இந்தியாவின் நீண்ட வாசனை சாலை…

பாரதம் உலகின் அடுத்த யுகத்தை
ஜி20 மாநாட்டின் முடிவில் தொடங்கியிருக்கின்றது,
அந்த மாநாட்டின் முடிவில் மோடி அறிவித்த “டெல்லி பிரகடணம்“ என்பது
உலகில் பெரும் விவாதத்தையும் பலத்த கணிப்புகளையும் தருகின்றது
இன்றைய தேதியில் உலகம் விவாதிக்கும் விஷயம் அதுதான், அதனாலே தான் ரஷ்ய புட்டீனே தானாக முன்வந்து இந்தியாவினை வாழ்த்தி

களத்தில் தானும் இறங்க பார்க்கின்றார்

சீனா வாயில் துணிவைத்து அழுது ஓரமாக சென்று முட்டிகொண்டு நிற்பதும் அதனால்தான்
மோடியின் அறிவிப்புத்தான் உலகை புரட்டிபோட்டிருக்கின்றது, இதெல்லாம் இந்தியா செய்யுமா? அவர்களா என வாய்பிளந்து நிற்கின்றது உலகம்

“india-Middle East-Europe-Corrde “(I.M.E.C) எனும் அந்த நீண்ட சாலை, சந்தேகமே இல்லாமல் சீனாவின் “ஒன்ட் பெல்ட் , ஒன் ரோடு” எனும் பெரும் கனவை தகர்ப்பதற்கே என்றாலும் இங்குள்ள வரலாறும் நிகழ்காலமும் எதிர்காலமும் கவனிக்கதக்கவை

ஐரோப்பாவின் கனவு திட்டம்

16ம் நூற்றாண்டுவரை உலகில் மக்கள் தொகை , செல்வம், தொழில் என முன்னணியில் இருந்த தேசங்கள் இந்தியாவும் சீனாவும்

இந்த இரு தேசங்களையும் நிலத்தால் ஐரோப்பாவுடன் இணைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய பெரும் கனவு, முன்பு பட்டுசாலை என சீன வணிகம் இந்தியாவின் வடக்கு பக்கம் ஊடாக நடந்தது

சீனாவில் இருந்து செல்லும் பாதையில் இந்தியாவும் இணைந்தது, இந்திய ஐரோப்பிய வணிகம் இப்படித்தான் நடந்தது

அலெக்ஸ்டாண்டர் இச்சாலையினை குறிவைத்துத்தான் பாய்ந்து தன் கட்டுபாட்டில் எடுத்தான், 13ம் நூற்றாண்டு வரை இதுதான் இந்திய சீன நாடுகளும் ஐரோப்பாவும் இணையும் சாலையாக இருந்தது குதிரைவண்டி, மாட்டுவண்டி ஒட்டகம் என போக்குவரத்து இருந்த காலம் அது, இந்தியாவின் விளைச்சல், சீன பட்டு என எல்லாம் இப்படித்தான் ஏற்றுமதியாயின‌

துருக்கியின் ஏகாதி பத்தியம்

கொஞ்சம் கடல் போக்குவரத்து இந்தியாவுக்கும் அராபியாவுக்கும் கிழக்கு ஆப்ரிக்காவுக்கும் இருந்தது, அந்த அராபியாவில் இருந்து துருக்கி ஊடக ஐரோப்பாவுக்கு பொருட்கள் செல்லும், மிளகு அப்படித்தான் சென்றது

பட்டுசாலை துருக்கி ஊடாகத்தான் செல்லும்! அந்த ஸ்காண்டாட்டி நோபிள் என்பதே முக்கிய சந்திப்பு அதைத்தான் அலெக்ஸ்டாண்டரும் அவனுக்கு பின் ரோமர்களும் வைத்திருந்தார்கள், வல்லரசுகளின் ஒரே நோக்கம் வியாபாரம் எனும் வகையில் அதுதான் பிடியாக இருந்தது
13ம் நூற்றாண்டில் ஆட்டோமன் துருக்கியர் அதை கைபற்றி போக்குவரத்தை தடுத்தார்கள்

வழிதேடி அலைந்த ஐரோப்பியர்…

இதன் பின்பே நிலவழி தேடி ஐரோப்பியர் கப்பல் கப்பலாக ஓடி அமெரிக்காவில் முட்டி பின் ஆப்ரிக்காவினை சுற்றி இந்தியாவினை அடைந்தார்கள்

எகிப்து பக்கம் ஆப்ரிக்கா ஆசியா இடையே சூயஸ் கால்வாய் வெட்டினால் போக்குவரத்து எளிது என்றார்கள்! ஆனால் சாத்தியமில்லா காலமது.

இப்படியே 17, 18ம் நூற்றாண்டுவரை நிலவழி போக்குவரத்து துருக்கியரிடம் சிக்கிற்று, ஐரோப்பா இந்தியா சீனா நிலவழி போக்குவரத்து சாத்தியமில்லாமலே இருந்தது

பிரிட்டிஷ் இந்தியா

பிரிட்டிசார் இந்தியாவினை கைபற்றினர், இங்கே மொகலாயருக்கும் வீரசிவாஜியின் இந்து அரசுக்கும் சுமார 100 ஆண்டுகால பெரும் போர் நடந்தது, அதனில் அப்பக்கம் இப்பக்கம் ஊடுருவி இந்தியாவினை பிரிட்டிசார் கைபற்றினர்

எதிர்த்த சீனா

ஆனால் சீனாவினை கைபற்ற முடியவில்லை அங்கே வலுவான அரசன் இருந்தான் இதனால் ஹாங்காங் தீவினை தவிர பிரிட்டிசாரால் சீனாவுக்குள் நுழையமுடியவில்லை

நில வழிதிட்டம்

இந்தியாவினை கைபற்றிய கிழக்கிந்திய கம்பெனி 1857ல் அதனை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்த பின் இந்தியாவினை ஐரோப்பாவுடன் நிலவழியில் இணைக்கும் திட்டம் உருவானது

ஆனால் சிக்கல் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பக்கம் இருந்தது, அந்த ஒருமாதிரி கூட்டத்தை சமாளிக்க முடியா நிலை, பெர்ஷியா எனும் ஈரானில் இருந்த மன்னராட்சி, துருக்கி சுல்தான்களின் வலிமை என அது சாத்தியமில்லாமல் போயிற்று

1917ல் நடந்த ரஷ்ய புரட்சிக்கு பின் சோவியத் எல்லை ஆப்கன் வரை வந்தபின் பிரிட்டன் அதனை செய்யமுடியவில்லை

ஆனால் 1940ல் அந்த ஜெர்மானிய ஆட்சியாளன் அதை சிந்தித்தான், அவன் இந்தியாவினை தொடவில்லை மாறாக பெர்லின் பாக்தாத் இணைப்பு என ரயில்விட முனைந்தான்

ஆனால் அவனை உலகநாடுகள் சரித்துபோட அவன் திட்டம் நடக்கவில்லை, அதே நேரம் ஆட்டோமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தபின் பழைய சாலை ஐரோப்பியர் வசமாயிற்று

சூயஸ் கால்வாயும் தோண்டபட்டபின் போக்குவரத்து எளிதானது

எனினும் மிக எளிதான சாலை இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் அவசியம் என கருதபட்டன, காரணம் பிரிட்டிசார் சென்றாலும் அவர்கள் தொழிலெல்லாம் இந்தியாவிலேதான் இருந்தன‌
ஆனால் விவகாரம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோவியத் என வந்ததால் வாய்ப்பே இல்லாமல் போனது

1950

1950ல் இரு தேசங்கள் உலகை மிரட்டின ஒன்று அமெரிக்கா இன்னொன்று சோவியத் ரஷ்யா

சோவியத் ரஷ்யா சீனாவினை தன் கைபாவையாக்கிற்று, 1950களிலே கம்யூனிஸ்டுகள் கைக்கு சென்ற சீனா, அரசனை ஒழித்து கம்யூனிச நாடாகி ரஷ்ய காலணியானது

சுதந்திர இந்தியாவினை தன் கம்யூனிச சோஷலிஸ்ட் கொள்கையால் குழப்பி வைத்தது ரஷ்யா. இந்தியா மிக மிக குழம்பியே இருந்தது, பிரிட்டிஷ் ஆதரவு ரஷ்ய ஆதரவு என குழம்பியே நின்றது! அதற்கென கொள்கைகள் இல்லை என்றானது.

இதனால் இச்சாலைகள் பற்றி யோசிக்க யாருமில்லை, ஆனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய சாலை அதுதான்! ஆனால் சிந்திப்போர் யாருமில்லை

தெளிவான சீனா

இந்தியா இப்படி குழம்பி நிற்க சீனா தெளிவாக இருந்தது, 1960க்கு பின் சீனா ரஷ்ய பிடியில் இருந்து மெல்ல வெளிவரமுயன்றது 1975ல் அமெரிக்காவுடனே நட்பை ஏற்படுத்தியது

1990ல் சோவியத் சிதற சீனா சீற ஆரம்பித்து! உலகில் வேகமாக முன்னேறிற்று, தடையில்லா வர்த்தகம் அவர்களுக்கு பெரும் சக்தி கொடுத்தது

2010களில் தங்கள் பெரும் கனவை தொடங்கினார்கள் , சோவியத் இல்லாததால் எளிதாக அவர்களால் திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது, “ஒன் பெல்ட் ஒன் ரோடு” என மகா பிரமாண்டமாக சாலை, ரயில், கப்பல் என எல்லா வகையிலும் வளைத்தார்கள்.

சூயஸ்கால்வாய் இருவாரம் முடங்கியபோது சீனா ரயில்வழி போக்குவரத்தை ஐரோப்பாவுக்கு செய்தபோது உலகம் அதிரத்தான் செய்தது
இந்தியாவில் இதுபற்றி யோசிக்க ஆளே இல்லை

மோடியின் பிரம்மாண்ட திட்டம்

இங்கேதான் இப்போது மோடி அடித்து விளையாடுகின்றார், பெரும் மக்கள் தொகை கொண்ட

இந்தியா மிகபெரிய சந்தை என்பதால் இந்த சந்தையின் போக்குவரத்து அவசியம்

இதனால் மோடி அழகான திட்டமொன்றை வகுத்தார்! இந்தியாவும் அராபியாவின் முக்கிய துறைமுகங்களும் கடல்வழியாக இணைக்கபடும் பின் ரயில் சாலை என அவை ஐரோப்பாவுக்கு செல்லும்

ஆப்ரிக்காவுக்கும் செல்லும்

இந்த திட்டம்தான் இன்று பேசும் பொருளாகியிருக்கின்றது இதனால் சீனாவின் ஏகபோகம் தடுக்கபடும், இந்திய சந்தை பெரிதாகும்

இந்தியாவின் மேற்கு கடற்கரை அபார வளர்ச்சி அடையும்

இதனால் நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பது போல் பாகிஸ்தானின் கராச்சியும் பலனடையும்! இதனால் தான் மனதுக்குள் “நன்றி மோடி நன்றி” என சொல்கின்றார்கள்

புட்டினின் வரவேற்பு

இப்படி நிலமைகள் மாறி உலக நாடுகளும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இதனை வரவேற்கும் போதுதான் உள்ளே வருகின்றார் புட்டீன்

புட்டீன் தானே முன்வந்து பேசுவதுதான் இப்போது உலகை கவனிக்க வைக்கின்றது

புட்டீனின் திட்டம் என்னவென்றால் கடல்வழியாக அராபியா சென்று நிலம் வழியாக ஐரோப்பாவுக்கு செல்லும் இந்திய சாலை இருக்கட்டும்! அது வேறு…

அப்படி ஒரு சாலை ரஷ்யாவினையும் தன் முன்னாள் சோவியத் நாடுகளான துர்க்மெனிஸ்தான் தஜிகிஸ்தான் ஊடாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை தொட்டு இந்தியாவுக்குள் வரவேன்டும் என்பது தான்.

இதனால் என்னாகும் என்றால் அவருக்கு ஒரு அழகான பிடி கிடைக்கும்! அது எண்ணெய் வர்த்தகம்

ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்ய நினைத்ததே இந்த நிலவழி ரஷ்ய எண்ணெயினை தடை செய்யத்தான்! அங்கு நடந்த அத்தனை குழப்பங்களுக்கும் அதுதான் காரணம்

ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் எண்ணெய் வளம் உண்டு அதனை ஆப்கன் ஊடாக இந்தியாவுக்கு கொண்டு செல்லவேண்டும்! பெரும் வியாபாரம் செய்யவேண்டும் என்பது ரஷ்ய திட்டம்

இதை மேற்குலக எண்ணெய் கம்பெனிகள் தடுக்கத்தான் ஆப்கானிஸ்தானை கையில் எடுத்தார்கள்! என்னென்னவோ நடந்து முடிந்தது. பாவம் அப்பாவி ஆப்கன் மக்கள்.

இப்போது கருங்கடலில் ரஷ்ய ஆதிக்கம் முடிவுக்கு வரும் நிலையில், இனி அவர்களின் மேற்கு கடல் போக்குவரத்து சிக்கலாகின்றது. கிழக்கே ஜப்பான் பக்கம் இருந்து கப்பல் வந்தால் செலவு அதிகம்

இதனால் இந்தியா அராபியா ஊடாக செய்யும் திட்டம் போல் நிலவழியால் தங்களுடனும் இணையலாம் என கோடி காட்டுகின்றது ரஷ்யா

இங்கே மிக கவனிக்கவேண்டிய விஷயம், இந்த இடத்தில் தான்! ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கான் எல்லை எனும் முக்கிய புள்ளி இந்தியாவின் பெரும் தலைவலி.

இங்கே சீனா பெரும் பிடி வைத்திருக்கின்றது, இனி ரஷ்யா தலையிட்டால் அது தீரும்.

ஆக இருபெரும் சாலைகளை இந்தியா தொடங்கும் நேரமிது, மிக மிக பிரமாண்ட திட்டமிது

சொல்லப்பட்ட கதைகள்

ராமர் கோவிலை, காஷ்மீரை தொட்டால் அரபு நாடுகளை இழக்க நேரிடும், மதமாற்ற கிறிஸ்தவர்களை தொட்டால் ஐரோப்பா பகைக்கும், கம்யூனிஸ்டுகளை தொட்டால் ரஷ்யா விடாது என அச்சுற்த்திவைக்கபட்ட தேசம் இந்தியா

இந்தியாவின் எல்லா பலஹீனமும் இதில்தான் இருந்தது

இதோ காஷ்மீர் இந்தியாவுக்காகி விட்டது! ராமர்கோவில் உருவாகிவிட்டது! அராபியாவோடு நல்ல உறவு வந்து வலுத்துவிட்டது!!

மணிப்பூரில் கூட கிறிஸ்தவநாடுகள் தலையிடாதபடி பார்த்துகொள்ளபட்டாயிற்று! இதோ ஐரோப்பா இந்தியாவினை வரவேற்கின்றது…

கம்யூனிஸ்டுகளை கட்டைவண்டியில் ஏற்றியாகிவிட்டது, புட்டீன் ஓடி வந்து பணிகின்றார்
ஆக மோடி எனும் மாமனிதன் எவ்வளவு ராஜதந்திரமாக தேசத்தை வளர்த்து செல்கின்றார் என்பது புரியும்

வளம் காணும் இந்தியா

பாரத தேசத்தின் மும்பை, குஜராத் போன்ற பக்கமும் மேற்கு கர்நாடகமும் கேரளத்தின் வடபகுதியும் பெரும் பாய்ச்சல் காட்டும்! அடுத்த 20ம் ஆண்டில் அது நடக்கும்

ஆனால் பாவம் கேரளா…

துரதிருஷ்டவசமாக தென் கேரளமும், கன்னியாகுமரியும் இந்த வளர்ச்சிக்கு வராது.

காரணம் விழிஞம் துறைமுகமும் , தேங்காய்பட்டின பெரும் துறைமுகமும் கிறிஸ்தவ கும்பலால் அவர்கள் எதிர்ப்பால் தள்ளி போடபட்டுவிட்டன…‌

ஐரோப்பிய கிறிஸ்தவநாடுகளே இந்தியாவினை அழைத்து சாலை கேட்கும் நேரத்தில் இவர்கள் துறைமுகங்களை எதிர்த்தார்கள்

இதனால் இந்த வளர்ச்சி பிற்போடபட்டுவிட்டது ,இனி அவை வளர 100 ஆண்டுக்கும் மேலாக பின்னால் செல்லலாம்

ஏமாந்த கேரளா

கிறிஸ்துவ பாதிரிகளை நம்பி அந்த பிரதேச மக்கள் தங்கள் மேல் தாங்களே மணிப்பூர் மக்களை போல மண் அள்ளி போட்டுகொண்டார்கள்

கிறிஸ்தவம் வளர்ச்சிதரும் என்பதெல்லாம் முழுக்க சரியல்ல அப்படியானால் மணிப்பூர் இன்னொரு சுவிஸ் போல் ஆகியிருக்க வேண்டும்! ஆகவில்லை ஏன்?

கிறிஸ்தவம் அரசியலான இடத்தில் வளர்ச்சியே வராது, அவர்களால் ஒரு முன்னேற்றமும் கொடுக்கமுடியாது

இனி குஜராத்தும் மும்பையும் பெரும் இடம் பிடிக்கும் நேரம் இது. தேங்காய்பட்டனமும் விழிஞமும் சிலுவை அடியில் கருவாடு காயவைத்து பார்த்துகொண்டிருக்கும் நேரம் தெரியவரும். இந்த பாதிரியார்களால் வந்த நஷ்டம்.

என்ன பலன்??

ஜி20 மாநாட்டால் என்ன பலன் என வழக்கம்போல் திராவிட மணிகள் கொந்தளிக்க தொடங்கிவிட்டன‌

ஒரு உலகளாவிய சாலை என்பதை இந்தியா தனியே செய்யமுடியாது! ஏகபட்ட நாடுகளின் அனுமதி அவசியம், அதைத்தான் சாதுர்யமாக பெற்றிருக்கின்றார் மோடி

இதெல்லாம் இந்த கோஷ்டிகளுக்கு புரியாது , மண் அள்ளுதல் , பாறைகளை வெட்டி சுரண்டுதல் போன்றவற்றை தவிர ஒன்றும் தெரியாது

ஒரு வாதத்துக்கு ஆப்கன் எல்லையில் சாலை கட்டும் ஒப்பந்தம், பாலம் கட்டும் ஒப்பந்தம் தருகின்றோம் அங்கே மண்ணும் கல்லும் உண்டு என சொல்லுங்கள்

“பாரத நாடு என்நாடு, பாரத குவாரி என் சவாரி” என கிளம்பிவிடுவார்கள், அவ்வளவுதான்.

மோடி வேண்டும் இன்னும் இருமுறை..

மோடி புதுயுகத்தில் தேசத்தை முன்னெடுத்து செல்கின்றார், எல்லாம் நனவாக இன்னும் இரு முறை அவர் பிரதமராக இருந்து எல்லாம் நடத்தி கொடுத்தல் அவசியம், காரணம் அவரைத்தான் உலகம் முழுக்க முழுக்க நம்புகின்றது

இன்னும் 10 ஆண்டுக்கு அவரே பிரதமராக அமர்ந்துவிட்டால் தேசத்தை எந்த கொம்பலானானும் அடுத்த 300 ஆண்டுக்கு அசைக்கமுடியாது

வாசனை சாலை

சீனாவில் இருந்து அன்று சென்ற சாலை “பட்டுசாலை” எனப்பட்டது, இப்போது இந்தியா ஐரோப்பாவுக்கு அமைக்கும் சாலை “வாசனைபொருள் சாலை” என்றாகின்றது

இதுதான் இந்தியாவின் மிகபெரிய முத்திரை, கைதட்ட வேண்டிய இடம்
சீனா மிக சரியாக தன் அக்கால அடையாளம் பட்டு, அதை தேடித்தான் ஐரோப்பியர் வந்தனர் என சரியாக பெயரை தக்க வைக்கின்றது

இப்போது இந்தியாவும் எங்களுக்கும் ஐரோப்புக்குமான தொடர்பு வாசனை பொருளில்தான் இருந்தது, அதை தேடித்தான் ஐரோப்பியர் வந்தனர், நாங்கள் செல்லவில்லை அவர்களாகத்தான் வந்தார்கள் எனும் பொருளில் “வாசனை சாலை” அமைக்கின்றது

தேசம் எப்படியான முத்திரைகளை பதிக்கின்றது என்பதை நினைக்கும் போது நம்பமுடியா சிலிர்ப்பும் இனம்புரியா மகிழ்ச்சியுமே கண்களில் நீராக வருகின்றது

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்….

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்“