Wednesday, April 24, 2024

தோற்றுப் போனேன் என்பது உண்மை தான்...

suba

காவேரி தொலைக்காட்சியில், சுப.வீரபாண்டியன் பேட்டியளித்தது குறித்து, அவரே தந்த தன்னிலை விளக்கம் இது. இணையதளத்தில் வலம் வருகிறது. அவரை கேள்வி கேட்டு ‘தனி ஒருவன்’ மதனிடம் மாட்டிக் கொண்டார் சுப.வீரபாண்டியன்.

 

தன்னிலை விளக்கம் சுருக்கமாக!

‘‘கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், ‘இடக்கு மடக்கான’ பல வினாக்களை என்னிடம் கேட்டார். சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன.’’ என்கிறார் சுப.வீ.

ஊடகங்கள் கூறுவது போல அவர் புதுமையை விரும்புபவர் அல்ல. பழமைவாத இஸ்லாமை பழைய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

இடக்கு மடக்குனா என்ன?

என்ன இடக்கு மடக்கான கேள்விகள். பொதுவாக தமிழ்நாட்டிலுள்ள எல்லா பகுத்தறிவாதிகளையும் பார்த்து ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள் தான். கி.வீரமணியிடம் ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விகள் போன்றவை தான்.

‘‘பெரும்பான்மை சமூக நம்பிக்கைகளை ‘மூடநம்பிக்கை’ என சொல்லும் தி.க.காரன், அதே மூடநம்பிக்கை சிறுபான்மை சமூகத்திடம் இருந்தால் பேசுவதில்லை.

‘‘துர்கா ஸ்டாலினின் இறை நம்பிக்கையை கேலி பேசாத தி.க.காரனின் நாத்திகம், மாரியம்மாளின் இறை நம்பிக்கையை கேலி பேசுகிறது.

அத்திவரதரை காண சென்று பலியான பக்தர்களை காப்பாற்ற துப்பு இல்லை என சொல்லும் தி.க.காரனின் பகுத்தறிவு, ‘‘ஈஸ்டர் திருநாளில் 300 கிறிஸ்தவர்கள் குண்டு வெடிப்பில் செத்தபோது, ‘‘மூணு ஆணியை கடாசிவிட்டு ‘இயேசு’ ஏன் காப்பாற்ற வரவில்லை என்றும் கேட்க வேண்டியது தானே’ என கேட்டால் ’’நாகரீகமில்லாமல் கேள்வி கேட்கிறார்கள்’’ என கண்ணை கசக்குவதா தி.க.காரனின் பகுத்தறிவு

கலங்கலாமா சுபவீ!

‘எடக்கு, மடக்காக தான் கேள்வி கேட்பான். ஈவெராமசாமியின் புத்தியில் சிந்திக்கிற நீங்கள் கலங்காமல் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல முடியவில்லையே. சமூகநீதி பேசுகிற உங்களிடம் தானே கேட்க முடியும்.

தி.மு.க.வில் அத்தனை பேர் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் இவ்வளவு விரைவாக பதவி ஏன்’ என வேறு யாரிடம் கேட்க முடியும். இது எடக்கு, மடக்காக கேட்பதா. சமூகநீதி பேசாத ஆளாக நீங்கள் இருந்தால், உங்களிடம் எவன் இந்த கேள்வியை கேட்க போகிறான். சுப.வீரபாண்டியன் சொல்கிறார். “சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன.” அதென்ன நடைமுறை சிக்கல். யாரிடமெல்லாம் விசுவாசம் தேவையோ, அவர்களை பற்றி பேச இயலாதது நடைமுறை சிக்கல் தானே.

தோற்பதில் குற்றமில்லை!

‘‘அடுத்த நாள் தொடங்கி, இரண்டுவிதமான பின்விளைவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேர்காணலை, என்னை விரும்பாதவர்கள், எனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள் கொண்டாடினார்கள். நேர்காணலில் நான் தோற்றுப் போய்விட்டதாக எழுதினர். நீங்கள் தோற்றுப் போய்விட்டதாக வலதுசாரியினர் மகிழ்வதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டனர்.

“எல்லா நேரமும் நாமே வெற்றிபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது கூட ஒரு விதமான பாசிசம்தான், ஒருமுறை தோற்றால் குற்றமில்லை” என்று நான் சமாதானம் சொன்னேன்.” சுப.வீரபாண்டியன் மட்டுமல்ல இன்றைக்கு ஈவெராமசாமி இருந்தாலும், அவருக்கும் இதே கதி தான் ஏற்படும். “கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் கொடூரமாக, ஈவெராமசாமியின் சாதிக்காரனால் அநியாயமாக கொல்லப்பட்ட பிறகு, ஈவெராமசாமிவிடுத்த அறிக்கை பற்றி, ஈவெராமசாமியிடம் கேள்வி கேட்டு இருந்தால் என்ன சொல்லி இருப்பார். இப்படித்தான் புலம்பியிருப்பார்.

சுப.வீரபாண்டியன் மேலும் கூறியது. ‘இவையெல்லாம் ஒருபுறமிக்க, காவேரி தொலைக்காட்சியில் நான் எதிர்பாராத வேறு சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த திரு.ஜென்ராம், அந்தப் பேட்டி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் என்கிறார்…

 

அப்படியா ஜென்ராம் சார்...!

இதே தான் நடந்தது, ரங்கராஜ் பாண்டேவுடனான கி.வீரமணி பேட்டிக்கும் பிறகும். ரங்கராஜ் பாண்டேவுடன், தந்தி தொலைக்காட்சியையும் திட்டி தீர்த்தனர் தி.க.வினர். எவ்வளவோ பேர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கின்றனர். எடக்கு மடக்கான கேள்விகள் தான் கேட்கப்படுகிறது. ஆனால் கருப்புச்சட்டைக்காரனை போல், “யாரும் வெளியே வந்து “இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறானே’ என ஒப்பாரி வைப்பதில்லை. இறுதியாக சுப.வீரபாண்டியன் கூறியது. “நான் நேர்காணலில் தோற்றுப்போனேன் என்று எண்ணி மகிழ்கின்ற என் இனிய எதிரிகளே! நேர்காணலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக் காலம் உணர்த்தும். ஆனால் நான் இன்னொரு விதத்தில் தோற்றுத்தான் போனேன் என்பது உண்மை.

அந்த ஜென்ராம் எனும் என் இனிய நண்பருக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்ற உணர்வில் தான் தோற்று போகிறேன் என்று கதை சொல்லி முடிக்கிறார் சுபவீ…

நேர்மையான பகுத்தறிவாதியாக அடுத்தமுறை பேட்டிக்கு வாருங்கள் ஐயா…

காவேரி டிவியில் சுபவீ-யின் பேட்டியை கண்ட 10 கருப்பு சட்டை நாயகிகள் மறுநாள் கண்டனம் தெவிக்க கருப்பு சட்டையில் வந்தார்களாம். சரிதான்…