கடவுளின் தேசத்தில் மர்ம சாவு காம்ரேடுகளின் கள்ள மவுனம்!

இந்த பூமிப் பந்தில் நீதியும், நேர்மையும், இன்னமும் தங்கள் ஒரு அமைப்பால்தான் கட்டிக் காப்பாற்றப்பட்ட வருகிறது என்று, மக்களை நம்ப வைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நிகர் வேறு யாரும் இருக்கவே முடியாது. அதிலும், கம்யூனிஸ்ட்கள் எதிர் கட்சிகளாக இருக்கும் மாநிலங்களில், அரசு நிர்வாகங்களையே ஸ்தம்பிக்கச் செய்துவிடுவார்கள்.

படுகொலைகளும்

இதே கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சிகளாக இருந்தால்? மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அவர்கள் நிகழ்த்தும் அராஜகங்களுக்கு எல்லையே இருக்காது. இதனால்தான், மேற்கு வங்கத்தில் அவர்கள் செய்த படுகொலைகள் அதிகம். குறிப்பாக புத்ததேவ்பட்டாச்சார்யா ஆட்சியில், கம்யூனிஸ்ட் குண்டர்களின் அராஜகம், கொலை ஆகியவை, அந்த மண்ணில் திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் அமர வைத்துவிட்டது.

கேரளா நிலை

கேரளாவில் தங்கள் ரத்தக்களறி அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர், 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய ‘பிண’ராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட்கள். முதல்முறை ஆட்சியில் இருந்தபோதே, அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், முதல்வர் பிணராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக, இந்த வழக்கில் கைதான சொப்னா தெரிவித்திருந்தார். இதற்கு மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரும் உடந்தையாக செயல்பட்டு கைதானார்.

முதல்வர் மகள்

இப்படி ஒரு ஊழல் அரசை நிர்வாகம் செய்யும் முதல்வரின் மகள் எப்படியிருப்பார்? அவரும் தன் பங்குக்கு கட்டிங், கலெக்‌ஷன், கரப்ஷன் என்று வாழ்ந்து வந்துள்ளார். வீணா ஒரு முஸ்லிமாக மாறி, கேரளாவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் முகமது ரியாசை, 2வது திருமணம் செய்து கொண்டார். வீணாவின் முதல் கணவர் பெயர் சுனீஷ். அவர் ஒரு வக்கீல். ஒத்து வராத கணவரை வெட்டிவிட்டு, முகமது ரியாசை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

கல்லா கட்டிய வீணா

வீணா ஒரு ஐடி நிபுணர்! பெங்களூரில் தான் நடத்திவந்த ‘‘எக்ஸாலாஜிக் சொல்யூசன்ஸ்’’ என்ற நிறுவனத்தின் வழியாக, கேரளாவின் கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அந்த நிறுவனத்தின் சாப்ட்வேர்களை பராமரிப்பது ஒப்பந்தம். ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. ஆனால், முதல்வர் மகள் என்ற அந்தஸ்தில் வீணாவுக்கு அந்த நிறுவனம் அதீத சலுகைகள் வழங்கியது. மாதம் குறைந்தது 5 லட்சம் ரூபாய் செட்டில்மென்ட் செய்யப்பட்டது. இதன்படி, 20017-18ல் 15 லட்சம் ரூபாயும், 2018-19ல் 96 லட்சம் ரூபாயும், 2019-20ல் 21 லட்சம் ரூபாயும், இதே காலகட்டத்தில் 40 லட்சம் ரூபாயும் சேர்ந்து மொத்தம் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாயை வீணா, அந்த நிறுவனத்தில் பெற்றுள்ளார்.

இதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயமாகத்தான் இருந்தது.

கொச்சின் மிரைல்ஸ்

வருமான வரித்துறை கொச்சின் மினரல்ஸ் நுழைந்து சோதனை செய்யாத வரை. வரி மோசடியில் திடீர் ரெய்டு நடக்க, வருமான வரித்துறை வசம் சிக்கிய டைரியில், வீணாவுக்கு நடந்த மாதாந்திர செட்டில்மென்ட் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

சட்டவிரோத பரிவர்த்தனை

இந்தத் தொகைகள் வீணா, அவரது நிறுவனத்தின் வங்கிக் கணக்கு வழியாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், தொழில் ஒப்பந்த நிமித்தம் என்று கொச்சின் மினரல்ஸ் கூறினாலும், இதிலும் சில முறைகேடுகள் இருப்பதை அறிந்து, கேரளாவின் ஐகோட்டில் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. வருமான வரித்துறை முன்வைத்த வாதங்களை முன்வைத்த கோர்ட், ஆமாம், இது முறைகேடான பணப் பரிவர்த்தனை, சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.

ஆனால், இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை மந்தமானது.

தட்டியெடுத்த கிரீஷ்பாபு

இந்நிலையில் கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரான கிரீஷ்பாபு (47), வீணா விஜயன் வழக்கில் தீவிரமாக களம்
இறங்கினார். கொச்சின் மினரல்ஸ் மற்றும் வீணா விஜயன், அவரது நிறுவனம் இடையே நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக, போதுமான அளவு ஆர்டிஐ தகவல்களை பெற்று, இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

ஊழல் வழக்கு

தந்தை முதல்வராக உள்ள நிலையில், அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீணா விஜயன் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும், இதன் வழியாகத்தான் கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 72 லட்சம் ரூபாயை கன்சல்டிங் என்ற பெயரில் பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனால், உண்மையில் வீணா அந்த நிறுவனத்துடன் எந்த ஒரு தொடர்பிலும் இல்லை என்பதை கிரீஷ்பாபு உறுதிப்படுத்தினார். இவரது மனுவை கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நிலையில், முதல்வர் ‘பிண’ராயி விஜயனுக்கும், அவரது மகள் வீணாவுக்கும் சிக்கல் ஏற்பட்டது.

விசாரணைக்கு வரும் முன் மர்ம சாவு

வீணா மீதான ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான மனு, கடந்த வாரம் கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் தான் நேரில் ஆஜராகி, நீதிபதிகள் முன் அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்யவுள்ளதாக கிரீஷ்பாபு மீடியாக்களிடம் கூறினார்.

சடலமாக கிரீஷ்பாபு

கடந்த 18ம் தேதி இரவு, வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தன் அறையில் தூங்கச் சென்றவர், மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். கிரீஷ்பாபு தூங்கிக் கொண்டிருந்த அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், மனைவி அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத நிலையில், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்பாது கிரீஷ்பாபு மர்மமான முறையில் இறந்துள்ளார்.

சர்ச்சை சாவு

கிரீஷ்பாபுவின் மரணம், இயற்கைக்கு மாறானது என்ற பிரிவில் களமச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மூளை தொடர்பான சிகிச்சைக்காக, கிரீஷ்பாபு தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்ததாக மனைவியும், அக்கம் பக்கத்தினரும் தெரிவித்துள்ளனர். ஆனால், முதல்வர் மகள் வீணா மீதான லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கு ஐகோர்டில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கிரீஷ்பாபு திடீரென மர்மமான முறையில், இயற்கைக்கு மாறான வகையில் இறந்தது, கேரளா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊற்றி மூடிய கேரளா மீடியாக்கள்

வழக்கமாக பாஜ ஆளும் மாநிலத்தில் ஏதாவது ஒரு நிகழ்வு நேரிட்டால், அதை வைத்தே தேசிய அளவில் பிரேக்கிங் செய்தியை ஓட்டும் மீடியாக்கள், கேரளாவில் நடந்த இந்த மர்ம சாவு தொடர்பாக மவுனமாக கடந்து சென்று கொண்டிருக்கின்றன. தமிழக மீடியாக்களில் இந்த செய்தி, துண்டு செய்தியாகக் கூட பதிவாகவில்லை. சரி, கேரளா மீடியாக்களாவது, குரல் கொடுப்பார்கள் என்று பார்த்தால், அவர்களும் உண்டியல்கள் ஆட்சிக்கு கள்ளத்தனமாக ஜால்ரா அடித்து, கிரீஷ்பாபுவுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டனர்.