பென்சில்தரும் வாழ்க்கை பாடம்…

முதலும் முக்கியமுமான பாடம் நம்மை ‘‘வழி நடத்துவர்’’ ஒருவர் இருக்கிறார் என்பதை உணர வேண்டும். எப்போதும் ‘அவர்’ நம்மை வழி நடத்துகிறார். அவரது எண்ணப்படி!!!

நாம் பென்சிலால் எழுதும் போது அவ்வப்போது நிறுத்தி பென்சிலை சிறப்பாக கூர் செய்ய வேண்டி உள்ளது. சிரமம் தான். ஆனால் அதன் பிறகே பென்சில் உபயோகம் பெறுகிறது. அதே போல வாழ்கையிலும் வரும் கஷ்ட நஷ்டங்களை நாம் தாங்கி வரும் போது நாம் பண்படுகிறோம்.
பென்சிலால் எழுதும் போது நமது தவறுகளை எளிதாக அழித்து விடமுடிகிறது. அது போலவே நாழும் நமது தவறுகளை அழித்து கொண்டு வந்தால் நமது பாதை சிறக்கும்.

ஒரு பென்சிலின் வெளிப்புறம் மரத்தால் இருந்தாலும் அதில் பயன் தருவது உள்ளே இருக்கும் கரி போன்றது தான். அதே போல நமது வாழ்விலும் நமக்குள்ளே இருக்கும் ஆன்மாவே நமக்கு அதி முக்கியமானது.

பென்சிலால் எழுதும் போது எப்படி அதன் சுவடுகள் உள்ளதோ அதே போல நமது ஒவ்வொரு செயலும் சுவடுகளை விட்டு செல்கிறது. எனவே ஜாக்கிரதை.

பென்சிலை நாம் உபயோகித்துக் கொண்டே வர அதன் உயரம் குறைந்து இறுதியில் கரைந்து விடுகிறது. அதே போல தான் நமது வாழ்கையும்!!! எனவே வாழ்வை செம்மையாக்க பாடுபட வேண்டும்.

தனது கடைசி மூச்சு வரை பென்சில் எழுத உதவுவதை போல நாமும் நமது கடைசி மூச்சு வரை செயல்பட வேண்டும். பயன் தர வேண்டும்…