செங்கோல் கொண்ட நரேந்திர சோழன்

இராஜராஜ சோழனின் முப்பாட்டனான நரேந்திரராஜ சோழனை உங்களுக்குத் தெரியுமா? பல வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியாத அந்த உண்மையை தெரிந்து கொள்வோமா?

வைர காலம்

இராஜராஜன் காலத்திற்கு முன் மிகச் சரியாக 156 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் நரேந்திரராஜன்! இவன் ஆட்சிக் காலம்..

சோழர் காலத்தின் வைர வைடூரிய காலம் என்று போற்றப்படுவதாக புலவர் சங்கனார் வழுதி குறிப்பிடுகிறார். இவர் காலத்தில் தான் சோழ நாட்டின் பழைய நாணயங்கள் இருமுறை திரும்பப் பெறப்பட்டு புதிதாக அறிமுகப்பட்டதாம்!

158 அடி சிலை

பூம்புகார் கடற்கரையில் முப்பாட்டன் கரிகாலனுக்கு 158 அடி உயரத்தில் சிலை ஒன்றை..
வைத்ததாகவும் பிறகு அது நாகையில் வந்த பெரும் சூறாவளி காற்றில் அழிந்துவிட்டதாகவும் சங்கனார் கூறுகிறார்!

ஒற்றை அடிக்கல்

உலகின் பல நாடுகளுக்கு இந்த சோழன் சென்று வந்ததையும் அவர் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! வடக்கே உஜ்ஜையினியில் ஒரு மிக பிரம்மாண்டமான ஆதுர சாலை (மருத்துவமனை) அமைக்க..

அடிக்கல் நாட்டிய இவர் ஏனோ அதன் பிறகு அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லையாம்! அந்த ஒற்றை அடிக்கல் இன்றும் மதுரா நகருக்கு அருகில் இருப்பதே இதற்கு சான்றாகும்.

கோமாதா சோழன்

விதவிதமான ஆடைகள் அணிவது இசைக்கருவிகள் இசைப்பது இவருடைய பொழுதுபோக்குகளாக இருந்துள்ளது! மேலும் இவர்..

பசுக்களை அளவு கடந்து நேசித்தவர்! இவருக்கு கோப்பெரும் கோமாதா சோழன் என்னும் பட்டபெயரும் உண்டு. ஒரு பசுவுக்காக தன் மகனை தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழனை நினைவு கூறும் வகையில் சோழ தேசமெங்கும் பசுக்களுக்கான கோசாலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டது! சோழ நாட்டில்..

பசு வதை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது! பசும் பால் இலவசமாக விற்பவர்களுக்கு அரசு உதவித் தொகை அளிக்கப்பட்டது! பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் நடைமுறையை கொண்டுவந்ததும் இவர் காலத்தில் தான்.

சோழக் கொடியில் பசுக்களை
கொல்லும் புலிச்சின்னம்..

எதற்கு பசுவையே வைக்கலாமே என்று கூட அவன் தீவிரமாக ஆலோசித்ததாக இத்தாலி நாட்டு யாத்ரீகர் இலியா அலினோ தனது பயணக்குறிப்பு நூலில் எழுதியுள்ளார்!

செங்கோல்

வடக்கே காபூல் முதல் தெற்கே ஆஸ்திரேலியா வரை இவரது தேசம் விரிந்திருந்தது ஒருவருக்கும் தெரியாது! அத்தனை வெற்றிகள்!

அந்தந்த நாட்டை வென்றதும் தன் வெற்றிக்கு அடையாளமாக அங்குள்ள அரசர்களின் செங்கோல்களை பெற்றுக் கொண்டு அந்த நாட்டை அவர்களுக்கே கொடுத்துவிடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தான். அவனிடம் இருந்த செங்கோல்களை வைக்க ஒரு செங்கோல் மியூசியமே இருந்தது என்றால் பார்த்துகோங்க!

வாழ்த்துவதும் கூட…

அதே போல சோழ நாட்டில் அரச உயர் பதவி யார் ஏற்றாலும் அவர்கள் கையில் செங்கோல் தந்து வாழ்த்துவது அவனது ஸ்டைல். உறையூருக்கு அருகிலுள்ள உம்மியபுரம் என்னும் ஊரில் பாணபங்காரன் என்னும் அரண்மனை பொற்கொல்லன் மட்டுமே இவருக்கு செங்கோல் செய்து தந்ததாக வரலாற்றுக் குறிப்புகள்..பலவற்றில் காணமுடிகிறது!

பட்டப் பெயர்களுக்கெனவே ஒரு நூல்

கரிகாலன் கட்டிய கல்லணையில் அடைப்பு ஏற்பட்ட போது அதை தனி ஒரு ஆளாக ஆற்றில் நீந்திச் சென்று அடைப்பெடுத்ததால் இவருக்கு அடைப்பெடுத்த சோழன் என்ற பட்டப்பெயரும் உண்டு! இவரது பட்டப் பெயர்களுக்கென்றே ஒரு தனி நூல் எழுதலாம் என்கிறார் பெரும் புலவர் சங்கனார்.!
எதிரிகளை திடீர் திடீரென தாக்குவதில் வல்லவரான இவருக்கு திடீரடிச் சோழன் என்ற பட்டப்பெயரும் உண்டு!

இன்று நம்மிடையே ஒருவர்…

இத்தனை சிறப்புகளும் ஒருங்கே பெற்ற இந்த சோழனை நம் வரலாறு மறந்தாலும் அவனைப் போன்றே குணம் கொண்ட ஒருவர் மட்டும் மறக்கவில்லை!

அவருமே செங்கோல் கொண்ட சோழர் தான்!! நரேந்திர சோழர்