திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு நமக்கு தெரிந்தால் வருங்கால தலைமுறைகள் காப்பாற்றபடும்!

திராவிட கழகம் தோன்றியது 1944
பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது. அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை!

1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, தம்பி வா, தலைமையேற்க வா என்று சொன்னது கருணாநிதியையா.? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே!

திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே!

அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா.? நாவலர் தானே முதல்வரானார்!

எம்ஜிஆர் உதவி யோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?

அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக.? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு!

திமுக தொடங்கப்பட்ட போது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகதான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகதானே, இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக்கொண்டார்?

ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சிதான் 1976 அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடுபொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே?

அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும் வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே!

எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989’ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது!

தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி?

தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?

அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?

இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன், உதயநிதி தானே!
இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே?

எந்த வித தேர்தலுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?

கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன் பிறகும் காங்கிரஸ§டன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும் தான் தெரியும் போல..

இத்தனை இருந்தும் கலைஞர், தலைவர் பதவி ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே.!

ஆனால் எக்காரணம் கொண்டும் திமுகவில் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவரது வாரிசுகளுக்கு தானே தவிர வேறு யாருக்கும் வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி…