மீண்டும் விவசாயிகள் தற்கொலையா?

நெற்பயிர் காப்பீட்டைரத்துசெய்து
திமுகவின் துரோகம்…

இந்தியா சுதந்திரமடைந்து 75-ஆண்டுகள் ஆனதன் முத்தாய்பாய் தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றிலேயே முதன்முறையாக தனியாக ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததாக பெருமைகொள்ளும் திமுக அரசு, 2020-2021-ல் பயிர்க்காப்பீடு திட்டத்தில் நெற்பயிரை நீக்கிய செயல் அதிர்ச்சியளிக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் 4.5 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் இதுவரை நெற்பயிர்க்கு பயிர்க்காப்பீடு செய்யப் படவில்லை.

மத்திய அரசின் திட்டம்

PMRBY காப்பீடு திட்டமானது விவசாயிகளை காப்பதற்காக, விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டே மத்திய அரசு 2016- ல் அறிமுகப்படுத்தியது. இக்காப்பீடு திட்டத்தில் மத்திய அரசும்,மாநில அரசும் தலா 49% செலுத்திவந்தனர். விவசாயிகள் மீதமுள்ள 2% செலுத்திவந்தனர். மத்திய அரசு தனது காப்பீட்டு பங்கினை வெறும் 16% குறைத்த காரணத்திற்காக நெற்பயிரை பயிர்க்காப்பீடு திட்டத்திலிருந்து முழுமையாக நீக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

அதிர்ச்சியில் விவசாயிகள்

தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படுவதும், பேரிடரால் அதிகம் பாதிக்கப்படுவதும் நெல் பயிராகும். காவிரி டெல்டா பகுதியில் நெல் அதிகம் பயிரிடப்படுவதால், முந்தைய ஆட்சிக்காலத்தில் அது பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பிற்காக அதிகம் தேவைப்படுவதும் நெல் பயிர்தான். அப்படியிருக்கும்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் நெல் நீக்கப்பட்டது ஏன்? என்று அரசு தெரிவிக்கவும் இல்லை.இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

மீண்டும் தற்கொலைகளா??

ஏற்கனவே இலாபகரமான விலை இல்லாததாலும், நெல்கொள்முதல் குழப்பங்களாலும் நெல் பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும்போது,அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வதைவிட்டு நெல்பயிரை காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கியிருப்பது அவர்களை மீண்டும் சொல்லன்னா துயரத்தில் ஆழ்த்தி, மேலும் நஷ்டப்படுத்தி,அவர்களுக்கு தற்கொலை உணர்வை ஏற்படுத்துமோ? என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

எல்லாம் பொய்யா…

விவசாயிகளைக் காப்பதாக பச்சைத்துண்டு அணிந்து,தன்னை விவசாயி போல் காட்டிக்கொள்ளும் தமிழகமுதல்வர், நெல்பயிர் விவசாயிகளைக் காக்க இலவசத் திட்டங்களுக்கு செலவிடும் நிதியிலிருந்து எடுத்து இதை சரிகட்டலாம்.ஏனெனில் இன்றைய நிலையில் சிறு,குறு விவசாயிகளும் ஏழைகளே!
கொரோனா காலத்திலும் உலகிற்கே உணவளித்த காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கியப் பயிரான நெல்லை, காப்பீடு திட்டத்திலிருந்து நீக்கியது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லது காப்பீட்டு திட்டம் தமிழக அரசு ரூ.2,327 கோடி செலவில் பயிர்க்காப்பீடு திட்டத்தை அறிவித்துவிட்டு, அதில் மிக முக்கியமான விவசாயிகளின் வாழ்வாதாரமான குறுவை நெற்பயிரை நீக்கியது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.ஆனால் இயற்கை சீற்றத்தின் பாதிப்பால் நெற்பயிருக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து காப்பீடு என தமிழக அரசு சொல்வதும்,அதனால் கிடைக்கும் இழப்பீடும் பயிர்க்காப்பீடு திட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகச்சொற்பத் தொகையே.

500 கோடி இல்லையா???

மதுரையில் நூலகத்திற்காக ரூ.70 கோடியும்,சென்னையில் பூங்காவிற்காக ரூ.2,500 கோடியும் செலவிடும் தமிழக அரசு டெல்டா விவசாயிகள் நலன் காக்க பற்றாக்குறையாக உள்ள வெறும் ரூ.500 கோடிக்காக நெற்பயிர் காப்பீடு திட்டத்தை ஒதுக்கி, தப்பித்துச்செல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

தமிழக அரசு நெற்பயிருக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் பாஜகவின் தலைமையிலான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் போராட்டம் தொடங்கும்…