கிரேக்க அலெக்ஸாண்டர்

கோடிபேர் அனுதினமும் பிறந்து சாகும் உலகில் எத்தனையோ பலகோடி மானிடர்கள் வந்து சென்ற உலகில் ஒருசிலரே வரலாறு படைக்கின்றார்கள்,
ஒரு சிலரே வரலாறு ஆகின்றார்கள்

அந்த அதிசய வரலாற்றில் முக்கியமானவன் கிரேக்க அலெக்ஸாண்டர், உலகையே வென்று அதை கிரேக்க ஞானபடுத்துவேன், கிரேக்க ஞானம் தர்மமுமே
அதி சிறந்தது என 16 வயதிலே படைதிரட்டினான்

கிரேக்க சாம்ராஜ்யம்

20 வயதுக்குள் மேற்காசியாவினை அலற வைத்தான் 25 வயதில் பெரும் அரசனான் , 30 வயதில் வீழ்த்தமுடியா பாரசீக அரசனை வீழ்த்தி மாபெரும் ராஜ்ஜியத்தை அமைத்து கிரேக்கம் முதல் எகிப்துவரை அப்படியே இன்றைய ஆப்கன் வரை பெரும் கிரேக்க தர்ம சாம்ராஜ்யத்தை அமைத்தான்

இந்திய கனவு

இந்தியா எனும் கனவு பூமி அவனுக்கு பொம்மைவைத்து விளையாடிய காலத்திலே உண்டு, செல்வம் மிகுந்த அந்த பொற்கால இந்தியாவினை கைபற்றி மாபெரும் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதே அவன் பெரும்

கனவு

அந்த கனவிலே இந்திய எல்லையில் கால்வைத்தான், தான் ஒரு கிரேக்க மதத்தவன் என்பதும், கிரேக்க தர்மமே உலகில் சிறந்தது என்பதும் அவனின் அசைக்கமுடியா நம்பிக்கையாய் இருந்தது
இந்தியாவினை கிரேக்கமயமாக்குவேன் என கங்கணம் கட்டி வந்திருந்த அவன், ஆங்காங்கே சாம்பல் பூசி ருத்திராட்டம் அணிந்து அரையாடை உடுத்திய ஆண்டிகளை பரிகாசமாய் பார்த்தான்

தண்ட முனி

கூரிய மதியுள்ள்ள அவனுக்கு இந்திய தர்மத்தை வாதத்திலே வெல்லலாம் என தோன்றிற்று, தண்டமுனி எனும் ஞானியிடம் வாதிட வந்தான்.

தண்ட முனியும் அலெக்ஸாண்டரும் பேச தொடங்கினார்கள், ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, தெளிவான‌ ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்.

மாமன்னன் கேட்க மாபெரும் ஞானி தண்டமில்ஸ் பதில் சொன்னார்

“ உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்?

நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை
பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?

நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே
பகலா இரவா எது முதலானது?

பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது
மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்

இதுவரை காணாத மிருகத்தை

ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?
மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது

ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்

வாழ்வா சாவா எது கொடுமையானது?

வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?”

இந்தியாவின் ஆன்மீகம்

அதன் பின் அலெக்ஸாண்டர் பேசவில்லை, அவன் மனம் ஏதோ செயதது முதல் முறையாக கிரேக்க ஆன்மீக ஞானம் அவன் மனகண்முன்னால் சரிந்து விழுந்தது, இந்திய ஞானம் விஸ்வரூபமெடுத்து நின்றது

ஆம், அந்த உரையாடல் வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது

உண்மையான அர்த்தம் என்ன??

இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்

மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்

கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்
மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது

நான்காம் வாதம்

மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்

நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்

வாழ்வு போராட்டம் மிக்கது! கடினமானது! அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை! வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே! என்கின்றது 7ம் வாதம்

அசந்து போன அலெக்சாண்டர்

கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அப்படியே அமர்ந்துவிட்டான் அலெக்ஸாண்டர்

பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில் ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான்! இந்த ஞானம் கிரேக்கத்தில் பரவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டான்

மீண்டும் வா…

தண்டமில்ஸ் புன்னகை மட்டும் செய்தார், “நீ வந்த காரியத்தை செய் அதில் உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கட்டும் அதன் பின் என்னை வந்து பார்” என மெல்ல சிரித்தார்

அலெக்ஸாண்டருக்கு சுருக்கென தைத்தது ஆம் அவன் போரஸுடன் மோதும் முடிவில் இருந்தான், ஞானி ஏதோ சூசகமாக சொல்வது அவனுக்கு புரிந்தது

நிலத்தில் நடந்தவன் ஏற்கனவே நீரில் விழுந்தவன் போல் திகைத்த நிலையில் இப்பொழுது சேற்றில் நடக்கும் யானைபோல் சிக்கினான்

இவரே என் குரு…

அவனின் 30 ஆண்டுகால நம்பிக்கை, கர்வம், கிரேக்க பெருமிதமெல்லாம் நொறுங்கி கிடந்தது, தண்டமில்ஸை தன் குருவாக எண்ண தொடங்கினான்

இந்தியா ஞானிகளின் நாடு என்பது அவனுக்கு புரியலாயிற்று, ஒருவித ஞான மனம் அவனுக்குள் எட்டிபார்க்க ஆரம்பித்தது

எவ்வளவு பெரிய ஞானி இவர், ஆனால் எவ்வளவு எளிமையாக ஒரு மரத்தடியில் அனாதையாக அமர்ந்திருக்கின்றார்? எப்படி இவரால் சாத்தியம்?

ஒரு பொய் வாழ்கையா வாழ்கிறேன்??

அவர் சொல்வதும் சரி, அப்படியே சரி, கிரீஸில் இருந்து ஓடிய நான் இதோ ஓடி கொண்டிருக்கின்றேன், இன்னும் ஓடி கொண்டே இருப்பேன் ஆனால் எதுவரை ஓடுவேன்?

நாடுகளை வென்றேன், அரசர்களை கொன்றேன், கோட்டைகளை பிடித்தேன், கிரேக்க கொடி பறக்க விட்டேன் இதோ இந்தியாவுக்கும் வந்துவிட்டேன்

ஆனால் இதெல்லாம்
எவ்வளவு காலம்? எதுவரை?

இப்பொழுதே இந்த ராஜ்ஜியத்தை நடத்த மகா சிரமம் என் காலத்துக்கு பின் இது கலையும், அப்படியானால் எல்லாம் பொய்யா?

ஒரு பொய்க்கு பின்னால்தான் இவ்வளவு காலம் இவ்வளவு மக்களோடு ரத்த சக்தியில் நீந்தி கொண்டிருக்கின்றேன் நான்?

என் கிரேக்க ஞானியர் ஏன் இதை சொல்லவில்லை…
ஏன் கிரேக்க ஞானம் எனக்கு இதையெல்லாம் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் நான் அன்றே ஞானம் பெற்றிருப்பேனே?

எல்லாம் மாயை என தெரிந்து உணர்ந்து அந்த மரத்தடியில் இருக்கும் அவர் எவ்வளவு உயர்வானர், சொன்னாரே ஒரு வார்த்தை உன்னை வெல்வதே முதல் வெற்றி என்று…

என்னை என்றால் யாரை? நான் உடலா ஆத்மாவா மனமா?
என் மனதை நான் அடக்காதவரை நான் யாரை அடக்கி என்னாக போகின்றது, என் மனதை அடக்கினால் அல்லவா வெற்றி?

இனி அதை செய்ய வேண்டும், இவ்வளவு பெரும் ஆர்ப்பாட்டம் போர் செய்தும் கிடைக்கா நிம்மதி அந்த ஞானியில் 4 நிமிட பேச்சில் கிடைத்ததென்றால் அவனல்லவா ஞானி

இப்படி ஒர் ஞானியா??

இந்தியாவின் நுழைவாயிலிலே இப்படி ஒரு ஞானியென்றால் தேசமெல்லாம் எவ்வளவு பேர், இன்னும் என்னெல்லாம் போதிப்பார்களோ?

அவன் அகந்தையிலும் அகங்காரத்திலும் பாதி அப்பொழுதே அழிந்தது, அந்த தண்டமுனி விஸ்வரூபமெடுத்து சிரிப்பதும் அவர்முன் அவன் அடங்குவதும் அவன் மனகண்ணிலே தெரிந்தது
மீண்டும் போர் ஆனாலும் அவன் அடங்கவில்லை…

அவன் ஞானத்தை விழுங்கி அகங்கார பூதம் எழும்பி போரசுடன் மோத சொல்லிற்று
போரஸ் அவனை எளிதாக அடக்கினான், அதுவரை தோல்விகாணாத அலெக்ஸாண்டர் முதல் தோல்வியிலே கலங்கினான், அந்த தோல்வி பெரிதாய் எதிரொலித்தது

முதல் தோல்வி

கோபுரத்தில் இருந்த அவன் கீழே விழவும் என்னென்ன குரலெல்லாமோ எழுந்தது, உலகை மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தான் அலெக்ஸாண்டர்

போரசுடனான தோல்வியும் இந்தியாவில் எழும்பிகொண்டிருந்த சாணக்கியனின் மகத அரசும் அவன் கனவுகளை தகர்த்தன‌

எனினும் அடுத்த முயற்சிக்காக காத்திருந்த அவன் நிம்மதிக்காக தண்டமுனியினை மறுபடி தேடி சென்றான்

மீண்டும்ஞானியை தேடி…

முன்பு அவரை சந்தித்தபொழுது “நீ வந்த காரியம் முடிந்ததும் என்னை சந்திப்பாய்” எனும் அந்த முனிவரின் வரிகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன‌

அவரை காண ஓடினான், விரைந்தோடினான். தன் குழப்பத்துக்கெல்லாம் அவர் பதில் தருவார் என நம்பி ஓடினான்

சிந்து நதியின் வெண்மணலில் அமர்ந்திருந்தான் தண்டமுனி, அவரை வணங்கினான்
மாற்றம்

“நீ வந்த வேலை நல்லபடியாக முடிந்ததல்லவா?” என அவர் கேட்ட கேள்வியில் ஆடிபோய் நின்றான் அலெக்ஸாண்டர்

அது அவமான கேள்வியாக வெளியில் தெரிந்தாலும் தன் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு காரணமே அந்த போரின் தோல்விதான், அது நல்லதுக்குத்தான் நடந்தது என்ற தெளிவுடன் முனிவரை ஏறிட்டு பார்த்தான் அலெக்ஸாண்டர்

முனிவர் புன்னனகையுடன் சொன்னார், “உன் கடைசி போரிலும் வெற்றி உனக்கே”
“முனிவரே இனி போரிடும் திட்டமில்லை, கிரேக்கம் திரும்பும் வழியில் ஏதும் அந்த அவசியம் வருவதாகவும் தெரியவில்லை” என்றான்

சத்தம்போட்டு சிரித்த முனி , “அப்பனே நான் சொல்வது உன் மனதோடு நீ தொடங்கியிருக்கும் போர்” என அலட்சியமாய் சொன்னார்

அவர் காலடியில் அமர்ந்தான் அலெக்ஸாண்டர், அவன் மனம் முனிவர் தன் மனம் தெளிய வைப்பார் என நம்பிற்று .

மாபெரும் மன்னன் , உலகின் பெரும் செல்வமும் படையும் வைத்திருந்த மன்னன் ஒரு இந்திய முனிவனின் காலில் நிம்மதி வேண்டி வீழ்ந்திருந்தான்.