Friday, April 19, 2024

தண்ணீர்... தண்ணீர்...

watertap

தமிழ் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் தண்ணீர்… தண்ணீர் படம், நீரின் சேவையை, அதன் தேவையை பொட்டில் அடித்தார் போல் சொல்லிச் சென்றது. 1981ம் ஆண்டில் வெளியான இந்தப் படம், ஏறக்குறைய இன்று தமிழகத்தின் நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து, மாபெரும் தண்ணீர் பஞ்சத்தை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இது ஒரே நாளில் ஏற்பட்ட நிகழ்வு அல்ல என்பதை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

 

‘ஜீரோ டே’

அதற்கு முன்னர் ஒரு நினைவூட்டல். தென்னாப்பிரிக்காவின், கேப் டவுன் நகரம், கடந்த ஆண்டில் ‘ஜீரோ டே’ பிரச்னையை சந்திக்க விருந்தது. அதாவது, உலகில் தண்ணீர் இல்லாத முதல் நகரம் என்ற அறிவிப்பை எதிர்நோக்கி இருந்தது. ஆனால், அதன் அண்டை மாகாணங்கள் தண்ணீர் கொடுக்க முன்வந்து, சொந்த சகோதரர்களை, பாதுகாக்க வழி செய்தனர். இதனால், ஜீரோ டே பிரச்னையில் இருந்து, தப்பித்தது கேப்டவுன்.

தமிழகத்தில் ‘ஜீரோ டே’

drinkingwater
waterproblem

ஆமாம், தென்னாப்பிரிக்காவுக்கு முன்னதாகவே, தமிழகம் ஜீரோ டே பிரச்னையை எப்போதோ சந்தித்து விட்டது என்பதே உண்மை. ஏன், இப்படி குறிப்பிடுகிறோம் என்றால், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம், தன் குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டு தண்ணீருக்கு அணை நீரையே நம்பியிருந்தது. நிலத்தடி நீரை துளியும் பயன்படுத்தவில்லை. ஜீரோ டே நெருக்கடி கொடுத்த நிலையில், நிலத்தடி நீரை, பொது முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேப்டவுன் நகர நிர்வாகம் திட்டமிட்டது.

 
 

ஆனால், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் தொகை பெருகிய போதும், அதற்கு ஏற்றார்போல், குடிநீர் பயன்பாட்டுக்கான மாற்றுத் திட்டங்கள் இல்லை. சிறிய பெரிய அணைகள் கட்டியதாக திமுக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், முறையான குடிநீர் வசதிகளை அதிகரிக்கவில்லை. இதில், அதிமுக அரசும் விதிவிலக்கு அல்ல. வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் என்பது, இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள பரிதாப நிலைதான். இதனால், பொதுப் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கு, தமிழக மக்கள் பெரும்பாலும் நிலத்தடி நீரையே நம்பியிருக்கத் தொடங்கினர்.

 
 

கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் தொகை பெருகிய போதும், அதற்கு ஏற்றார்போல், குடிநீர் பயன்பாட்டுக்கான மாற்றுத் திட்டங்கள் இல்லை.

 
 

சேமிப்பே இல்லாமல் செலவு?

சரியான குடிநீர் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான தண்ணீர் திட்டங்கள் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போதிய மழை இல்லாத நிலையில், இருக்கும் நீர் நிலைகளும் மாயமாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், தமிழகத்தில் பெய்யும் ஒட்டு மொத்த மழை நீரில் 50 சதவீதம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், ஆழ்குழாய் கிணறுகளின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பூமியின் மையத்தை நோக்கி நீண்டு கொண்டே இருக்கிறது.
1980ம் ஆண்டுகளில் ஆழ்குழாய் கிணறுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் துளைக்கப்பட்ட போது, 30 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. இப்போது குறைந்தபட்ட ஆழ்குழாய் கிணற்றின் ஆழம் 600 அடிகள். 40 ஆண்டுகளில் 20 மடங்கு ஆழத்தில் தண்ணீர் கிடைப்பது நமது சாபம் என்றே சொல்ல வேண்டும். இதற்குக்காரணம், பூமிக்கு கீழ் உள்ள தண்ணீர், அனைவருக்கும் பொது என்ற மனப்பான்மை நம் மக்களுக்கு இல்லாமல் போனதுதான். அதேநேரத்தில், பெருகிவிட்ட மக்கள் தொகை, அதிகரிக்கும் வீட்டு கட்டுமானங்கள் ஆகியவையும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை அதிரிக்க பிரதான காரணமாகும்.

 
 

காணாமல் போகும் ஏரி, குளங்கள்!

சுபேதார் ஹர்னாம் சிங் தலைமையில் 10 வீரர்கள் ஒரு பிரிவும், சுபேதார் சன்சார் சந்த் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு பிரிவும் தாக்குதலுக்கு தயாரானது. நைப் சுபேதார் பாணா சிங் தலைமையில் ஒரு பிரிவு ரிஸர்வாக வைக்கப்பட்டது.
ஹர்னாம் சிங் தலைமையிலான படைப்பிரிவு முன்னேறும் போது தான் முன்னர் தாக்குதலில் இறந்து போன ராஜீவ் பாண்டே மற்றும் பல வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இறந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருந்தாலும் உறை பணியில் இவர்களது சடலங்கள் கெடாமல் இருந்தது! மாவீரர்களின் உடல்களை பேஸ் காம்பிற்கு கொண்டு வந்துவிட்டு மேலும் முன்னேறும் போது பாகிஸ்தானியரின் தாக்குதலுக்கு ஆளாயினர்.

pond

கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு பதிலாக அவர்கள் காவு வாங்கியது, 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் மற்றும் குளங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் இருந்து 39 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரி, குளங்களில் இப்போது 32 ஆயிரம் மட்டுமே அரசு ஆவணங்களில் உள்ளன. அப்படியானால் மீதம் உள்ள நீர் நிலைகள் என்னவானது?

 
 

நுங்கம்பாக்கம் ஏரியே சாட்சி!

building

திமுக ஆட்சிக் காலத்தில் வள்ளுவருக்கு கோட்டம் அமைப்பதாக கூறி, நுங்கம் பாக்கம் ஏரியை மூடி, ஏரி, குளங்கள் மூடுவதற்கு விதைபோட்டவர் திமுக ஆட்சியில் முதலராக இருந்த கருணாநிதி. சென்னையில் உள்ள நீர் நிலைகள் எப்படி மாயானது? இன்று வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை உட்பட பல பகுதிகள் மழைக் காலங்களில் வெள்ளத்தில் மிதக்கக் காரணம் என்ன? மித மிஞ்சிய மழையா? இல்லை. மழையின் அளவு சில நேரங்களில் கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், மழை நீரை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நூற்றுக் கணக்கான நீர் நிலைகள் காணாமல் போனதுதான்.

 
 
 

ஏரிகள் மற்றும் குளங்களில் வீடுகள் கட்டி குடியேறும் கட்சிக்காரர்களுக்கு 10 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என்றார்கள். பின்னர், இந்தப் பட்டா வழங்கும் காலம் 5 ஆண்டுகளானது. இப்போது, ஏரி, குளங்கள், கண்மாய் கரைகளில் 3 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா என்ற மகத்தான புரட்சியை செய்தது திராவிட ஆட்சியாளர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஏரிகள், நீர் நிலைகளை அழித்தது மட்டுமின்றி, அவற்றின் வரத்துக் கால்வாய்களையும் மூடி, பிளாட் போட்டு, புதிய கட்டுமான நகர்களை ஏற்படுத்தியது திராவிட ஆட்சியாளர்கள். நிலைமை இப்படியிருக்க, குடம் இங்கே, தண்ணீர் எங்கே திமுக கேட்பதும், அதற்கு அதிமுக அரசு வருண ஜெபம் செய்வதும் மன வருத்தம் ஏற்படுத்தும் செய்திகள்தான்.

ஹர்னாம் சிங் தலைமையிலான படைப்பிரிவு முன்னேறும் போது தான் முன்னர் தாக்குதலில் இறந்து போன ராஜீவ் பாண்டே மற்றும் பல வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இறந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருந்தாலும் உறை பணியில் இவர்களது சடலங்கள் கெடாமல் இருந்தது! மாவீரர்களின் உடல்களை பேஸ் காம்பிற்கு கொண்டு வந்துவிட்டு மேலும் முன்னேறும் போது பாகிஸ்தானியரின் தாக்குதலுக்கு ஆளாயினர்.

laughing old man

ஜெயலலிதாவை கிண்டலடித்த திமுக!

watertank

தமிழகத்தில் 2001ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்லத் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்றால், அது மழை நீர் சேகரிப்புத் திட்டம்தான். இதிலும் ஒரு பித்தலாட்டம் என்னவென்றால், ‘‘எவனாவது மழை நீரை சேகரிப்பானாய்யா? இந்தம்மா செய்யுறது எல்லாம் காமெடியாகத்தான் இருக்கு’’ என்று மாபெரும் சிரிப்பை சொன்னவர், அப்போதைய எதிர் கட்சித் தலைவர் கருணாநிதிதான். ஆனால், அதே மழை நீர் திட்டத்தை மாநிலத்தின் சில பகுதிகளில் கண்ணும் கருத்துமாக பின்பற்றிய பலர், இப்போது வரை தண்ணீர் பிரச்னையின்றி, தங்களையும், தங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களையும் பாதுகாக்கின்றனர்.

 

இப்போது சென்னை மாநகராட்சியின் கமிஷனர், ‘‘இந்த மழைக்காலம் தொங்டங்குவதற்குள், 2 லட்சம் வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக்குவேன்’’ என்று கோஷத்துடன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போது தன்னெழுச்சியாக மழைநீர் சேகரிப்புத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ஏரிகள், நீர் நிலைகளை அழித்தது மட்டுமின்றி, அவற்றின் வரத்துக் கால்வாய்களையும் மூடி, பிளாட் போட்டு, புதிய கட்டுமான நகர்களை ஏற்படுத்தியது திராவிட ஆட்சியாளர்கள். நிலைமை இப்படியிருக்க, குடம் இங்கே, தண்ணீர் எங்கே திமுக கேட்பதும், அதற்கு அதிமுக அரசு வருண ஜெபம் செய்வதும் மன வருத்தம் ஏற்படுத்தும் செய்திகள்தான்.

ஹர்னாம் சிங் தலைமையிலான படைப்பிரிவு முன்னேறும் போது தான் முன்னர் தாக்குதலில் இறந்து போன ராஜீவ் பாண்டே மற்றும் பல வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இறந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருந்தாலும் உறை பணியில் இவர்களது சடலங்கள் கெடாமல் இருந்தது! மாவீரர்களின் உடல்களை பேஸ் காம்பிற்கு கொண்டு வந்துவிட்டு மேலும் முன்னேறும் போது பாகிஸ்தானியரின் தாக்குதலுக்கு ஆளாயினர்.

jayalalita

உயிர் நீரை பாதுகாப்போம்!

river

இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில், தண்ணீரின் அருமையை உணர்ந்து, தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. கிடைக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் சில பகுதிகளில் இல்லை என்பது வருத்தமான விஷயம். குடிப்பதற்கு, சமைப்பதற்குமான தண்ணீர் தேவையை மாற்ற முடியாது. ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக, குளிப்பதற்கு பயன்படுத்திய நீரை கழிவறைப் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லாம். அல்லது தோட்டங்களுக்கு பாய்ச்சலாம். இதனால், ஒரு முறை எடுக்கப்படும் நிலத்தடி மற்றும் பொதுப் பயன்பாட்டு நீர், ஒரே முறையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளில் பயன்படுத்த முடியும் என்பது நிதர்சன உண்மை.

 
 

அதிகரிக்கும் குடும்பச் செலவுகள்!

வழக்கமாக விலைவாசி உயரும்போதுதான் குடும்பச்செலவுகள் உயரும். ஆனால், இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் மட்டும் பொதுப் பயன்பாட்டுக்குமான தண்ணீரை விலை கொடுத்துவாங்க வேண்டிய நிர்பந்தத்தில் பொதுமக்கள் உள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட ஒரு குடம் தண்ணீர் விலை இப்போது 15 ரூபாயாகிவிட்டது. பொது பயன்பாட்டுக்கான தண்ணீர் ஆயிரம் லிட்டர் 250 ரூபாயாகிவிட்டது. இந்த வகையில், ஒரு மாதத்துக்கு தண்ணீருக்கான செலவு ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகிவிட்டது. ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்திர பால் செலவைவிடக் கூடுதல் செலவாகும். எதிர்வரும் மழைக்காலத்தில் பணத்தை சேமிப்பதைப்போல், தண்ணீரையும் சேமிக்கத் தொடங்கிட வேண்டும். நான், நீ என்று இல்லாமல் நாம் என்ற உணர்வுடன், நம் எதிர்கால சந்ததியைப் பாதுகாக்கும் வகையில் தண்ணீரை சேமித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். இப்போது விழிக்காவிட்டால், இனி எப்போதும் நம்மால் மீண்டெழ முடியாது.

colorpots