சமஸ்கிருதம்ஒரு பூரண மொழி

சமஸ்கிருதம் ஒரு பூரண மொழி. அதன் ஒலி, உச்சாடனம் பிரபஞ்சத்தில்
இணைக்கும் சக்தி
கொண்டது.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மூலம் சமஸ்கிருத மொழி தனது தொன்மையையும் பிரபஞ்சத்தின் மொழி என்பதையும் நமக்கு சொல்கிறது. இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் இந்த சமஸ்கிருதம் எனும் தேவ மொழி நமது ஆன்மாவினை தொடவல்லது என்கிறார் முனைவர் டேவிட் ஃபிராலி எனும் அறிஞர்.

சமஸ்கிருதம் ஒரு பூரணமான மொழி. அதன் ஒலி, உச்சாடனம் பிரபஞ்சத்தோடு இணைக்கும் சக்தி கொண்டது.

சமஸ்கிருதம் எந்த வகையான மொழி குடும்பங்களுடனும் தொடர்பு இல்லாதது! தனித்துவமானது! ஆயினும் பல மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து பல சொற்களை, சொற்கோர்வைகளை பெற்றுள்ளது. பல்வேறு மொழிகள் சமஸ்கிருத மொழியினை சார்ந்து உள்ளது.

வேத மந்திரங்களின் மொழி அது. நாம் பேசும் பேச்சல்ல! ஏன் கவிதை சொற்களையும் தாண்டி இவ்வுலகின் ஆன்ம ஒலி அது. ரிஷிகளின் ஆழ் சமாதி நிலை தியானத்தின் போது பிரபஞ்சத்தின் உண்மைகள் ஒலி, ஒளி வடிவமாக தோன்றி அதுவே சமஸ்கிருத மொழியாகியது.

சமஸ்திருதம் எனும் இந்த கடவுளின் மொழியினை நாம் அறிந்து கொண்டால் இயற்கையை மற்றும் நமது ஆழ்மனைதையும் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்டால் இந்த பிரபஞ்ச உண்மை நமக்கு தெரிய வரும். இது பரம் பொருளின் வாக்கு… சச்சிதானந்தம் எனும் பேரின்பத்தில் நாம் திளைத்திருக்கலாம்…

கற்போம் சமஸ்கிருத மொழியை…