மீண்டும் ஸ்வாதி படுகொலை விசாரணை!

பலர் முன்னிலையில் 2016 ஜுன் 24ந் தேதி காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஸ்வாதி எனும் 24 வயது பெண்ணை கத்தியால் கழுத்தை வெட்டி படுகொலை செய்தது சென்னை நகரையே அதிர்ச்சி அடைய செய்தது.

விசாரணை முடிவு

நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் சிசிடிவி இல்லை என்பதால் அருகில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலிஸ் அதில் ஒருவர் ஸ்வாதியை பைக்கில் பின் தொடர்வதையும், பிறகு ரயில் ஸ்டேஷனின் மதில் சுவர் ஏறி தப்பித்து செல்வதையும் சுமாராக காண்பித்துள்ளது.

ராம்குமார்

ஒருசில நாள்களில் ரயில்வே போலிசில் இருந்து சென்னை போலிஸ் துறைக்கு மாற்றப்பட்ட சுவாதி கொடூர கொலை வழக்கில் போலிஸ் ராம்குமார் எனும் கொலையாளியின் போட்டோ ஒன்றை பிரசுரித்தது.

மீனாட்சிபுரம்

ராம்குமார் 3 மாதங்களுக்கு முன்னர் தான் சென்னை வந்து வேலை தேடிக்கொண்டு பகுதி நேரமாக படித்து பாஸ் செய்ய வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். மேன்ஷனில் தங்கியிருக்கும் ராம்குமார் சுவாதியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அதனை ஏற்காத சுவாதியை கொன்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராம்குமார் தற்கொலை

ராம் குமாரை அவர் தங்கியுள்ள மேன்ஷனில் தேடிய போது, ரத்தகறை படிந்த ஷர்ட் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது ஊரான மீனாட்சிபுரத்திற்கு போலிஸ் சுற்றி வளைத்தது. ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய ராம்குமாரை போலிஸ் சுற்றி வளைத்தது. உடனே பிளேடால் தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக் கொண்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உள்ளதாகவும், அவரால் பேசமுடியாது என்றும் ஒரு மருத்துவரே சாட்சி கூறினர்.

அவர் புழலில் அடைக்கப்பட்டார். செப் 16ல் அவர் சிறை வளாகத்தில் தொங்கி கொண்டிருந்த மின் ஒயரை கடித்து, தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தனர்.

மக்கள் அதிருப்தி

ஸ்வாதியின் இந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். ஏனெனில் விசாரணையில் முக்கிய சாட்சியங்கள் விசாரிக்கபடவே இல்லை.

ஒரு கல்லூரி பேராசிரியர் தானும் ஸ்வாதியுடன் பயணம் செய்பவர் என்றும் கொலை நடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு வாலிபர் ஸ்வாதியை கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்ததாகவும், ஸ்வாதி அமைதியாக இருந்து கீழே விழுந்து விட்ட தனது மொபைலை எடுத்துக்கொண்டு ரயில் ஏறியதாகவும் பல பேட்டிகள் கொடுத்துள்ளார்.

சாட்சி

மேலும் ஸ்வாதி இறந்தவுடன் முதல் ஆளாக வந்த அவளது நண்பர் பிலால் மாலிக் அவரது கம்ப்யூட்டரை எடுத்து சென்றதாகவும் ஒரு தகவல். அவருக்கு எப்படி முதலில் தகவல் சென்றது?? ஸ்வாதியின் அப்பா ஏன் அன்றைய முதல்வரை சந்தித்து மனு கொடுத்தார்??
ஒரு ஆட்டோ டிரைவர் ஒருமுறை ஸ்வாதி தனது ஆட்டோவில் பயணித்த போது, எனது லேப்டாப் இல் ஒன்றும் இல்லை, இருந்ததை எல்லாம் கொடுத்து விட்டேன் என்று கத்தி உணர்ச்சி வசப்பட்டு பேசி உள்ளார்.

ஏன் விசாரிக்கவில்லை

இவை அணைத்தையும் புறந்தள்ளி மிக அவசரமாக கொலையாளி ராம்குமார் என்று போலிஸ் முடிவு செய்து விட்டது என மக்கள் கூறி வந்தனர்.

தமிழ்நாடு மனித உரிமை ஆணையம்

கொடூர கொலை என்று இறந்தவர் ‘தலித்’ ஆக இல்லாமல் பிராமண பெண்ணாக இருந்ததால் தான் அரசியல் தலைவர்கள் சமூக தலைவர்களால் கவனிக்கபடாமல் விடப்பட்டார் என மக்கள் அதிருப்திபட்டனர்.

இப்போது 2021 ஆகஸ்ட் 17ந் தேதி மனித உரிமை ஆணையம் தானே முன் வந்து இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளது.

ராம்குமாரின் உடலில் மின்சாரம் தாக்குதலா??

ராம்குமார் தான் கொலையாளி என முடிவு செய்து அவரை புழலில் அடைத்த காவல் நிலையத்தார் செப் 16ல் ராம்குமார் திறந்த நிலையில் இருந்த மின் ஒயரை பல்லால் கடித்து, மின்சாரம் தாக்கி இறந்தார் என்று கூறி, ராயபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தவறுதலாக சொல்லிவிட்டேன்!! பலடி அடித்த அரசு மருத்துவர்!!

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் உடலில் திசுக்களில் மாற்றம் இருக்குமா என்று அப்போது குறுக்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. “பொதுவாக இருக்கும்“ என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார். ராம்குமார் உடலை நாங்கள் ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் இருவர் ஒரே மாதிரியான வாக்குமூலத்தை மாநில மனித உரிமை ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார்கள்.

மருத்துவர் வாக்குமூலம்

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் சையது அப்துல் காதர் என்பவர் அந்த உடலை பெற்றுள்ளார். அவர்தான் முதல் சாட்சியாக இந்த வழக்கில் இருக்கிறார்.

நாடி துடிப்பு இல்லை…

மருத்துவரின் வாக்குமூலம் படி, ராம்குமார் உடலை தான் பெற்றபோது அவரது உடலில் நாடித்துடிப்பு இல்லை மற்றும் ரத்த அழுத்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

12 மணி நேரம் முன்பே இறந்த ராம்குமார்

குறுக்கு விசாரணையில், ராம்குமாருக்கு, மரண விறைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி இருந்ததா என்ற கேள்விக்கு, அது சரிதான் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். மரணமடைந்த ஒருவரின் உடலில் மரண விறைப்பு ஏற்படுவதற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். எனவே 12 மணி நேரத்திற்கு முன்பே, இந்த மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற ஒரு சந்தேகம் இதன் மூலமாக உருவாகியுள்ளது. ராம்குமார் உடலில், மின்சார காயங்கள் எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கொலையா என கேள்வி

எனவே இதை எல்லாம் பார்க்கும் போது மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதும், அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்படும் 12 மணி நேரத்திற்கு முன்பே, ராம்குமார் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த செய்தி ஊடகத்தில் வெளியான நிலையில், அதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில கமிட்டி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், தமிழகமே கவனித்துக் கொண்டிருந்த ஸ்வாதி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்ததாக சொன்னதற்கு நேர்மாறாக புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. அவர் மின்சாரம் தாக்கி மரணமடையவில்லை என்றால், வேறு என்ன காரணத்தால் ராம்குமார் மரணம் ஏற்பட்டது? அது தற்கொலையா அல்லது கொலையா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மர்மங்கள்… விடைகள் எங்கே??
ஸ்வாதி கொலை வழக்கின் பல மர்மங்களுக்கு விடை கிடைக்குமா…

* ஸ்வாதி கொலை நடந்த இடத்தில் அவருடன் தினமும் ரயிலில் பிரயாணம் செய்யும் தமிழ் செல்வன் எனும் கல்லூரி பேராசிரியர் 50 அடியில் இந்த கொலையை பார்த்துள்ளார்.

மேலும் 10 நாட்களுக்கு முன்னர் ஸ்வாதியை பளார் பளார் என்று பத்து முறை அடித்த நபரையும் பார்த்துள்ளார். இருவரும் வேறு வேறு நபர்கள் என்றும் சொல்லி பல பேட்டிகள் கொடுத்துள்ளார்.

அவரை ஏன் விசாரிக்கவில்லை? ஸ்வாதியை அடித்த நபர் யார்?

* ராம்குமாருடன் சூளைமேடு மேன்ஷனில் தங்கியிருந்த நடேசன் எனும் தனி நிறுவன செக்யுரிட்டி எங்கே??

* ஒரு வாரமாகவா ராம்குமார் தனது ரத்தம் தோய்ந்த சட்டையை எரிக்காமல், தோய்க்காமல் தனது அறையில் இன்னொருவர் இருப்பார் என்று தெரிந்தும் போட்டு வைத்திருப்பார்.

* ராம்குமார் தனி ஆள் என்றால் ரத்த கறையுடன் எப்படி அவர் தப்பினார்…

* ஸ்வாதியின் நண்பன் என்று சொல்லபடும் பிலால் எப்படி முதல் ஆளாக ஸ்வாதி கொலை இடத்திற்கு வந்தார். ஸ்வாதி லேப்டாப் எங்கே??

* கோவை பொல்லாச்சி போல சம்பவத்தால் ஸ்வாதி கொல்லப்பட்டாளா?? அவரது தோழி ஒருத்தர் 6 லட்சம் பணம் கொடுத்தாக கூறியதை ஏன் போலிஸ் கண்டு¢க் கொள்ளவில்லை.

* எவ்வளவு நாள் காப்பாற்ற முடியும் என ஸ்வாதியின் தந்தை ஏன் கூறினார்?? யாரிடமிருந்து காப்பாற்ற பாடுபட்டார்.

உண்மை வெளியே வரட்டும்.
ஸ்வாதியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.