ஏமாந்த வட இந்தியர்கள்
‘ஒருவனை ஏமாத்தணும்னா, அவனோட ஆசையைத் தூண்டனும்’.. என்று சதுரங்க வேட்டை படத்தில் ஒரு டயலாக் வரும். இந்த டயலாக்கை இந்த முறை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில் களமாடிய காங்கிரஸ் கட்சி மீது, இப்போது ஏமாந்த வாக்காளர்கள் மண் வாரி தூற்றிக் கொண்டிருக்கின்றனர்.
என்னதான் நடந்தது?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் செய்தது. இதற்காக ஜோடா யாத்ரா, நியாய் யாத்ரா என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இப்போதைய லோக்சபா எதிர்கட்சித் தலைவருமான ராகுல்கான்டியை நாடு முழுவதும் அலைய வைத்தனர். ஆனால், அவர் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம், பிரதமர் மோடிக்கு ஆதரவான சூழல் நிலவியதால், காங்கிரஸ் செய்வதறியாமல் தவித்தது.
மகாராஷ்டிராவில் அறிவித்த ராகுல்
தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு மாநிலங்களிலும், காங்கிரசுக்கு எதிரான ஆதரவு அலையால் அதிர்ந்த ராகுல், அதை அப்படியே மடக்கிப்போட்டு, காங்கிரசை கரையேற்ற நினைத்தார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்க ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவோம்’’ என்றார். ராகுன் கான்டியின் இந்த அறிவிப்பு, உண்மையில் மிகப் பெரிய அதிர்வை, பாஜக நிர்வாகிகளிடம் ஏற்படுத்தியது என்பது நிர்சன உண்மை.
நடைமுறை சிக்கல் என்ன?
வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே வெறியில், என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம் என்பது தெரியாமல், ராகுல்கான்டி பேசிக் கொண்டிருந்தார். வேலை இல்லாமல் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெட்டியாக சுற்றும் இளைஞர்களுக்கு மாதம் 8 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை, ஒவ்வொரு மாதமும் ‘கடா கட், கடா கட் ’ என்ற ரீதியில், அவர்களது வங்கிக் கணக்கில் வந்து விழும். குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு, 9ம் முதல் பிளஸ் 2 வரையிலா வரையிலான மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் என்று அடித்துவிட்டார்.
இந்தியாவின் பட்ஜெட் சராசரியாக 46 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில், ராகுல்கான்டி அறிவித்தத் திட்டங்களை செயல்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு அதிகமாக பல லட்சம் கோடி ரூபாய் கடன் பெற வேண்டியிருக்கும் என்றும், இதனால், நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்தனர்.
பொய்மையும் சாதிக்கும்…
வாய்மை ஊர் சுற்றி வருவதற்குள், பொய்மை உலகைச் சுற்றி வலம் வந்துவிடும் என்பதை ராஸ்தான், உபி மாநிலங்களின் லோக்சபா தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்தன. அதாவது காங்கிரஸ் சார்பில் ராகுல்கான்டி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொடுத்த வாக்குறுதிகளால், வட இந்திய வாக்காளர்கள் மத்தியில் ஒரு பெரிய மனமாற்றம் ஏற்பட்டது எனலாம். இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாஜவின் சரிவுக்கு இது வழி செய்தது.
ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் 24ல் பாஜ வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டநிலையில் 14 இடங்களில் மட்டுமே பாஜ வென்றது. காங்கிரஸ் 8 இடங்களிலும், கம்யூனிஸ்ட் உட்பட பிற கட்சியினர் 3 இடங்களிலும் வென்றனர்.
இதேபோல், உபி மாநிலத்தில் 70க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜ, 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் சமாஜ்வாதி 37 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ராகுல்கான்டி செய்தி பித்தலாட்டம்
தேர்தல் முடிவுகள் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் ஆரவாரத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் புதுவிதமான பிரச்சனை வெடித்தது. அதாவது, கர்நாடகாவில் உள்ள தபால் நிலையங்களில், காங்கிரஸ் அறிவித்த ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற உத்தரவாதத் தொகையை பெறுவதற்காக, தபால் நிலையங்களில் கணக்குகள் தொடங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஜூன் 5ம் தேதி உத்திரபிரதேசத்தின் லக்னோ உட்பட பல மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு முன்னர்பெண்கள் திரண்டு, ‘‘நீங்கள் உத்தரவாதம் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் எங்கே?’’ என்று கேள்வி கேட்கத் தொடங்கினர். இதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டம்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
உறுதிமொழி பத்திரமும்,
உத்தரவாத அட்டையும்
தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என்று சொன்ன ராகுல்கான்டியின் வார்த்தைகளை, அப்படியே ஒரு அட்டையில் காங்கிரசார் அச்சிட்டுள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல
3 கோடிக்கும் அதிகமான அட்டைகளை உத்திரப்பிரதேசத்தில் அச்சடித்து, ஒவ்வொரு வீடாக வினியோகம் செய்துள்ளனர். சுலையாக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், உழைக்காமல் கிடைக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் இருந்த அப்பாவி வாக்காளர்களும், மோடி மற்றும் யோகி அரசின் நலத்திட்டங்களை மறந்து, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். இதனால் நாட்டின் 32 தொகுதிகளில், சொற்ப ஓட்டுகளில் பாஜக தன் வெற்றியைப் பறி கொடுத்து, பெரும்பான்மைக்கத் தேவையான இடங்களைத் தவறவிட்டது.
காங்கிரசின் பொய்யால் பாஜக சரிந்த இடங்கள்
தொகுதி மாநிலம் ஓட்டு வித்தியாசம்
சண்டிகர் யூனியன் 2,504
ஹர்மிர்பூர் உபி 2,629
சலேம்பூர் உபி 3,573
துலே மகாரஷ் 3,831
தவுராஹாரா உபி 4,449
டாமன் டையூ யூனியன் 6,225
அரம்பாக் மே.வங்கம் 6,339
பீட் மகாராஷ். 6,553
தெ.கோவா கோவா 13,535
திருப்பதி ஆந்திரா 14,569
அஓன்லா உபி 15,969
தி.புரம் கேரளா 16,077
மும்பை வடக்கு மகாராஷ். 16,514
ஜூன்ஜூனாகு ராஜஸ்தான் 18,235
சசராம் பீகார் 19,157
அமராவதி மகாராஷ் 19,731
லூதியானா பஞ்சாப் 20,942
சந்தாவுலி உபி 21,565
சோனிபட் அரியானா 21,816
தும்கா ஜார்கண்ட் 22,527
முசாபர்நகர் உபி 24,672
தவன்கெரே கர்நாடகா 26,094
மேதினிபூர் மே.வங்கம் 27,191
குல்பர்கா கர்நாடகா 27,205
எடா உபி 28,052
அகமதுநகர் மகாராஷ். 28,929
மும்.வடகிழக்கு மகாராஷ் 29,861
பக்சார் பீகார் 30,406
பனஸ்கந்தா குஜராத் 30,406
பங்குரா மே.வங்கம் 32,778
பதேபூர் உபி. 33,199
கேரி உபி 34,329
என்று ஒட்டு மொத்தமாக 6 லட்சத்து 9 ஆயிரத்து 639 ஓட்டுகளில் பாஜ தன் பெரும்பான்மை இடத்தை பறி கொடுத்துள்ளது. இத்தனைக்கும் காரணம், ராகுல்கான்டி கோஷ்டியினர் வினியோகித்த போலியான கேரண்டி கார்டு அட்டைதான். ஆனாலும், மத்தியில் பாஜ தன் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், போலியான வாக்குறுதிகள் மற்றும் கேரண்டி அட்டைகளைக் கொடுத்து ஓட்டு வாங்கிய காங்கிரஸ், இப்போது வாக்காளர்கள் மண் வாரி தூற்றுவதால், செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறது. வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில், ராகுல்கான்டியை கிண்டல் செய்து, கடாகட் பேங்க் ஆப் பப்பு என்ற மீம்ஸ்கள் உலாவரத் தொடங்கியுள்ளன.
சட்டம் தண்டிக்கும்
சட்டப்படி நடவடிக்கை பாய்வதற்கான வழக்குகள் குவியத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் பெற்றுள்ள 99 எம்.பிக்களையும் செல்லாதவையாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. தர்மம் நிலைக்க வேண்டும் என்றால் இலவசங்கள் ஒழிய வேண்டும்.
நமது நீதி மன்றங்கள் தர்மத்தை இந்தியர்களை இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுமா?