சீனாவின் நூறாண்டு விழாவில் திமுக!

டில்லியில் காணொளி காட்சி வாயிலாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தி.மு.க.,வின் தர்மபுரி எம்.பி., செந்தில் குமார் பங்கேற்றதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

எல்லை பிரச்சினையில் யாருக்கு ஆதரவு?

அதில் எல்லை பிரச்சனையில் நீங்கள் இந்தியாவிற்கு ஆதரவா அல்லது சீனாவிற்கு ஆதரவா என்ற கேள்வியை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு இவர்கள் இரு நாடும் சமரச பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களே தவிர எங்களது உயிர்போனாலும் நாங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு தான் ஆதரவாக இருப்போம் என்று கூறவில்லை.

இந்த நேரத்தில் மூன்று விஷயங்களை பற்றி நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கார்கில் போரில் இறந்த நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தாத திமுக தலைவரும் தமிழக முதல்வருமாகிய திரு ஸ்டாலின் சீனாவின் ஆதரவு பெற்ற மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் அனுதாபியும் தேசத்துரோக வழக்கில் கைதாகி சிறையிலேயே இறந்த ஸ்டென் சாமியின் அஞ்சலி நிகழ்சியில் கலந்துகொண்டார்.

2017 ல் சீனா இந்திய பகுதியான டோக்லாமை ஆக்கிரமிக்க முற்பட்டபோது இந்திய ராணுவம் அவர்களை கடுமையாக எதிர்த்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரகசியமாக சீன தூதுவரை சந்தித்தார். அந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் இந்திய சீனா எல்லை பிரச்னையை பற்றி விவாதித்தேன் என்று கூறி சமாளித்தார்.

மிக முக்கியமான விஷயம்.. சீனா ஏன் திமுகவை இந்த காணொளி கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே…

அதற்கான விடை சீனா இந்தியாவிற்கு மிக அருகில் தமிழக எல்லையை ஒட்டி இருக்கும் இலங்கையில் காலூன்றி அங்கிருந்து நமது நாட்டிலோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ அல்லது இரண்டையும் எதிர்த்தோ ஏதோ செய்ய திட்டமிட்டு அதற்கு இங்குள்ள அரசின் உதவி தேவை பட்டு இருக்கலாம்.

உளவு துறை அதன் வேலையை செய்யும். ராணுவம் அதன் வேலையை செய்யும். நாமும் விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது. நமது தேசத்திற்கு எதிராக நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒன்றிணைந்து போராடவேண்டும். தேச துரோகிகளை ஓட ஓட விரட்டியடிக்கவேண்டும்.