கோவேக்சின்நாயகன் கிருஷ்ணமூர்த்திஎல்லா

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் 1969ம் ஆண்டில் பிறந்தவர் தான் கிருஷ்ணமூர்த்தி எல்லா. விவசாயி ஆக வேண்டும் விவசாயம் படிக்க வேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது. படித்து விவசாயம் பண்ணுவதில் என்ன இருக்கிறது என்று அவர் தந்தை சொன்னாலும் பிடிவாதமாக பங்களு£ரில் உள்ள விவசாய கல்லூரியில் சேர்ந்து படித்து தங்க பதக்கம் பெற்றார். மேலும் அவர் ஆராய்ச்சி படிப்பு படிக்க ஆசைபட்டு அமெரிக்கா பல்கலையில் அவரது விருப்பமான உடல் அணுக்கள் குறித்த படிப்பினை மேற்கொண்டார்.

திருமணம்

சுசித்ரா அவர்களை அமெரிக்காவில் கண்டு திருமணம் செய்து கொண்டார். பொதுவாக அமெரிக்கா சென்றவுடன் கீரின் கார்ட், வீடு, வசதி என்றே கனவு காணுவார்கள். ஆனால்,

இவரது லட்சியம்

இவரது, ‘‘கனவு எப்படி நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து நியாயவிலையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்ய முடியும்’’ என்பதே!!
பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையங்களுக்கு சென்றால் அவர்கள் ஆராய்ச்சிக்கு வசதிகள் செய்து தருவார்கள் தான்… ஆனால் தடுப்பு மருந்தின் விலை எகிறி விடுமே…

பாரத் பயோடெக்

இந்தியாவில் உள்ள ஹைதரபாதில் பாரத் பயோடெக் எனும் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அவர் முதன் முதலாக தனது சகாக்களோடு கண்டு பிடித்தது, ஹிப்பாடீஸ் பி எனும் மஞ்ச காமாலைக்கான தடுப்பூசி. இந்த வியாதிக்கான முதல் தடுப்பூசி இது தான்.

கேட்ஸ் அறக்கட்டளை

இவரது ஆராய்ச்சி கேட்ஸ் அறக்கட்டளையின் வாசலை திறந்து விட்டன. 16 வருட கடும் ஆராய்ச்சிக்கு பிறகு ‘காச நோய்க்கான’ தடுப்பூசியை கண்டுபிடித்தார். இதுவும் முன் போல உலகிலேயே முதல் முறை என போற்றி வரவேற்கப்பட்டது. 70 நாடுகளில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.

விலை என்ன?

மேலை நாடுகளில் இந்த தடுப்பூசி 85 டாலர்கள் அதாவது சுமார் 6000 ரூபாய் ஆனால் நமக்கோ வெறும் 70 ரூபாயில் வழங்க ஏற்பாடு செய்த கிருஷ்ணா அவர்களும் ஒரு அவதாரம் தான் போலும்.

கோவிட்

திடீரென சுனாமியாக கோவிட் எனும் பெருந் தொற்று தாக்கியது. மக்கள் மாண்டு விழுந்தனர். மருந்து, முக கவசம், தடுப்பூசி என உலகமே பரபரத்தது.

ஆதர் பூனேவாலா

இவர் தடுப்பூசி தயாரிக்கும் மிக பெரிய நிறுவனத்தை நடத்தி வரும் பணக்காரர். அவர் ஆக்ஸ்போர்ட், ஆஸ்டிரா போன்ற நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு ‘‘அடினோ வைரஸ்’’ எனும் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முயன்றார்.
பல நவீன நுட்பங்களை ஆராய்ந்து வந்த கிருஷ்ணா கடைசியில் நமது பழைய நுட்பத்தை வைத்து முயற்சி செய்யத்
தொடங்கினார்.
கொரோனா கிருமியை கொன்ற பின் அதிலிருந்து தடுப்பு மருந்து தயாரிப்பது பழைய பாணி. அதை முன் வைத்து இந்திய அரசுடன் இணைந்து தடுப்பூசி உற்பத்தி செய்தார்.

சோதனை

முதலில் எலிகள், பின் விலங்கு பிறகு மனிதர்கள் என சோதனைகள் செய்து, பொறுத்திருந்து பின் விளைவுகள், பக்க விளைவுகள் என்று சோதித்து தான் பொது மக்களுக்கு உபயோகிக்க முடியும் என்பது விதிமுறைகள்.

முதல் இரண்டு சோதனைகளை கடின முயற்சிக்கு பிறகு முடித்த கிருஷ்ண 3ம் சோதனையின் போது, கால நெருக்கடியால் விருப்பத்துடன் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டர்வர்களிடம் சோதனைகளை மேற்கொண்டார்.

இந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு 28 நாட்களில் கொரோனா கிருமிகளை கொல்ல கூடிய ‘ஆண்டிபாடிஸ்’ எனும் எதிப்பு சக்தி ரத்தத்தில் உருவாகி விடும்.

இன்ப அதிர்ச்சி

28 நாட்கள் கழித்து, மிகவும் பாதுகாப்பான ஆய்வக சூழலில் இவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ‘ஆண்டிபாடிஸ்’ இந்த கிருமிகளை கொன்று விடுகிறதா என்று சோதனை செய்தனர்.

இன்ப அதிர்ச்சி அனைவருக்கும்! கிருஷ்ணா கண்டுபிடித்த கோவேக்ஸின் எனும் தடுப்பூசி கொரோனா கிருமிகளை அறவே கொன்று விட்டது.

இந்திய கண்டு பிடிப்பு

இந்தியாவிலேயே இந்திய அரசுடன் தயாரிக்கப்பட்டது. அதிக செலவில்லாமல் அதிலும் முக்கியமாக எந்த அந்நிய ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்தும் உதவி பெறாமல் கண்டு பிடிக்கப்பட்டது கோவேக்சின்.

எதிர்ப்பு

பொறாமை நிறுவனங்கள் சும்மா இருக்காதே… சமூக வலை தளம், உலக மீடியா என பல வதந்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர் இந்த வெற்றியை தடுத்திட.

ஆனால் இந்திய அரசு பல நாடுகளுக்கும் இதனை அனுப்பி அவர்களும் பரிசோதனை செய்து சூப்பர் என கூறிவிட்டதால் இப்போது பல நாடுகளுக்கு ‘‘கோவேக்சின்’ ஏற்றுமதி ஆகிறது.

தனது ஒரே லட்சியமாக ஏழை எளியவர்களுக்கு நோய்களில் இருந்து காக்க, தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு விவசாயி மகனின் கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசிக்காக இன்று பணக்கார நாடுகளும் இவரது தடுப்பூசிக்காக காத்துக் கொண்டிருப்பது தான் இவரது உயர்ந்த தன்னலமில்லாத லட்சியத்தின் மெகா வெற்றி.

இவரை போன்ற இந்தியர்களால் தான் இன்று பாரதம் தலை நிமிர்ந்து நிற்கிறது…

மனித இனமே இன்று கிருஷ்ணமூர்த்தி எல்லாவிற்கும் அவருக்கு தடைகளை நீக்கி, நம்பிக்கை கரம் கொடுத்து இணைந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளது.