ஆதினங்களின் தொண்மை!

செங்கோல் விசயத்தில் ஆதீன வரலாறு தெரியாத சிலர் ஆதீனங்கள் பிற்காலத்தில் தோன்றியது என்றும் மேற்படி தங்கள் வன்மத்தையும் இதோடு இணைத்து பலர் பேசி வருகிறார்கள்.

2500 வருட பழமை

ஆதீனங்கள் வேளாளர்கள், அந்தணர்களால் சைவ சமய வளர்ச்சிக்காக தோற்றுவிக்கபட்டது. இது தமிழ்நாட்டில் 2500 வருடங்களுக்கு மேலாக இயங்குகிறது.

மழரை ஆதினம்

தமிழ்நாட்டில் மிகவும் பழமையான ஆதீனம் மதுரை ஆதீனம் 2500 வருடங்கள் பழமையானது. மதுரை ஆதீனத்தின் தற்போதை குருமகா சன்னிதானம் 293 ஆவது பேரரசர் என்பது குறிப்பிடதக்கது.

செங்கோல் ஆதினம்

அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செங்கோல் ஆதீனம் 1500 வருடம் பழமையானது. செங்கோல் ஆதீனம் தான் பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் தரும் உரிமை பெற்ற ஆதீனம்.

இதுபோல எண்ணிலடங்கா சைவ ஆதீன மடங்கள் செயல்பட்டதாக வரலாற்றில் காண்கிறோம்.

இதில் தற்போது இயங்கும் ஆதீனம்
மொத்தம் 18 திருவாடுதுரை

தற்போது செங்கோல் தந்த மரபினரான திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு? சோழ நாட்டில் பண்டுதொட்டு இயங்கிய சைவ மடங்கள் பல பற்றி சோழர் வரலாறு எழுதிய அறிஞர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

தத்துவ மரபு

திருவாவடுதுறை ஆதீனம் மெய்கன்டாரின் தத்துவ மரபை ஏற்று உருவான ஆதீனம் என்றாலும், அவர்களின் மரபு சோழ நாட்டு சைவ மரபு!

இதற்கு முக்கிய காரணம் ராஜராஜன் காலத்தில் பாசுபத சைவம் இருந்தது. பிற்காலத்தில் தோன்றிய சித்தாந்த சைவம் சைவ அறிவின் உச்சம்! அதன்பிறகு சோழநாட்டில் சித்தாந்த சைவமே உச்சம் பெற்றது. மெய்கன்டாரின் தத்துவம் அத்தகையது!

திருவாவடுதுறை ஆதீனம் மெய்கண்டார் வழி. இது தத்துவ ரீதியான பிற்கால தோற்றம்!
திருவாவடுதுறை ஆதீனத்தை வைத்து செங்கோல் கொடுக்க வைத்துள்ளனர். இன்று நாடாளுமன்றத்தில் செங்கோல் தர தமிழ்நாட்டின் பழமையான ஆதீனம் மதுரை ஆதீனமே உள்ளது.

வேளாளர்களின் மரபு

இதில் செங்கோல் வழங்கும் மரபு வேளாளர்களுக்கு உரித்தானது. அது தமிழர்களின் மரபு. அவர்கள் சோழர் பாண்டியர் போன்ற அரச மரபினருக்கு நந்தி அடையாளத்துடன் கூடிய செங்கோலை அளிப்பது வழக்கம்.

பாண்டியர் கால செங்கோல் ஆதீனமே உள்ளபோது! வரலாறு தெரியாத அந்த புல்லறிவர்கள் துணிச்சல் இருந்தால் ஆதீனத்திற்கே நேரடியாக வந்து ஐயம் தெளிந்து செல்க!

சைவம்

முதலில் சைவம் பற்றிய புரிதல் வேண்டும்! அதுவும் இல்லை. அதன் தோற்றம் வளர்ச்சி தத்துவம் அதுபற்றியாவது புரிதல் வேண்டும்! இது எதுவும் தெரியாது! ஆனால் வன்மத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள்!
பாசுபத சைவம்
காளமுக சைவம்
கபாலிக சைவம்
சித்தாந்த சைவம்
வீர சைவம்

தமிழ் சைவம் என சைவம் பல காலத்தில் பல தோற்றங்களை பெற்று வளர்ந்த அரச சமயம் இவர்கள் சோழர்களுக்கு மட்டுமல்ல பாண்டியர் முதலான இந்தியாவின் பல அரசுகளின் அரச சமயமாக விளங்கியவர்கள்.

சைவர் என்றாலே அவர்களின் தோற்றம் சிந்து சமவெளி நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்புடையது.

இந்த வரலாறு எல்லாம் தெளிவாக தொல்லியல் துறையினரிடம் உண்டு!