Friday, March 29, 2024

சிகாகோ உலக தமிழ் மாநாட்டில் ள்ளுவரை அவமதித்தது ஏன்?

Groupimg

கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றவாறு தமிழ் சரித்திரங்கள் திருத்தப்படுகிறதா? சிகாகோவில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் பின்னணி என்ன?

பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெற்றது.

 

தமிழக அரசின் சார்பில்...

இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் 20 தமிழறிஞர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR), வட அமெரிக்கத் தமிழ்சங்க பேரவை (Fe TNA) மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் (CTS) ஆகியவை இணைந்து நடத்தின. இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் 20 பேர் கலந்து கொள்ள 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

 

அதிர்ச்சி தகவல்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்தர் தன்ராஜ் என்ற அமெரிக்க பெண்மணி, இந்த மாநாடு தமிழ் மொழியை கிறிஸ்துவ மதத்திற்கு சாதகமாக பயன்படுத்த உதவவுள்ளதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். மொழியை மதத்திற்கு சாதகமாக பயன்படுத்துவது கிறிஸ்துவர்களுக்கு புதிதல்ல என்று கூறிய அவர், தமிழர்களை விழிப்படைய செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்ந்தால் தமிழ் ஹிந்துக்களின் சரித்திரம் புதைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அவர் பேசிய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

ஜி.யு. போப் இன் 200வது பிறந்த நாள்

நடந்து முடிந்த உலக தமிழ் மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முனைவர் பிரான்சிஸ் முத்து, முனைவர் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் முனைவர் ஜார்ஜ் எல். ஹார்ட் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.யு.போப் அவர்களின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

 

குமரி நாகரீகம்

தமிழகத்தில் கிறிஸ்துவ மதமாற்றம் பெரும் அளவில் நடந்து கொண்டிருப்பது தென் கடலோர பகுதியான குமரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் என்பது ஊறறிந்தது. நடந்து முடிந்த உலக தமிழ் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியே குமரி பகுதியின் நாகரிகம் பற்றியது. இந்த தலைப்பில் உரையாற்றியது முனைவர் பிரான்சிஸ் முத்து என்பது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்து நடந்த நிகழ்ச்சியில் முனைவர் ஸ்பென்சர் வெல்ஸ் நடுவராக இருந்துள்ளார்.

 

வள்ளுவனை சந்தேகப்படும் அறிவாளியா இவர்?

திருக்குறள் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் முருகானந்தம், வள்ளுவன் கூறிய “எழுபிறப்பு” (ஏழு பிறவியை) “குழப்பம்”, என்பதாக வர்ணித்து, “எழுபிறப்பு எழுப்பும் குழப்பம்” என்ற தலைப்பில் பேசியுள்ளார். மனிதனுக்கு ஏழு பிறப்பு உள்ளது என்பது ஹிந்து தர்மத்தின் நம்பிக்கையாக விளங்குகிறது. முந்தைய பிறப்புகளில் செய்த கர்ம வினைகள் அடுத்த பிரவிகளிலும் தொடரும் என்பது கர்ப்ப உபநிஷத், சந்தோகிய உபநிஷத் உள்ளிட்ட பல உபநிஷத்துகளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்படுகிறது. வள்ளுவன் கூறிய இந்த எழுபிறப்பு என்பது கிறிஸ்துவ மதத்திற்கு பொருந்தாமல் இருப்பதால் அதை குழப்பம் என்று வர்ணிக்க முடிவெடுத்து விட்டனரா என்ற கேள்வி எழுகிறது. எழுபிறப்பை குழப்பம் என்ற வர்ணித்த தலைப்பிற்கு முனைவர் ஜான் சாமுவேல் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நடுவராக இருந்துள்ளனர். திருக்குறள் கிறிஸ்துவ நூல் என்றும் திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்றும் கிறிஸ்துவ பெண் மதபோதாகர் ஒருவர் கூறிய காணொளி சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

thiruvalluvar

“வள்ளுவன் கூறிய இந்த”
“எழுபிறப்பு என்பது கிறிஸ்துவ மதத்திற்கு பொருந்தாமல்இருப்பதால் அதை குழப்பம் என்று வர்ணிக்க முடிவெடுத்து விட்டனரா”

 

எல்லாம் கிறிஸ்துவர்கள் மயம்!

ஞாயிறு, ஜூலை 7 ஆம் தேதி அன்று நடைபெற்ற, தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில், பேராயர் ரூபன் மரியம்பிள்ளை மற்றும் பேராயர் பவிலு கிறிஸ்து நேசரத்னம் ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தனிநாயகம் அவர்களின் பத்திரிகைப்பணி வழி தமிழ்ப்பணி என்ற தலைப்பில் பேராயர் ரூபன் மரியம்பிள்ளை, தமிழியல் ஆய்வில், கமில் சுவலபில் அவர்களின் தனித்துவமான பங்களிப்பு என்ற தலைப்பில் பேராயர் பவிலு கிறிஸ்து நேசரத்னம் ஆகியோர் பேசியுள்ளனர்.

 

நமது பங்களிப்பு?

இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக மாண்புமிகு தமிழக அமைச்சர் மா.பா பாண்டியராஜன் மாநாட்டில் கலந்துகொண்டு கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசியுள்ளார். மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக ஏர் இந்தியா நிறுவனம் இந்த மாநாட்டிற்கு சில்வர் ஸ்பான்சராக இருந்துள்ளது.

இந்த மாநாட்டிற்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

 

அரசு காப்பாற்றுமா...

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் துணையுடன் தமிழ் மொழியை கிறிஸ்துவ மயமாக்கும் முயற்சியில் சிலர் ஈடுப்பட்டுள்ளனரா என்ற கேள்வி தமிழக ஹிந்துக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் தகுந்த விளக்கம் அளிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அமெரிக்க வாழ் தமிழர்கள் கருணாநிதி கூறுவது போல அமெரிக்கா சென்றும் சோற்றால் அடித்த பிண்டங்களை போல வாழ்கிறார்கள் போலும்.