சீனாவை சிதறடிக்கும் இந்தியா!

ஐநா சபை உருவாக்கப்பட்டபோது, அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவுக்கு, ஐநா சபையின் நிரந்த உறுப்பு நாடு என்ற அந்தஸ்தை வழங்கிட, ரஷ்யா உட்பட பல நாடுகளும் முன்வந்தன. ஆனால், அப்போதைய இந்திய பிரதமராக இருந்த நேரு, பெரிய மனது பண்ணி, நம் நாட்டுக்குக் கிடைத்த வாய்ப்பை, சீனாவுக்கு வழங்கக் கூறினார். ஒருமுறையல்ல, 2 முறை இப்படி நேரு செய்த தவறால், இந்தியாவுக்கான வாய்ப்பு, அப்படியே சீனாவுக்குச் சென்றுவிட்டது. தகுதியில்லாதவன் கைகளில், அதிகாரம் சென்றால், என்ன நடக்குமோ, அதைத்தான் சீனா செய்யத் தொடங்கியது. இப்போது செய்து செய்து கொண்டும் இருக்கிறது.

சோப்ளாங்கி சீனா

இன்று உலக வல்லரசுகளில் ஒன்றாக தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சீனாவின் ஆரம்ப கால வரலாறு மிகவும் பரிதாபகரமானது. இன்னிக்கு என்னோட முறை, நாளைக்கு நீ அடிச்சுக்கோ என்று சீனாவை வரிசை கட்டி தாக்கிய நாடுகள் பல. குறிப்பாக, இப்போது சீனா ஆக்கிரமித்துள்ள மங்கோலியா மற்றும் மஞ்சூரியா நாடுகளின் மன்னர்கள், பல நூற்றாண்டுகளாக அந்நாட்டை துவைத்தெடுத்தனர்.

இந்நாடுகளின் அடியைத் தாங்க முடியாத சீனா, அவர்களின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உருவாக்கியதே சீனப் பெருஞ்சுவர். சீனாவை பல்வேறு வம்சத்தினர் ஆட்சி செய்தாலும், குழு மோதல்கள், நம்பிக்கை துரோகங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள் என்று சொல்லவே வெட்கப்படும் வரலாறுகள் சீனாவின் அத்தியாயங்களில் அதிகம். இவர்கள் போதாது என்று, குட்டி நாடான ஜப்பானும், இப்போதைய கொஞ்சம் நட்பு நாடான ரஷ்யாவும் கூட, ஒரு காலத்தில் சீனாவை துவைத்து தொங்கவைத்துள்ளனர். அதனால்தான், சீனாவும், ஜப்பானும் இப்போதும் கூட, வர்த்தக ரீதியாக மட்டுமின்றி, ராணுவ ரீதியாகவும் உரசிக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில், 1911ம் ஆண்டு வரை சீனா ஒரு சோப்ளாங்கி நாடுதான்.

சன்யாட் சென்னின் புரட்சியும், கிய்ங் வம்சத்தின் வீழ்ச்சியும்

ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் தங்கள் காலனி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியில், ஆசியக் கண்டத்தின் பல நாடுகளை கைப்பற்றி, வர்த்தகம் செய்வதாக கூறி, ஆட்சி செய்த காலகட்டத்தில், சீனாவும் இந்த வளையத்துக்குள் வந்தது என்னவோ உண்மைதான். ஆனால், இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளைப்போல், சீனாவுக்கு செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. இதனால், ஐரோப்பியர்களின் பார்வை சீனாவில் இருந்து மெல்ல விலகியது. இதற்கு முக்கியக் காரணம், சீனாவில் நிலவிய வறுமையும் ஒரு முக்கியக் காரணம். கிய்ங் வம்சம் ஆட்சி செய்தாலும், மன்னரைத் தவிர மற்றவர்கள் கையில் காசு இல்லை. இதனால், ஐரோப்பாவின் கவனம் அங்கு பதியவில்லை.
அதேநேரத்தில், ஐரோப்பாவின் மக்களாட்சி தத்துவம், சீனாவில் மெல்ல ஊடுருவியது. இதனால், சன்யாட்சென் மக்கள் புரட்சியின் உதவியால், மன்னர் ஆட்சியை அகற்றினார். முதலாளித்துவத்தை அடிப்படையாகக் இவரது கோமிண்டாங் கட்சி ஆட்சிக்கு வந்தது. சீனாவில் மெல்ல மக்களாட்சி, வேர்பிடித்த காலகட்டம். ஓரளவு பொருளாதாரம் வளர்ந்தது.

ரஷ்யாவால் வீழ்ந்த சீனா

ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டிய, லெனின், அங்கு 1917ம் ஆண்டில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவந்தார். ரஷ்யாவின் கம்யூனிச சித்தாந்தம், அதன் அண்டை நாடான சீனாவுக்கும் மெல்ல தொற்றியது. ரஷ்யாவைப் பார், நாமும் அப்படி வளர்வோம் என்று சொல்லிக் கெண்டு புரட்சி செய்தான் மாவோ. ஆனால், 1925ம் ஆண்டு சன்யாட் சென் இறக்கும்வரை, மாவோவை ஒருவரும் மதிக்கவில்லை. சன்யாட்சென்னுக்கு பின்னர் வந்த சியாங்கே ஷேக், ஆட்சியின் போது, மாவோவின் கை ஓங்கியது. இதனால்,உள்நாட்டுப் போர் வெடித்தது. இதிலும், கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்டனர்.

ஜப்பான்

இந்த சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்த ஜப்பான், சீனாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. இதனால், மாவோ கும்பல் ஓடிஒழிந்தது. ஆனால், 2ம் உலகப்போரில் ஜப்பானின் பங்கேற்கும், இதன் பின்னர் அமெரிக்கா வீசிய அணுகுண்டும் ஜப்பானுக்கு சேதம் ஏற்படுத்தின. இதனால், சீனாவில் இருந்து ஜப்பானிய படைகள் பின்வாங்கின. இதனால், சீனாவில் கம்யூனிசத்தை உருவாக்குவதற்காக லெனின், மாவோவுக்கு பக்கபலமாக இருந்தார். சியாங்கே ஷேக் கும்பல் ஓட்டம் பிடித்தது. சீனாவில் கம்யூனிசம் உருவானது.

சீனாவின் அட்டகாசம் தொடக்கம்

சீன கம்யூனிச அரசின் முதல் த¬ஷ்லவராக பதவியேற்ற மாவோ, 1949ம் ஆண்டு முதல் சொந்த
மக்களை கொன்று குவித்து, கம்யூனிசத்தை ஏற்க வற்புறுத்தியது. ஏறக்குறைய கத்திமுனையில் மதமாற்றம் செய்ததைப்போலத்தான். உயிர்பயம் காண்பித்து கம்யூனிசத்தை ஏற்க வைத்தனர். கம்யூனிசத்துக்கு வந்தவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, வெறியூட்டப்பட்டு, ராணுவத்தில் இணைக்கப்பட்பட்டனர். ‘நம்ம நாடு வளரணும். அதற்கு எதுவும் தப்பில்லை’ என்ற பாடம் நடத்தப்பட்டது. அதாவது, நாம ஆக்கிரமிப்போம். நமக்கு அதுதான் பாதுகாப்பு என்ற சித்தாந்தத்தை சீனா கையில் எடுத்தது.

படுகொலைகள்

மாவோவின் காட்டுமிராண்டிப் படை, கும்பல் கும்பலாக படுகொலை செய்து, லட்சக்கணக்கான முதலாளிகளைக் கொண்றது. அப்படியே, அமைதிநாடான திபெத் பீடபூமியை ஆக்கிரமித்தது. மங்கோலியா, மஞ்சூரியா என்று அதன் ஆக்கிரமிப்புத் தொடர்ந்து. பின்னர், ஜின்ஜியாங் மாகாணத்தையும் கைப்பற்றியது.

நில அபகரிப்பு

1941ம் ஆண்டு சீனாவின் வடைபடத்தை கூகுளில் பார்த்தால், நீங்கள் காரித்துப்பிவிடுவீர்கள். காரணம், சிறிய நாடுதான். ஆனால், காட்டு மிராண்டித்தனமான கம்யூனிச சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தம் அண்டை நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டு, இப்போது பெரிய நாடாக தன்னை பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு குடைச்சல் தீரவில்லை
சீனா ஆக்கிரமித்த தங்கள் நிலங்களைவிட்டு வெளியேறக் கூறி, திபெத், ஷாங்காய், ஜின்ஜியாங் பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்லாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தப் போராட்டங்களால் ஆத்திரமடைந்த சீனா, லட்சக் கணக்கான உய்குர் இன முஸ்லிம் மக்களை, தனிமை முகாம்களில் அடைத்து, அடித்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது.

மௌனம்

இதெல்லாம், உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். ஆனால், மௌனம் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கேட்டால், அது இன்னொரு நாட்டின் விவகாரம் என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். இங்குள்ள மக்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. என்னய்யா, ரோஹிங்கியாக்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறும் மக்கள், உய்குர்களை கணக்கில் கொள்வதில்லை. அவர்களை முஸ்லிம்களாகவே மதிப்பதே இல்லை என்பதுதான் உண்மை.

செலவு

சீன ராணுவத்தின் செலவுகளின் ஒருபகுதி எதற்கு செலவிடப்படுகிறது தெரியுமா? உள்நாட்டில் தனக்கு விடுக்கப்படும் குழப்பங்களை, போராட்டங்களை முறியடிக்கவே செலவிப்பட்டு வருகிறது. இது ஜின்பிங் ஆட்சியில் மட்டுமல்ல, சீனாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவின் காலத்தில் இருந்து இதுதான் நிலை.

பணத்தால் அடிக்கும் சீனா…

சீனா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகள் அந்தஸ்தில் இருந்தாலும், அதன் ராணுவ பலம் மற்றும் வேகத்தை ஐநா ஒருபோதும் நம்பியது இல்லை. இதனால், சர்வதேச அமைதிப்படை பணிகளுக்கு பெரும் அளவில் இந்தியாவின் கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக்க ராணுவத்தையே மிகமிக அதிகளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அப்படியானால், சீனாவின் உண்மையான பலம் என்ன?

சீனாவின் உண்மையான பலம், அதன் கம்யூனிசமும், பண பலமும்தான். தன்னைவிட வலிமை குறைந்த நாடுகளை ராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமித்துக் கொள்ளும் சீனா, சமமான நாடுகள் அல்லது, தொலைவில் உள்ள நாடுகளை எல்லாம் தன் பண பலத்தால்தான் வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதாக கூறி, பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளிக் கொட்டும் சீனா, இப்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் பணத்தை முதலீடு செய்வதாக கூறி, கை மாறாக கனிம வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுடன் மோதல் புதிதல்ல

சீனா என்னதான் நட்பு நாடாக காண்பித்துக் கொண்டாலும், அதன் நம்பிக்கை துரோக வரலாறு இந்தியாவின் வரலாற்றில் நீண்ட பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனா 1959ம் ஆண்டில் திபெத் பீடபூமியை கைப்பற்றிய நிலையில், திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா இந்தியாவுக்குள் அடைக்கலாம் புகுந்தார். இது சீனாவுக்குப் பிடிக்கவில்லை. தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், அருணாசல பிரதேசத்தில் இருந்த புத்த மடலாயத்தின் தலைமை பீடத்தை மூடக்கோரியும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால், சீனாவின் நெருக்கடியை இந்தியா கண்டு கொள்ளவே இல்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 1962ம் ஆண்டில், இப்போதைய லடாக் யூனியன் பகுதியில் உள்ள மக்மோகன் எல்லைக் கோட்டை அத்து மீறி ஊடுருவி தாக்குதல் நடத்தியது சீனா.

அக்சாய்சின்

உண்மையில் இந்தப் போரில் இந்தியா வென்றிருக்க வேண்டியது. ஆனால், நேருவின் தவறான நிர்வாகத்தால் 32 ஆயிரம் சதுர கிமீட்டர் பரப்பளவை இந்தியாவிடம் இருந்து சீனா கைப்பற்றியது. இந்த நிலம் அக்சாய்சின் என்று குறிப்பிடப்படுகிறது. இதைத்தான் மீண்டும் கைப்பற்றவுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆண்டில் தெரிவித்தார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

சிக்கிம்

அதேபோல், 1967ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தின் நாதுலா பகுதியில் அத்துமீறி ஊடுவியது. ஆனால், 1962 போர் போல் அல்லாமல், சிக்கிமில் சீன ராணுவம் கடும் அடிவாங்கியது. இந்திய வீரர்கள் 83 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இப்போது வரை இந்தியாவின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டேதான் இருக்கிறது சீனா. ஆனால், இந்தியா அவ்வப்போது பதிலடி கொடுப்பதால், சத்தமின்றி இருக்கிறது

கொரோனா பீதியால் இந்தியாவை சீண்டும் சீனா

உலக வல்லரசாக தன்னை நிலை நிறுத்துவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் சீனா, கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா வைரஸ் பிரச்னையால் அடி வாங்கத் தொடங்கியது. சீனாவில் இருந்து, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியதும், உலக நாடுகளின் ஒட்டு மொத்த ஆத்திரம் சீனாவின் மீது திரும்பியது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மெல்ல மெல்ல குறைக்கத் தொடங்கின. இதனால், சீனாவின் வர்த்தகமும் போச்சு. சீனா மீதான மரியாதையும் போய்விட்டது. இது சீனாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீண்டிய சீனா

தன் மீதான இந்தப் பழியை நீக்குவதற்காக, சீனா மிகுந்த தவிப்புடன் உள்ளது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் தவிக்கும் சீனா, சமயோசிதமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் தன் பழைய வரலாற்றை தூசி தட்டி படித்துக் கொண்டு, இந்தியாவை சீண்டிப் பார்க்கலாம் என்று செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், சீனாவின் இந்த சீண்டல், இப்போது சீனாவுக்கு எதிராகவே திரும்பியிருப்பது, ஜின்பிங் உட்பட கம்யூனிஸ்ட் தலைவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

லடாக் எல்லையில் மோதல் ஏன்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசு, அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால், அதன் ஆட்சி, நிர்வாகம் ஆகியவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது.

லடாக்

லடாக் எல்லையில், இந்தோ / சீனா எல்லைப் பகுதியில், நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காண்பித்தது. நாட்டின் எல்லைவரை ராணுவத்தைக் கொண்டு செல்லும் வகையில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சாலைகள், ராணுவத்தின் நிர்வாக கட்டுப்பாட்டு அலுவலகங்களை இந்தியா மின்னல் வேகத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தது. இந்தியாவின் இந்த தொடர் கண்காணிப்புகளால், லடாக் எல்லைப் பகுதியில் அவ்வப்போது ஊடுருவி அட்டகாசம் செய்து கொண்டிருந்த, ஊடுருவலை தடுத்த இந்தியா சீனாவின் மக்கள் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஒரேயடியாக ஊடுருவாமல், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுக்குள் வந்த, சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

நமது எல்லை பகுதி

ஆனால், இதை சீனாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா எங்கள் எல்லைக்குள் ஊடுருவுகிறது என்று கூக்குரல் இட்டனர். அதாவது, நேருவின் காலத்தில் அவர்கள் ஆக்கிரமித்த பகுதியை, தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா தம்பட்டம் அடித்துக் கொண்டு, இவ்வாறு கூறிக் கொண்டிருக்கிறது. அது இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று பாஜவைத் தவிர, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட எந்த ஒரு கட்சியாலும் வாய் திறக்க முடியவில்லை.
அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய நினைக்கும் சீனா, ஊடுருவல் பழியை இந்தியாவின் மீது திணித்தது.

ஜூன் 1 மோதலும், இப்போதைய நிலையும்.

பெரும் நெருக்கடிக்குப் பின்னர், இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், படைகள் குவிக்கப்பட்டுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை பின்னுக்கு நகர்த்த ஒப்புக் கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் 13ம் தேதி இதுகுறித்து முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. சொன்னபடி செய்தது இந்தியா. ஆனால், சீனாதான் எப்போதும் குள்ளநரித்தனம் செய்யும் நாடாயிற்றே.

சதி

ஜூன் 15ம் தேதி வரை படைகளை பின்னுக்கு நகர்த்தவில்லை. வழக்கம்போல், கட்டுப்பாட்டு பகுதியில் கண்காணிப்பு பணிக்கும் சென்ற கர்னல் சந்தோஷ்பாபு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி ஆகியோர் தலைமையிலான படைப் பிரிவு, நமது எல்லையையட்டிய பகுதியில் சீனாவின் 300க்கும் அதிகமான வீரர்கள் டென்ட் அடித்து, முகாம் போட்டிருந்தது தெரியவந்தது.

தாக்குதல்

இதுகுறித்து விசாரிக்கச் சென்ற கர்னல் சந்தோஷ்பாபு மற்றும் ஹவில்தார் பழனியை, சீன வீரர்கள் சூழ்ந்து கொண்ட தாக்க, மோதல் மூண்டது. சந்தோஷ் பாபுவை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அரண் ஏற்படுத்திய நமது வீரர்கள், பேஸ் கேம்ப் எனப்படும் நமது முகாமுக்குத் தகவல் தெரிவித்தனர்.

எல்லை மோதலும், வீர மரணமும்

கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான சீன வீரரர்களை, முதலில் 35 இந்திய வீரர்கள் மட்டும் சமாளித்தனர். ஆனால், இரும்பு ஆணிகளால் உருவாக்கப்பட்ட கட்டைகள், கம்பிகளைக் கொண்டு சீனர்கள் தாக்கத் தொடங்கியதால், நமது வீரர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். எல்லையில் துப்பாக்கி பிரயோகம் செய்யக்கூடாது என்று இந்தியா — சீனா இடையே ஏற்கனவே ஒப்பந்தம் உள்ள நிலையில், இரு தரப்பிலும் கை கலப்பு தீவிரமானது. சீனர்களின் கொடூரத்துக்காக, நமது வீரர்களின் பதிலடி பலமாக இருந்தது. இதனால், சீனர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த கை கலப்பு யுத்தத்தில் கர்னல் சந்தோஷ்பாபு, ஹவில்தார் பழனி உட்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் அடிபட்டு இறந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்து, சீன அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான சீனர்கள் இறந்ததாகவும், நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்ததாகவும் சீன சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களிடம் வாங்கிய உதையால் பீதியடைந்த, சீனா, தன் லாடாக்கை ஒட்டிய எல்லையில் உள்ள தன் ராணுவ வீரர்களுக்கு தற்காப்புக் கலை வீரர்கள் உதவியுடன் பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளது.

வாங்கிய துட்டுக்கு வேஷம் கட்டும் காங்கிரஸ்…

காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா, புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் கூவிக் கொண்டிருந்தார். கூடவே, அவரது புத்திரன் ராகுலும் ரொம்பவே புத்திசாலித் தனத்தை காண்பித்தனர். என்னடா, இவங்க இப்படி கூவிக் கொண்டிருக்கிறார்களே? என்று ஒட்டு மொத்த நாடும் யோசித்த நிலையில், சீனாவிடம் இருந்து தங்கள் ராஜூவ்காந்தி அறக்கட்டளைக்காக, சோனியா, ராகுல், பிரியங்கா கோஷ்டி கோடிக் கணக்கில் நன்கொடை பெற்றது தெரியவந்தது. காங்கிரஸ் கட்சிக்கு இது பெரு பின்னடைவு.

வர்த்த ரீதியாகவும் பதிலடி

சீனாவின் இன்னொரு பலம் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் மற்றும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் மலிவு விலையிலான பொருட்கள். சீனா வர்த்த விஷயத்தில் ஐரோப்பாவுக்கு தலையும், இந்தியாவுக்கு வாலும் காண்பிக்கும் குணமுடையது. அதாவது, முதல் மற்றும் 2ம் தர பொருட்கள் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கு பயணிக்கும். இந்தியாவுக்கு வினியோகம் செய்யப்படும் பொருட்கள் எல்லாம் 4ம் தர பொருட்கள் என்பது இந்திய வர்த்தகர்களின் குற்றச்சாட்டு. இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையும் கூட.

சந்தை மதிப்பு என்ன?

இந்த 4ம் தர பொருட்களின் சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா? கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செல்போன், ஸ்மார்ட் டிவிக்களை சீனா விற்றுள்ளது.
இதுதவிர, விளையாட்டுத்துறையில் விளையாட்டு உடைகள், விளையாட்டு உபகரணங்கள் என்ற வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவின் பார்மா துறையில் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய். பிளீச்சிங், டையிங் வகையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்.
நவீன இயந்திரங்கள் இறக்குமதி குறிப்பாக அதிவேக தையல் இயந்திரம், தாமிரம் உட்பட உலோகங்கள் என்று ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு அதிக பட்சமாக 7 லட்சம் கோடி ரூபாயை சீனா இந்தியாவில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நமது ஏசி, ரெப்ரிஜிரேட்டர் உட்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் 25 முதல் 70 சதவீத பொருட்கள், சீனாவில் இருந்துதான் வருகின்றன. நூற்றுக்கு நூறு சதவீதம் அல்ல. இந்தப் பொருட்களின் சில குறிப்பிட்ட முடிவுற்ற பொருட்கள் இறக்குமதியாகின்றன. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தப் பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், சில விஷயங்களில் சீனாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அதை முறியடிக்க இந்திய வணிகர்களும், நுகர்வோர் சந்தையிடுகை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தீவிர முயற்சியில் உள்ளன.

ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு அதிக பட்சமாக 7 லட்சம் கோடி ரூபாயை சீனா இந்தியாவில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

ராணுவ ரீதியாக தயார்…

படைக் குறைப்பு பேச்சை நடத்திக் கொண்டே, எல்லையில் 20 ஆயிரம் வீரர்களையும், 48 மணி நேரத்தில் எல்லையை அடையும் வகையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் 12 ஆயிரம் வீரர்களையும் சீனா நிறுத்தியுள்ளது. ஆனால், இந்தியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், மன்மோகன், சோனியாவுக்கு பதில் சொல்லிக் கொண்டும் இல்லை. மாறாக, எல்லையில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. சிறப்பு மலைப்படைப் பிரிவு உட்பட 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் களை லடாக் எல்லையில் குவித்துக் கொண்டிருக்கிறது.

அணி வகுப்பு

நிமிடத்துக்கு 60 குண்டுகளுக்கு மேல் வீசும் அதிக சக்திவாய்ந்த பீஸ்மா ரக டாங்கிகள், சுகோய் ரக குண்டு வீச்சு விமானங்கள், அதி நவீன ஏவுகணைகள் ஆகியவற்றை எல்லையில் குவித்து வைத்துள்ளது. எந்த ஒரு அடிக்கும், பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவின் அரபிக் கடல், வங்களாக விரிகுடா, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் போர் கப்பல்களை ஊடுருவல் செய்யாமல் தடுக்கும் பணியில் இந்திய கடற்படை முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது.

தஞ்சையில் உள்ள சுகோய்

சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் களம் இறங்கினால், அவற்றை தொடக்கத்திலேயே வீழ்த்துவறத்காக தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படையில் சுகோய் ரக குண்டு வீச்சு விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எல்லையில் நடக்கும் நிகழ்வுகளை உள்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் தீவிரமாக கண்காணித்து, அதற்கு தகுந்தார்போல் நகர்வுகளை மேற் கொண்டுள்ளனர். எந்த ஒரு சூழலிலும் இந்தியா- —-சீனா போர் ஏற்பட்டாலும், அது 1962 ஆண்டுபோல் இருக்காது.

சீனா சிதறிவிடும்

மாறாக, சீனாவை சிறதடிக்கும், பதறடிக்கும் வகையிலான ஒரு போராகத்தான் இருக்கும். குறிப்பாக, சீனாவுக்கு எதிராக கர்ஜித்துக் கொண்டிருக்கும் வியட்நாம், தைவான், ஜப்பான், தென் கொரியா உட்பட கிழக்காசிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனின் பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளும், அமெரிக்காவும் இந்தமுறை இந்தியாவுக்கு ஆதரவாக தங்கள் ராணுவத்தை களம் இறக்க ஒப்புக் கொண்டுள்ளன. இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணைகள் இந்தியாவுக்கு ஆதரவாகனாம் சீனாவுக்கு எதிராகவும் திருப்பியுள்ளன. இதனால், இந்தமுறை போர் என்று ஒன்று நிகழ்ந்தால், அது சீனாவுக்கு பலத்த சேதத்தையும், பொருளாதார சீரழிவையும், முக்கத்தையும் கொடுக்கும். இந்தியாவுக்கும் பாதிப்புகள் இருக்கும். ஆனால், எதையும் விட்டுக் கொடுக்க முடியாத சூழல்.
நம் நாடு நமக்கே சொந்தம்.