மன பிரச்சினைக்கும் இனி ரத்த பரிசோதனை…

அமெரிக்க பல்கலையான இண்டியானா மருத்துவ கல்லூரி உலகில் முதல் முறையாக மன உளைச்சலை கண்டுபிடிக்க ஒரு ரத்த பரிசோதனையை சோதித்து வருகிறது.

மனநோய்கள்

இன்று உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனஉளைச்சல் டிப்ரஷன் எனப்படும் ஆழ் மன கவலை, இன்னும் பலவகையான மன பிரச்சினையில் தான் வாழ்கிறார்கள்.

ஒரு சில பார்க்கப்படும் மருத்துவம் மன சிதைவு நோய்கள் பல சமயங்களில் மன உளைச்சலாகவே மருத்துவர்களால் ஆரம்பிக்கிறது.

உதாரத்திற்கு பை போலார் எனும் ஒரு வகையான மனசிதைவு நோய் தொடக்கத்தில் மன உளைச்சலாக தொடங்கி பிறகு ஆழ்மன வருத்தமாக மாறிவிடுகிறது. பிறகு தான் பைபோலார் எனும் மனச்சிதைவு நோய் வெளி வருகிறது.

எதிர்மறை விளைவுகள்

இத்தகைய மனச்சிதைவு நோய்களில் இருந்து மக்களை முதல் நிலையிலேயே காக்க முடியும் என்று இண்டியானா பல்கலை கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எப்படி?

இந்த புதிய ரத்த மாதிரி பரிசோதனை, எந்த மாதிரியான மனநோய் உள்ளது என்பதை சுட்டி காட்டி விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சாதாராண மன உளைச்சலா, ஆழ் மன கவலையா, மிக தீவீரமான கவலையா அல்லது மனசிதைவு நோயா என்று இந்த ரத்த பரிசோதனை முடிவுகள் காட்டி கொடுத்து விடும்.

அபாயம்

ஒருவருக்கு மனசிதைவு நோயான பைபோலார் நோய் இருக்கிறது என்றால், அவருக்கு முதல் நிலையில் மருத்துவர்கள் மனஉளைச்சல் அல்லது டிப்ரஷனுக்கு மருந்து கொடுப்பார்கள். தொடர்ந்து சில வருடங்கள் வாழ்கை ஒரு போராட்டமாகவே இவர்களுக்கு அமைந்துவிடும்.
மனசிதைவு நோய் முற்றி வந்த பிறகு தான் இவர்களுக்கு சரியான மருந்து கொடுத்து கட்டுபடுத்த முடியும்.

எதிர்மறையாக வேலை செய்யும் மருந்துகள்

சில சமயங்களில் மன உளைச்சலுக்கும் மன வருத்தத்திற்காகவும் தரப்படும் மருந்து, மனசிதைவு நோயினை அதிகபடுத்த தூண்டி விடக் கூடிய சாத்தியம் உள்ளது.

அந்த வகையில் இந்த ரத்த பரிசோதனை முடிவுகள் மாபெரும் உதவி. முதல் நிலையிலேயே எந்த மாதிரியான மனநோய் என்று தெரிந்து விடும். சரியான மருந்துகளை பரிந்துரைக்கலாம் என மருத்துவ உலகம் ஆமோதித்துள்ளது.

முதன்மை ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் நிக்கலஸ் கூறும் போது பல ஆயிரம் மன நோயாளிகளுக்கு இது மிக பெரிய வரம் என்றார்.

ரத்த பரிசோதனை

மனநோய் எனும் போது எதற்கு உடல் சார்ந்த பரிசோதனை?? என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமது ஒவ்வொரு உணர்சியும் நமது உடலில் பலவித ஹார்மோன் மாற்றத்தை உண்டு பண்ணுவதால், இந்த ரத்த பரிசோதனை எந்தளவு, எந்த மாதிரியான ஹார்மோன்கள், காரணிகள் நம் ரத்தத்தில் அதிகளவோ குறைந்தோ உள்ளது என்று காட்டி விடும்.

இதன் மூலம் எந்த வகையான மனநோய் என்று கண்டுபிடித்து ஆரம்ப நிலையிலேயே மனநோய்கான மருத்துவம் இனி சாத்தியபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று உலகில் டிமென்ஷியா எனும் மனநோய் இல்லாத வயதானவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

அதே போல இன்று குழந்தைகளுக்கும் கூட, பெற்றோரின் எதிர்பார்ப்பு, இணைய தளத்தின் மூலமாக பல போட்டிகள், சிந்தனைகள் என்று மன உளைச்சல் வர பல காரணங்கள் உள்ளது.
இளவயது மற்றும் மத்திய வயதினருக்கு கேட்கவே வேண்டாம். இவர்களுக்கு இந்த ரத்த பரிசோதனை இரண்டு தீர்வுகளை தருகிறது.

முதலாவது மனநோய் எல்லோருக்கும் வரும். ரத்த பரிசோதனை மூலம் கண்டு பிடித்து உடல் வியாதியை போலவே குணப்படுத்தலாம் எனும் கருத்தை முன் வைப்பதால் நோயாளிகளுக்கு தாழ்வு மனப்பான்மையோ, சமூகம் என்ன சொல்லுமோ எனும் அச்சமோ தேவை இல்லை.

இரண்டாவது, நோய் ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடிக்கபடுவதால் மருத்துவம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது! மேலும் பாதிப்புகள் குறையும்.

உலகம் இனி இருவகை படும் என்றே தோன்றுகிறது. மன ஆலோசனை எனும் கவுன்சிலிங் பெறுபவர்கள், ஆலோசனை பெறாதவர்கள் என்பதே அந்த இருவகை. ஏன் என்றால் இன்றைய காலத்தில் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் மன உளைச்சல் இருக்கிறது தானே!!!