதியில் சிக்கலை ஏற்படுத்தியது. இதை இஸ்ரேல் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஹிஸ்புல்லா

மற்றொரு பக்கம் ஈரானின் ஆதரவில் துள்ளிக் கொண்டிருந்த லெபனானின்
ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து தொடங்கியது. கடந்த டிசம்பரில் இருந்து அவ்வப்போது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, இஸ்ரேலுக்கு ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்தது. இந்த அமைப்பில் லட்சம் உறுப்பினர்கள், 5 ஆயிரம் கமாண்டிங் நிலையிலான போராளிகள் இருந்தனர். அத்துடன், லெபனான் அரசில் 15க்கும் அதிகமான எம்பிக்களும் இருந்ததால், இஸ்ரேல் மெல்ல காய் நகர்த்த வேண்டியிருந்தது.

தளபதியை தூக்கிய இஸ்ரேல்…

லெபனானில் இருந்து தங்களுக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான விஸ்ஸாம் தாவிலை, கடந்த ஜனவரி மாதம் விமானத் தாக்குதலில் போட்டுத் தள்ளியது இஸ்ரேல். இந்தத் தாக்குதலுக்கு, முன்னரும், பின்னரும் நடந்த ஹிஸ்புல்லா மீதான தாக்குதலில் கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தங்களின் ரகசியங்களை இஸ்ரேல் எப்படி கண்டுபிடிக்கிறது? என்று திணறிய ஹிஸ்புல்லா, செல்போன் சிக்னல்களை வைத்து, தங்களை தொடர்ந்து தாக்குவதாக உணர்ந்து கொண்டனர். இதனால், தங்களுக்குள் தகவல் தொடர்புகளை லீக் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஹிஸ்புல்லா முடிவு செய்தது.

அதரப் பழசான தொழில்நுட்பம்…

குட்டி நாடான இஸ்ரேல், தன்னிடம் உள்ள நவீனமான செயற்கைக் கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, செல்போன் சிக்னல்களைப் பயன்படுத்தி, தங்களது இருப்பிடங்களைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, ஒவ்வொரு தளபதியாக தூக்கிக் கொண்டிருந்தது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து 1997ல் பயன்படுத்தப்பட்ட பேஜர் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, ஹிஸ்புல்லாக்கள் முடிவு செய்தனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் தீவிரவாதிகள் உள்ள இந்த இயக்கத்தில், 6 ஆயிரத்துக்கும் அதிகமான 2ம் நிலை கமாண்டிங் தீவிரவாதிகள் உள்ளனர்.

தகவல் பரிமாற்றம்

இவர்கள் வழியாகத்தான் ஹிஸ்புல்லா தலைமை, தன் தாக்குதல் விபரங்களை பகிர்ந்து கொண்டிருந்தது. இந்த 2ம் நிலை கமாண்டிங் தீவிரவாதிகளுக்குத் தலைமையிடம் இருந்து தகவல்களை பெறும் வகையில் தைவான் நாட்டின் காப்புரிமை பெற்று, ஐரோப்பாவில் பேஜர் தயாரிக்கும் நிறுவனத்தினம், 6 ஆயிரத்துக்கும் அதிகமான பேஜர்களை ஆர்டர் செய்து, வழங்கியது. இந்த பேஜர்கள் கடந்த 6 மாதங்களாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடங்கியது தாக்குதல்…

இஸ்ரேல், ஒரே நேரத்தில் 16க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகளுடன் பல முனைகளில் யுத்தத்தை சந்தித்த நாடு என்பதால், எல்லா நேரமும் அதன் உளவு அமைப்பான மொசாட் விழிப்புணர்வுடன் இருக்கும். ஒரு பக்கம் ஹமாசை நொறுக்கிக் கொண்டிருந்தாலும், ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கும் வாய்ப்புள்ள ஹெய்தி மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் தகவல் தொடர்புகளை மொசாட் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா நாள் குறிப்பது தொடர்பான தகவல்கள் பேஜர்களில் வெளியாக, செப்டம்பர் 17ம் தேதி பிற்பகலில் லெபனான் அலறத் தொடங்கியது. தலைநகர் பெய்ரூட் தொடங்கி ஹிஸ்புல்லாக்கள் உள்ள பகுதிகளில் எல்லாம் திடீர் வெடிச்சத்தம். கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிக் கொண்டிருந்தன. என்ன நடந்தது என்பதை உணர்ந்து சுதாரிப்பதற்குள் பல ஆயிரக் கணக்கானோருக்கு கண் பார்வை பறிபோனது. ஆயிரக் கணக்கானேருக்கு விரல்கள் துண்டானது. இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இடுப்புப் பகுதிகளில் சதைகள் பிய்ந்து தொங்கின. இந்த உடனடி சம்பவத்தில் 20 பேர் இறந்ததாக ஹிஸ்புல்லா அறிவித்தது.

சோலார் பேணல் அதிர்ச்சி

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் செப்டம்பர் 18ம் தேதி மாலையில் லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வாக்கி டாக்கிகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த சம்பவத்தில் 25க்கும் அதிகமானோர பலியானதாக லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் கணக்கு கூறினர். அடுத்து எது வெடிக்கும் என்று பீதியில் இருந்தவர்களுக்கு, எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியம் சோலார் பேனல்களில் காத்திருந்தது. லெபனானின் பல தீவிரவாத குழுக்களின் தலைவர்கள் தங்கள் வீடுகளில் மின்உற்பத்திக்கு வைத்திருந்த சோலார் பேனல்களின் செல்கள் வெடித்து சிதறின. இதனால், எதைத் தொட்டாலும் வெடிக்கிறேதே என்ற பீதியில் ஒட்டு மொத்த லெபனானும் ஆடிப்போனது.

எச்சரித்த இஸ்ரேல்…

லெபனானில் என்ன நடக்கிறது என்பதை ஹிஸ்புல்லாக்கள் உணர்ந்து கொள்ளும் முன்னரே, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை தலைவர் ‘‘யோவ் காலன்ட்’’ ஒரு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

‘‘நாங்கள் ஒரு புதிய விதமான யுத்த களத்தில் நுழைந்துள்ளோம். இஸ்ரேலுக்கு எதிராக, தீவிரவாதிகள் எந்த ஒரு விபரீத முடிவுகள் எடுத்தாலும்,

அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், தீவிரவாதிகள் சாப்பிட செல்வதற்கும், கழிவறை செல்வதற்கும் கூட பயந்து நடுங்கும் சூழலை உருவாக்குவோம். நாங்கள் அதற்கான வலிமையுடன் உள்ளோம்’’ என்று எச்சரித்தார். ‘‘இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

பேஜர் வெடி தாக்குதலில் மட்டும் 850க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 290 பேர் மூத்த கட்டளை மைய தீவிரவாதிகள். இந்த 291 பேரில், 131 பேர் ஈரானியர்கள். ஏமன் நாட்டின் தீவிரவாதிகள் 80 பேர். 500 பேருக்கு பார்வை பறிபோனது. இடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரத்து 700 பேர். இதில், ஆயிரம் பேரின் நிலைமை சொல்ல முடியாத அளவு கடினமாகிவிட்டது. இதுவும் கூட ஹிஸ்புல்லா தயாரித்த ரகசிய அறிக்கை வெளியானதால், வெளி உலகில் கசிந்த தகவல்.

வான் வழி தாக்குதல்…

ஒரு சில நாட்களில், தங்கள் இயக்கத்தின் பல ஆயிரக் கணக்கான 2ம் நிலை கமாண்டர்களை இஸ்ரேல் சாதுர்யமாக போட்டுத் தள்ளியதில், லெபனானுக்கு அவமானம்தான். லெபனான் அரசு தனி என்றாலும், அதைவிட வலிமையான தீவிரவாத அமைப்பு ஹிஸ்புல்லா. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயிரக் கணக்கான ராக்கெட்களை இஸ்ரேலை நோக்கி தயார் நிலையில் நிறுத்தினர். இதை ரேடார்கள் வழியாக கண்பிடித்த இஸ்ரேல், தன் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் போர் விமானாங்கள் உதவியுடன் ஒரே நேரத்தில் தவிடுபொடியாக்கியது.

அடங்காத ஹிஸ்புல்லா

ஆனாலும், அடங்காத ஹிஸ்புல்லா மீண்டும் இஸ்ரேல் மீது சரமாரியாக ரக்கெட்களை ஏவியது. இதை இஸ்ரேலின் அயன்டோம் கவசம் வெற்றிகரமாக தடுத்தது. இதன் பின்னர் இஸ்ரேல் கொடுத்த அடி, லெபனானின் வாழ்நாளில் மறக்கவே முடியாத அடி எனலாம். லெபனான் வானொலியில், ‘‘இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்’’ என்று ஹிஸ்புல்லா தலைவர் பேசிக் கொண்டிருந்த போதே ஒலி நிறுத்தபட்டது.

இஸ்ரேலின் குரல் ஓலித்தது…

மாறாக, ‘‘லெபனான் மக்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அதேநரத்தில், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்குகிறோம். அவர்களது ஆயுத கிடங்குகளை அழிக்கப்போகிறோம். லெபனான் மக்கள் தீவிரவாதிகளை ஒதுக்குங்கள். அல்லது அவர்களிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம். இப்படிக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை’’ என்று செய்தி ஒலிபரப்பானது.

குண்டு மழை…

செய்திகள் வெளியான ஒரு சில மணி நேரத்தில் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினர். சொன்னபடி ஒரு சில மணி நேரங்களில் லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அத்துடன் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஹிஸ்புல்லாவின் மறைவிடங்களை நோக்கி வீசினர். இந்தத் தாக்குதலில் 50 குழந்தைகள் உட்பட 800 பேர் வரை பலியானதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவனான இப்ராஹிம் மொஹமத் கொப்பெய்சியும் கொல்லப்பட்டான் என்பதை அந்தத் தீவிரவாத இயக்கம் உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரவாதத்தை சுத்தம் செய்யும் இந்தப் போரை இஸ்ரேல் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை.

காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியல் இதுவரை 48 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று அல்ஜெசீரா தகவல் வெளியிட்டுள்ளது.

மதமே முக்கியம்

மக்களை விட, மதத்தின் புனிதப்போர் முக்கியம் என்று கொக்கரிக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹெய்தி உட்பட தீவிரவாத இயக்கங்களை வேறுடன் அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேலும் முழங்கிக் கொண்டு, அடிமேல் அடி அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், மத்திய கிழக்கின் தீவிரவாத இயக்கங்களும், அவற்றுக்கு ஆதரவளிக்கும் நாடுகளும் பீதியில் உள்ளனர்.

  1. இந்த தீவீரவாத இயக்கங்கள் மக்களை பற்றி கவலைபடுவது இல்லை…
  2. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை, ஜனநாயக முறையில் ஆட்சி புரிய விடுவதில்லை.
  3. புனித போர் என்று கூறி ஜனநாயனத்தை கொன்று மக்களையும் பலி கொடுத்து கொண்டிருக்கின்றனர்.