Saturday, March 25, 2023

மோடியை எதிர்க்கும் ஊழல் கட்சிகள்!

lets-support-pm

இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை நிர்ணயிக்கப்போகும் மகாபாரதப்போர் போன்ற லோக்சபா தேர்தல் களம் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் களைகட்டவுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், எண்ணற்ற சீர் திருத்த நடவடிக்கைளை நாடு சந்தித்துள்ளது.

 

மோடி மீண்டும் பிரதமரானால்...

tmcmeeting1

பிரதமர் மோடி மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் கூற முடியாத நிலையில் தவித்து வரும் எதிர் கட்சிகள், வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானால் தங்களால் ஊழல் செய்ய முடியாது என்றும், ஊழல் செய்த பணத்தை வெளியில் கொண்டு வர முடியாது என்றும் மிரண்டுபோயுள்ளன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மயக்கத்தில் உள்ள எதிர் கட்சிகள் இணைந்து, ‘நீ அரசி கொண்டு வா. நான் உமி கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் பொரி செய்து ஊதி ஊதி சாப்பிடலாம்’ என்ற கூட்டாச்சோறு விளையாட்டைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணிக்கான விளை யாட்டை தமிழகத்தில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

tmcmeeting2

குட்டுப்பட்ட ஸ்டாலின்!

முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமாகவும் இருந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேசுக்கு இது ஏகக்கடுப்பை கொடுத்துவிட்டது. ‘ஸ்டாலினை தமிழ்நாட்டுக்கு வெளியில் யார் என்றே தெரியாது. அவர் எல்லாம் ராகுலை எப்படி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தலாம்?’ என்று கிண்டலடிக்க, விஷயம் அறிந்த ஸ்டாலின் நொந்து போனார்.

kolkatta1

உபியில் ஒரு கூட்டணி!

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உத்திரப்பிரதேசத்தில் பங்குபோடும் கூட்டணியை சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உருவாக்கியுள்ளன. ‘சமாஜ்வாடி கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் குண்டர்கள். சமூக விரோதிகள்’ என்று விமர்சித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், ‘பகுஜன் சமாஜ் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் காசுக்கு அலைபவர்கள். ஊழல்வாதிகள்’ என்று விமர்சித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் இணைந்து கூட்டணி அமைத்து, காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டுள்ளனர்.

 

மம்தாவின் கூட்டத்திற்கு வரமறுத்த பெண்கள்!

இதுக்குப் போட்டியாக கொல்கத்தாவில் ஒரு பிரமாண்ட கூட்டத்தை கடந்த 19ம் தேதி கூட்டி, தன் கூட்டணித் தலைமை ஆசையை அவிழ்த்துவிட்டுள்ளார் திரிணாமுள் குண்டர் காங்கிரஸ் தலைவர் மம்தாபேனர்ஜி. மம்தா மீதுள்ள வெறுப்பால், பெண்கள் அந்தக் கூட்டத்துக்கு வர மறுத்தனர். அவர்களை மம்தா கட்சியின் குண்டர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி, உயிர் பயம் காண்பித்து கூட்டத்துக்கு அழைத்துவந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால், திரிணாமுள் குண்டர் கட்சி என்று அழைக்க வேண்டியதாகிவிட்டது. சரி, மம்தாவின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டவர்கள் யார் என்று பார்த்தால், நம்ம சந்திரபாபு நாயுடுவும் அதுல இருக்குறாரு. அதாவது, சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மண்ணைக் கவ்விய நிலையில், காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டு, மம்தாவுடன் மேடையேறி இருக்கிறார்.

 

மம்தாவுடன் மேடையில் யார்...

tmc

சரி, மம்தாவுடன் மேடையேறிய மற்றவர்கள் யார் என்று பார்க்கலாமா? நம்ம ஊர் ஸ்டாலின் (ஊழல்களுக்கு பேர் போனவர்), சந்திரபாபு நாயுடு ( பேரன் பேரில் 18 கோடி ரூபாய் சொத்து காண்பித்தவர்), பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா (ரெண்டு பேரும் காஷ்மீர் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள்) அகிலேஷ் யாதவ் (ஊழல், குண்டர்களுக்கு பெயர் பெற்றவர்) குமாரசாமி, தேவகவுடா (மகன், அப்பன் ரெண்டு பேருமே ஊழல்களுக்கு பெயர் பெற்றவர்கள்), ஐக்கிய ஜனதா தள கட்சியின் சரத்யாதவ் (இவர் போபர்ஸ் ஊழல் பத்தி மேடையில் பேசும்போதே விரட்டியடுச்சது அக்கா), போதை ஆசாமி சத்ருகன் சின்ஹா, அதிகார போதை கிடைக்காமல் அவதிப்படும் யஷ்வந்த் சின்ஹா… இவங்கதான் அந்தப் பேரணியில் இருந்த டுபாக்கூர் தலைவர்கள்.

 

என்ன ஒற்றுமை இவர்களிடம்...

இதில் கலந்து கொண்ட ஒரு முக்கிய நபர் லாலுபிரசாத் யாதவ் மகன், சரத்பவார் ஆகியோர். இந்தத் தலைவர்கள் அனைவரிடமும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் ஊழல். எதிர்கட்சிகளின் கூட்டத்தை திரட்டிய மம்தா பேனர்ஜிக்கு, சாரதா சிட்பண்ட் ஊழலில் முக்கியத் தொடர்பு உள்ளது. இதற்காக அந்தக் கட்சியின் மந்திரிகள், எம்பிக்களை சிபிஐ கைது செய்தது தனிக்கதை. இதனால், ஏற்பட்ட கோபம் தீதிக்கு இன்னமும் அடங்கவில்லை.

AB-at-Brigade-rally-11

ஊழலே இவர்களை ஒன்று சேர்க்கிறது!

காங்கிரஸ் கட்சி இந்தப் பேரணிக்கு தன் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது. ஊழல்களை மோடி தோண்டிக் கொண்டே இருக்கிறார் என்ற கோபம். லாலுவின் மகனுக்கு, தன் தந்தையை சிறையில் போட்ட மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திராவின் அரசியலுக்கு மோடி கை கொடுக்கவில்லை என்ற வெறி, நம்ம ஸ்டாலினுக்கு சொல்லவே வேண்டாம். ‘பாஜ 2வது முறை ஆட்சிக்கு வந்தால், எங்களால் வாழவே முடியாது’என்று திமுக எம்பி கனிமொழி கூறியதாக வலைத்தளங்களில் வந்தது செய்தி. இதுவே இவர்கள் எந்தளவுக்கு சிக்கி, சிதைந்துள்ளார்கள் என்பதற்கு உதாரணம்.

 

மேடையில் கேட்ட பேச்சுக்கள்!

ஆட்சி மாற்றத்துக்கான நேரம் என்கிறார் மம்தா, 2வது சுதந்திரப் போர் என்கிறார் ஸ்டாலின். 2014 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் தன்னைத் தவிர அத்தனை அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என்று விமர்சித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திதி முன்னிலையில் பேசியதுதான் உச்சபட்ச காமெடியாகும். இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பதற்காகவே தன் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது காங்கிரஸ். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் ஊழலை ஒழிப்போம் என்றோ, நேர்மையான நிர்வாகத்தை கொடுப்போம், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம் என்றோ பேசவில்லை. மாறாக மோடியை நீக்க வேண்டும். மோடி ஆட்சியின் பதவிக்காலம் எண்ணப்படுகிறது என்றுதான் பேசினார்களே தவிர, ஒருபோதும் நாட்டின் நன்மைக்காக பேசிடவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

நாடு நாசமானால் என்ன?!

எதிர்கட்சிகளின் போக்கைப் பார்த்தால், ஒன்றே ஒன்று மட்டும் நிதர்ஷனமாகப் புரிகிறது. 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலையற்றத் தன்மையைப் போன்ற ஒரு நிலையை மீண்டும் இந்தியாவில் ஏற்படுத்தவும், அதன் மூலம் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கும் மம்தா தலைமையில் கட்சிகள் திரண்டுள்ளன.

“1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலையற்றத் தன்மையைப் போன்ற ஒரு நிலையை மீண்டும் இந்தியாவில் ஏற்படுத்தவும், அதன் மூலம் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கும் மம்தா தலைமையில் கட்சிகள் திரண்டுள்ளன.”

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்து மக்களை வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சியில் உள்ளது. இதற்கு தீதி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். காரணம், சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் தீதியின் ஓட்டு வங்கி என்பதால், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்தப் பேரணியை பெரும் செலவில் நடத்தியுள்ளார்.

 

மீண்டும் ஒரு போரை கொண்டு வருமா இந்த கூட்டணி!

tmc2

இதெல்லாம் அரசியல் ரீதியான பார்வையில், இந்தியா மீண்டும் ஒரு போரை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விடும்போலிருக்கிறது. தேவகவுடா, குஜ்ரால் ஆகியோரை வைத்து விளையாடிய காங்கிரஸ் கட்சியின் செயலால்தான், தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, கார்கில் போர் ஏற்பட்டது. மீண்டும் அதேபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி, நாட்டை சூறையாட வேண்டும் என்ற வெறி மம்தா, அகிலேஷ், மாயாவதிக்கு ஏற்பட்டுள்ளது. நாடு நாசமானால் பரவாயில்லை. நம்ம பாக்கெட் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது இவர்கள் சித்தாந்தம்.

 
 

பாஜக கூட்டத்திற்கு குவிந்த பெண்கள் கூட்டம்!

ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தா கூட்டம் முடிந்த ஒரு சில நாட்களில் அதே இடத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, ஒரு பிரமாண்ட கூட்டத்தைத் திரட்டி, மம்தாவுக்கு தங்கள் கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளார். திரிணாமுள் குண்டர்கள் துப்பாக்கியால் வரவழைத்த கூட்டத்தை, அமித் ஷா, தன் பேச்சால் வரவழைத்துள்ளார். இது திதிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதால், கொதித்துப்போயுள்ளார்.

 
 

பாஜகவின் அஸ்திரம்!

எப்படிப் பார்த்தாலும், பிராந்திய கட்சிகளில் பல, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கை கழுவும் திட்டத்துடன் உள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சி பதட்டத்தில் இருந்தாலும், அதைவிட பதட்டத்தில் இருக்கின்றனர் சந்திரபாபு நாயுடுவும், ஸ்டாலினும். ஸ்டாலின், நாயுடு முன் மொழிந்த ராகுலை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை எதிர்கட்சிகள் என்பது, தெளிவாகிவிட்டது. இதனால், யாருடன் கூட்டணி என்பது தெரியாமல் மேலும் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் நாயுடு, ஸ்டாலின் கோஷ்டியினர். எதிர்கட்சிகளின் குழப்பத்தை, ஓட்டுகளாக மாற்றிக் கொள்ளும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.