மோடியின் சதுரங்க ஆட்டம்!

உலகம் கவனித்துக் கொண்டு இருந்த ஒரு சதுரங்க மேடையில் போகிற போக்கில் ஒரு சிறிய தமிழக கிராமம் பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயம் பற்றிப் பேசி நாடு முழுவதும், உலகம் முழுவதும் ஒரு தேடு பொருளாக்கி விட்ட மோடி.

இந்து மதத்தை கேவலப்படுத்தும் முயற்சியில்…

இந்துக்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி மட்டம் தட்டிக் கொண்டே இருக்கும் சுவிஷேச திராவிட கல்பிரிட்டுகள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தின் பெருமைகளை மங்கவைத்து, மறக்க வைத்து, கோவில்கள் வருமானத்தை தடுத்து அவற்றை சிதைய வைத்து, குண்டுகள் வைத்து அச்சுறுத்தி இந்துக்களை மதமாற்றம் நோக்கி நகர்த்தலாம் என்ற எண்ணத்தில் விழுந்தது நமது அன்னை மண்.

கடவுளே ஆடிய சதுரங்க ஆட்டம்

சும்மாதான் சொன்னார்…”கடவுளே இறங்கி வந்து விளையாடிய ஆட்டம் இது சதுரங்கம்..!!”. ஆனால் ஆதாரத்துடன் கோவிலின் பெயரையும் ஸ்வாமியின் பெயரையும் அழுத்திச் சொன்னார். உடனே உலகம் முழுவதும் அந்த ரீச்… அடேயப்பா!! கோவில் ஸ்தல வரலாறு துல்லியமாக இந்த விளையாட்டை இறைவன் இறைவி விளையாடியதைக் கூறுகிறது. ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு கூட அப்படி கோவில் இருக்கிறதா.. உடனே போகலாமே என்று தோன்றி இருக்கும். ரஜினி கூட ஒரு திகைப்பாக கேட்டுக் கொண்டு இருந்தார். ஏன் அங்கு இருந்த பல தமிழர்களுக்கும் கூட இது அரிய செய்தியாகத்தான் இருக்கும்.

சுகமுனிவர் வணங்கிய தேவாரஸ்தலம்

மன்னார் குடி அருகே பாமணியில் (ஷிசிழி104 – சோழநாடு காவிரி தென்கரையில் 104வது தேவாரத்தலம்) இருந்து சில கிமீ தொலைவில் இருக்கிறது திருப்பூவனூர் ஸ்ரீசதுரங்கவல்லபநாத சுவாமி ஆலயம் (ஷிசிழி103 – சோழநாடு காவிரி தென்கரையில் 103வது தேவாரத்தலம்).சுக முனிவர் வணங்கிய திருத்தலம் ஆதலால் கோவில் முழுவதும் பச்சைக் கிளிகள் அங்குமிங்கும் என பறந்து திரிவது அழகு. இரண்டு அம்பாள் சந்நிதிகள்.ஸ்ரீராஜராஜேஸ்வரி தான் இறைவருடன் சதுரங்கம் ஆட அவதரித்தவள். ஸ்ரீகற்பகவல்லி ஈசனுடனுறைத் தெய்வம்.மேலும் இங்கு ஸ்ரீசாமுண்டீஸ்வரி கடுமையான விஷத்தையும் கூட இறக்கி காப்பாற்றும் அதிசய சக்தி படைத்தவள்.

நோய்களை தீர்க்கும் தீர்த்தம்

கருங்குஷ்டம் எனும் கடுமையான நோய்களை நீக்கும் ‘கிருஷ்ண குஷ்டஹர’ தீர்த்தம் இங்குள்ளது.எத்தனை மகத்துவம் கொண்டதாயினும் பாமர மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படாத திருக்கோவில். ஆனால் அது இன்று ஸ்விட்ச் போட்டாற்போல திடீரென மாறி விட்டது.நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே தேடு/பேசு பொருளாகி விட்டது ஒரு தமிழ்நாட்டின் கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்கால சிறப்புடைய ஆலயம் இன்று லோகப்பிரசித்தி.அவன் மட்டுமே அறிவான் எது எப்போது எப்படி யாரால் நடக்க வேண்டும் என்பதை!!ஒரு கூன் விழுந்த பிராமண இளைஞன் கோவிலை அதிசுத்தமாக அனுஷ்டானங்களுடன் பராமரிப்பது மனதுக்கு இனிமை தரும் விஷயம்.

ஆனால் இந்துமத எதிர்ப்புக்கு அத்தாரிட்டியை மேடையில் வைத்துக் கொண்டே தமிழத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கோவில் பற்றிய சிறப்பை சரியான இடத்தில் பேசியதுதான் மேட்டரே.கோவில் இடிப்புகளுக்கு பெயர் போன சுவிஷேச திராவிட கும்பலுக்கு அல்லையில் ஆசிட் ஊற்றியது போல ஒரு எரிச்சல் இனி இருந்து கொண்டே இருக்கும்.”எரியுதடி மாலா, ஃபேன பண்ணெண்டுல வைடி…கததான்!! கவர்னரோ அண்ணாமலையோ வேறு யாருமே சனாதனம் பற்றி சின்னதாக பேசினாலும் உடனே கத்தி
கூப்பாடு போடும் மதமாற்ற கும்பலுக்கு மோடி எந்த சாய்ஸும் விட்டு வைக்க வில்லை. இது ஒரு ஸிஷிஷி பார்ப்பன சமஸ்கிருத ஆரிய சதி என்று உருட்டவும் எந்தவொரு முகாந்திரமும் இல்லை.மறுநாள் விடிந்த பிறகும் இதுவரை அவர்களால் சிறு முக்கல் கூட எழுப்ப முடியவில்லை.நமக்கு எழும் நமுட்டுச் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சனாதன சிறப்பு

அதுவும் உலகம் முழுவதும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கும் மேடையில் சர்வ சாதரணமாக சனாதனச் சிறப்பை எடுத்துச் சொல்லியது ஒரு ஆர்பரிப்பில்லாத இந்து மதச் சிறப்பு பற்றியதொரு முரசறிவிப்பு போலத்தான்!! ஆனால் நமக்கு என்று ஊடகங்கள் இல்லாத ஒரு குறை பெரிதாக தெரிவது இந்த மாதிரி சமயங்களில் தான்.அந்தக் குறை மிகை வெளிப்படையாகவே தெரிகிறது.

மீடியா பலம் அறியாத இந்து அமைப்புகள்

இதனை ஒரு விவாதப் பொருளாக்கி வைரல் ஆக்கும் ஒரு அழகான வாய்ப்பை இழந்து நிற்பது கவலையாக இருக்கிறது. ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசரஸ்வதி ஸ்ரீஇராமர், ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீஸ்கந்தன்,ஸ்ரீநடராஜர்,ஸ்ரீபார்வதி, ஸ்ரீஐயப்பன் என்று கடவுளர்களையும் இந்து மத மந்திரங்கள்,ஆலயங்கள், ஸம்ப்ரதாயங்கள் என்று ஒன்றையும் விடாது மிகவும் அழுக்குமனத்துடன் தாக்கிக் கொண்டே இருந்த மதமாற்ற கூட்டத்துக்கு சரியான ஆப்பு.மேலும் அவர்களால் தமிழ் தமிழன் என்று உருட்டுவதும் கூட முடியவில்லை…தமிழக ஆலயம் பற்றியே பேசி விட்டதால்…!!!

முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டியதை…

தமிழக முதல்வர் பதவியில் இருப்பவர் பேசித் தட்டிக் கொண்டு போக வேண்டிய தமிழ்நாட்டின் பெருமையை ஒரு குஜராத்தி பிரதமர் பேசி அசால்ட்டாகத் தட்டிக் கொண்டு போய்விட்டார். சதுரங்கம் நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பதையும் அது தமிழ்நாட்டில் புராண கால விளையாட்டு என்பதையும் பொட்டில் அடித்தாற்போல ஆன்மீக வரலாறு கலந்து ஆதாரத்துடன் சொல்லி விட்டுச் சென்றார் பாரதப் பிரதமர் மோடி.

தமிழக முதல்வர் பதவியில் இருப்பவர் பேசித் தட்டிக் கொண்டு போக வேண்டிய தமிழ்நாட்டின் பெருமையை ஒரு குஜராத்தி பிரதமர் பேசி அசால்ட்டாகத் தட்டிக் கொண்டு போய்விட்டார்.

குறுக்கு சட்டத்தை சொருகி வைத்தது யார்?

யாராலும் இதுவரை மறுத்துப் பேச முடியவில்லை. ஆனாலும் தனக்குச் சொந்தமே இல்லாத விளையாட்டின் கருப்பு வெள்ளை ராஜா காய்களின் மண்டையின் மேல் குறுக்குச் சட்டத்தை சொருகி வைத்தான் பாருங்கள் அங்கே நிற்கிறான் அந்த மதமாற்றக் கல்பிரிட்டுக் களவாணி! அதற்கும் மேல் “இது பாரத பூமியின், தமிழ் நாட்டில் பிறந்த விளையாட்டு ஆச்சே,,.இங்கே இவைகளை எப்படி,எவன் சொருகினான்” என்று இனி உலகத்தையே யோசிக்க வைத்து விட்டார் பாருங்கள்

அங்கே இந்த காப்பியடிக்கும் சுவிஷேசக் கில்லாடிகளை(!) மண்டியிட வைத்தார் நமது அன்னை பூமியின் மைந்தன் நரேந்திர மோடி!!