Friday, October 11, 2024

மமதையால் வீழும் மம்தா பானர்ஜி

இந்திய அரசியலில் பெண் ஹிட்லர், சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. நான் காலாவதி பிரதமரை எல்லாம் சந்தித்துப் பேசுவதில்லை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னர், மம்தா பானர்ஜி உதிர்த்த முத்துக்கள்.

 
 

நானே ராஜா நானே மந்திரி!

‘‘மேற்கு வங்கம் என் கோட்டை. என்னை மீறி யாரும் இங்கே கால் பதிக்க முடியாது. 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்களை வீழ்த்தியவள் நான்’’ என்ற இருமாப்புடன் தான் மம்தா பானர்ஜி கடந்த லோக்சபா தேர்தலை எதிர் கொண்டார். மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான்தான் என்று தனக்குத்தானே பிரகடனம் செய்து கொண்டார். ஆனால், அடாவடி அரசியலையே தன் அடிப்படையாகக் கொண்ட மம்தா பானர்ஜி, தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதில் பெரிய வியப்பொன்றும் இல்லை என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.

 

 

யார் இந்த மம்தா?

மம்தாவின் பிறப்பிடம் கொல்கத்தா நகரம் தான். 1955ம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில், பிரமிளேஸ்வர் மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு பிறந்தார். நடுத்தரக் குடும்பம் என்று சொல்லிவிட்டதால், பெரிய அளவில் வசதி, வாய்ப்புகள் இல்லை. பால்யப் பருவத்தில் தந்தை இறந்து விட, ஆசிரியர் வேலை கை கொடுத்ததால் காயத்ரி தேவிக்கு தன் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அதே நேரத்தில், மம்தாவின் வாழ்க்கைப் பயணம் தனிமையிலேயே தொடங்கியது என்பது வருத்தமான ஒரு விஷயம். பள்ளிப் படிப்பை கொல்கத்தாவில் முடித்த மம்தா பானர்ஜி, ஜொகமாயா தேவி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சிறப்பு பாடப்பிரிவை படித்தார். இதன் பின்னர், ஜோகேஸ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.

 

 

கல்லூரியும், அரசியலும்...

கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் மம்தா படித்த சிறப்பு பாடப்பிரிவு பற்றி பின்வரும் பத்திகளில் விவரித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும், என்பதால் அவரது கல்லூரிப் பருவ அரசியலைப் பற்றி குறிப்பிடுவது அவசியம். மம்தாவின் அரசியல் பயணம் 1970களில் தொடங்கி விட்டது எனலாம். மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக, காங்கிரஸ் தள்ளாடிய நேரத்தில், கட்சியில் இணைந்தார் மம்தா.

அடாவடி போராட்ட குணம் கொண்ட மம்தா, கட்சியில் தனக்கு முந்தைய சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, மடமடவென வளர்ந்தார். 1976ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பதவிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார். மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவின் பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்த மம்தா, தன் அடாவடி போராட்டங்களால் கட்சியினர் இடையே பிரபல்யம் ஆனார்.

 

 

 

இளம் எம்பி...

1984ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியை (2004 காங்கிரஸ் கூட்டணி அரசில் சபாநாயகர்) தோற்கடித்து, நாட்டின் இளம் எம்பியாக லோக்சபாவுக்குள் நுழைந்தார். ஆனால், 1989ம் ஆண்டு தேர்தலில் தோற்றார். இதன் பின்னர், 1991ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார்.

இதன் பின்னர், 1996, 1998, 1999, 2004 மற்றும் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் கொல்கத்தா தெற்கு லோக்சபா தொகுதியின் அசைக்க முடியாத எம்பியாக மம்தா பானர்ஜி வலம்வந்தார். இதன் பின்னர், இவரது கவனம் மாநில அரசின் மீது திரும்பியது. லோக்சபா உறுப்பினராக இருந்தபோது, பாஜ கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறைக்கும், 2004ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் எரிசக்தித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

 

 

 
2
3

காங்கிசை நொறுக்கிய மம்தா!

அரசியலைப் பொறுத்தவரை, மம்தா ஒரு நம்பக்கத் தன்மை இல்லாத ஒரு அரசியல் தலைவராக முத்திரையைப் பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தின் அரசியல் களத்தை, நன்கு மதிப்பிட்டு வைத்திருந்த மம்தா பானர்ஜி, தன் பலத்தை நிரூபிப்பதற்கான காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. தமிழகத்தில் திமுக – தமாகா உட்பட, நாடு முழுவதும் பல்வேறு பிராந்திய கட்சிகள் வெற்றிபெற்றன.

 
 
 
 

எதிரியான சோனியா காந்தி!

அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சீத்தாராம் கேசரி, சோனியாவின் காலில் தன் காங்கிரஸ் தொப்பியை வைத்து, ‘நீங்கதான் கட்சியை வழி நடத்தணும்’ என்று கெஞ்சினார். கட்சியில் தேசிய பொறுப்புக்கு வரக் காத்திருந்த மம்தாவுக்கு, திடீரென சோனியா வந்தது, எரிச்சலை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேற்குவங்கத்தில் தன் ஆதரவாளர் களை திரட்டிய மம்தா, சரியான நேரத்தில் மாநிலத்தில் கட்சியை உடைத்து, ‘மேற்கு வங்கத்தில் மம்தா அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சீத்தாராம் கேசரி, சோனியாவின் காலில் தன் காங்கிரஸ் தொப்பியை வைத்து, ‘நீங்கதான் கட்சியை வழி நடத்தணும்’ என்று கெஞ்சினார். கட்சியில் தேசிய பொறுப்புக்கு வரக் காத்திருந்த மம்தாவுக்கு, திடீரென சோனியா வந்தது, எரிச்சலை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேற்குவங்கத்தில் தன் ஆதரவாளர்களை திரட்டிய மம்தா, சரியான நேரத்தில் மாநிலத்தில் கட்சியை உடைத்து, ‘மேற்கு வங்கத்தில் மம்தா இல்லாமல் காங்கிரஸ் இல்லை’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். இல்லாமல் காங்கிரஸ் இல்லை’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். மேற்கு வங்கத்தில் காங்கிரசில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, கட்சியை உடைத்தார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் வந்ததுபோல், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை 1997ம் ஆண்டு உருவாக்கினார்.

 

மனம் ஒரு குரங்கு!

மனிதர்களுக்கு இப்படித்தான் என்றாலும், மம்தாவுக்கு கொஞ்சம் அதிகம்தான். எந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தன் கட்சியை தொடங்கினாரோ, அதே கட்சியை தோற்கடித்து, எம்பியாகி, அதே காங்கிரஸ் கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் நுழைந்தார். இன்று எந்த பாஜவை மேற்கு வங்கத்தில் நுழைய விடமாட்டேன் என்கிறாரோ, அதே கட்சியுடன் ஒரு காலத்தில் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சர் சுகத்தை அனுபவித்தார். மம்தாவின் திருப்பு முனை என்றால், 2011 சட்டசபைத் தேர்தல்தான். அந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் ஜெயலலிதாவைப் போல், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களை வீழ்த்தி பொறுப்புக்கு வந்த மம்தா, மாநிலத்தில் தன் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டார். கம்யூனிஸ்ட் போனால், தரித்திரம் போகும் என்று நினைத்த மேற்கு வங்க மக்களுக்கு, மாபெரும் தரித்திரமாக மம்தா பானர்ஜி வாய்த்தது அவர்களது துரதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

 

மம்தா உண்மையில் யார்?

மம்தா பானர்ஜியைப் பற்றி முந்தைய பத்திகளில், ‘அவர் ஒரு சிறப்ப கல்வி’ கற்றுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தோம். அது பெரிய கல்வியெல்லாம் இல்லை. ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, மம்தாவின் மனதை மாற்றிய கல்வி. ‘இஸ்லாமிக் ஸ்டடி’ பிரிவில் அவர் பெற்ற பட்டம், நிச்சயம் அவரை மனதளவில் ஒரு முஸ்லிமாகவே மாற்றிவிட்டது. இந்துப் பெயரில், ஒரு முழுமையான முஸ்லிம் பெண்ணாகவே மாறிவிட்டிருந்தார் மம்தா. ஆம், மேற்கு வங்கத்தில் உள்ள 27 சதவீத முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து, அந்த ஓட்டுகளை பெறும் வகையில், காய் நகர்த்தத் தொடங்கினார். இந்துக்களின் பண்டிகைகளுக்கத் தடை போட்டார். 2017ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் 24 பர்கானா மாவட்டத்தில், முஸ்லிம்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் பாதிக்கப்பட்டனர்.

 
 

இஸ்லாமிய சரித்திரத்தில் முதுநிலை பட்டம்!

மனதளவில் முஸ்லிமாகவே வாழ்ந்துவரும் மம்தா, இந்துக்களின் துயரங்களை கண்டு கொள்ளவவே இல்லை. இது குறித்து எந்த ஒரு ஊடகத்திலும் செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது மம்தாவின் மாபெரும் சாதனை எனலாம். ஆனாலும், மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு குறிப்பு அனுப்ப, ‘‘மாநில முதல்வர் என்ற நிலையில், நீங்கள் கலவரத்தை தடுக்க முன்வராவிட்டால், மத்திய படைகளை களம் இறக்குவோம்’ என்று ராஜ்நாத் பகிரங்கமாக மிரட்டினார். இதனால், பயந்துபோன மம்தா, உடனடியாக போலீ£ஸ் படைகளை 24 பர்கானா மாவட்டங்களுக்கு அனுப்பினார். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துளியளவும் நிவாரணம் கொடுக்கவில்லை மம்தா.

 

 

 
1

மம்தாவின் வீழ்ச்சி எப்படி தொடங்கியது?

2011ம் ஆண்டு மேற்கு வங்கத்தை கைப்பற்றிய மம்தா, மெல்ல மெல்ல தன் சுயரூபத்தை வெளியில் கொண்டு வந்தார். சாதாரண நூல் சேலையும், 100 ரூபாய் செருப்பும் அணிந்திருந்தாலும், மம்தாவின் உறவினர்கள் நடத்திய ஊழல் வெறியாட்டம் அதிகம். சாரதா சிட்பண்ட் ஊழலில், எம்எல்ஏ, எம்பிக்கள், போலீஸ் அதிகாரிகள் என்று ஒட்டு மொத்த நிர்வாகமும் திளைக்க, சிபிஐ அமைப்பை தன் மாநிலத்துக்குள் வரக் கூடாது என்று தடை விதித்தார் மம்தா. மேலும், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை மம்தாவின் போலீஸ் படை கடந்த ஆண்டு கைப்பற்றியது.

ஒன்று சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள்!

அதேநேரத்தில், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், முஸ்லிம்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் ஓரணியில் திரண்டு, மம்தாவக்கு எதிராக களம் வகுக்க, இந்த இடைப்பட்ட நேரத்தில் பாஜ உள்ளே நுழைந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க களம் இறங்கி போராடியது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கவே மம்தா தன் போலீஸ் படைகளை அதிகம் பயன்படுத்தினார். இதனால், மேற்கு வங்கம் எனது என்ற மிதப்பில் இருந்த மம்தா, கடந்த லோக்சபா தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்தார். அதாவது, 18 தொகுதிகள் அவர் பாஜவிடம் இழந்தது, உண்மையில் எதிர் பார்க்காத ஒரு டுவிஸ்ட் என்றே சொல்ல வேண்டும்.

 
 

தனக்கு தானே ஆப்பு வைத்த மம்தா!

கொல்கத்தா மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் எல்லாம் மம்தாவின் செல்லப்பிள்ளைகள். முஸ்லிம்கள் எங்கே தவறு செய்தாலும், கலவரம் செய்தாலும் அதை அவரது போலீசார் கண்டு கொள்ளமாட்டார்கள். இப்படித்தான், கொல்கத்தா ஆஸ்பத்திரியில் 75 வயது முஸ்லிம் நோயாளி வயோதிகத்தால் சிகிச்சையில் இறக்க, அவரது உறவினர்கள் முதலில் சீனியர் டாக்டரை அடித்து துவைத்தனர். பின்னர், ஒரு நாள் கழித்து 200 பேர் கொண்ட கும்பல் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பயிற்சி டாக்டர்களை தாக்கி, 2 டாக்டர்களை கோமாவில் வீழ்த்தியது. இத்தனைக்கும், இந்த மாபெரும் கலவரத்தை மம்தாவின் வீட்டு வேலையாட்களாக போலீசார், கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர். ஒரு பேச்சுவார்த்தையில் முடிய வேண்டிய பிரச்னை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் போராட்டமாக வெடித்ததும், மம்தா தன் குரூரத்தை காண்பித்தார். போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் வங்காளிகள் அல்ல, கூலிப்படையினர் என்று கீழ்த்தர விமர்சனத்தை உமிழ, 300 சீனியர் டாக்டர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இதன் பின்னர், மீடியா முன்னிலையில் பேச்சுவார்த்தை என்ற கிடுக்கி பிடிக்குள் சிக்கினார்.

 
 

அடுத்த அடி ரெடி...

மேற்கு வங்க சட்டசபைக்கு இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போது அந்த மாநிலத்தை கைப்பற்ற பாஜ முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. மம்தாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியிலும், மம்தா தனியாகவும், பாஜ தனியாகவும் களம் காணத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில், இப்போதே 45 சதவீத மக்கள் பாஜவுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியிருப்பது, மம்தாவின் அரசியல் வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் போடத் தொடங்கியுள்ளது. எந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தன் கட்சியை தொடங்கினாரோ, அதே கட்சியை தோற்கடித்து, எம்பியாகி, அதே காங்கிரஸ் கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் நுழைந்தார்.