என்ன சொல்லிவிட்டார் மாரிதாஸ்!

அன்று கருணாநிதி சொன்னது, இன்றும் உண்மைதான்…
ஆம்… இந்துக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்தான்
‘‘தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்’’ என்று தோற்று விட்ட கோவத்தில் கருணாநிதி அப்படி சொன்னாலும் கூட, தமிழர்களுக்கு கோபம் வருவதில்லை. காரணம், அவர்கள் ஏறக்குறைய திராவிட ஆட்சியில் அப்படியே வாழ்ந்துப் பழகிவிட்டவர்கள். அவர்களை திடீரென புரட்சிக்கு தயாராகச் சொன்னால்? நிச்சயம் சாத்தியமே இல்லை.

தொடர்ந்து செயல்படுத்தும் ஊடகங்கள்

ஆம், அன்று கருணாநிதி தொடங்கி வைத்த ‘சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என்ற தொடரை, இப்போதும், இந்த நேரத்திலும் தமிழர்கள், குறிப்பாக இந்துக்கள் மிகவும் சிக்கென பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
சன் டிவி தொடங்கி, நியூஸ் 7, நியூஸ் 18 மற்றும் கலைஞர் டிவி உட்பட அனைத்து செய்திச் சேனல்களிலும், விவாத நேரத்தில் பெரும்பாலும், இந்துக்களின் நம்பிக்கை மீதே தாக்குதல் நடத்தும் தலைப்புகளில் விவாதங்கள் நடக்கும். இதில் விஜய் டிவி இன்னும் ஒரு எக்ஸ்பர்ட். ஜீ தமிழ் நடத்தும் தமிழா தமிழா நிகழ்ச்சி, தமிழர்களின் செருப்புகளை பறித்து, அவர்களையே சாத்தும் பணியை, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல், பழனியப்பனை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறது.

தொடரும் இந்துக்களுக்கு எதிரான வன்மம்

இந்துக்களின் திருமண சடங்குகளில் தாலி மிக முக்கியமான ஒரு அங்கம். இந்துக்களின் எந்த ஒரு சமூகத்தைத் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கென பிரத்யேக தாலிகள் உள்ளன. ஆதியில் தாலி என்பது இல்லை. ஆனால், திருமண ஒப்பந்த ஓலைகள் இருந்தன. அதாவது, இன்னாரது மகளை, இன்னாரது மகனுக்கு திருமணம் செய்விக்கப்படுகிறது என்று பனை ஓலைகளில் எழுதி அதை மணமகள் கழுத்தில் அணிவித்தனர். ஓலை என்பது அழியும் பொருள். இது காலமாற்றத்தில் உருமாறி, தாலியாக மாறியது. ஆனால்,

தாலி தேவையா??

இந்தத் தாலி இந்துக்களுக்குத் தேவையா? என்று ஊடகங்கள் விவாதங்கள் நடத்துகின்றன. இத்துப்போன திராவிட சித்தாந்தத்தில் வந்தவர்கள், இந்து மத வெறுப்பாளர்களை விவாதத்துக்கு அழைக்கின்றன. இதே ஊடகங்கள் கிறிஸ்தவத்தில் உள்ள மோதிரத்தைப் பற்றியோ, இஸ்லாத்தில் உள்ள பிற சடங்குகள் பற்றியோ கேள்விகள் எழுப்புவது இல்லை. காரணம், ஊடக முதலாளிகள் பலர் கிறிஸ்தவர்கள் அல்லது அவர்களது பினாமிகள்.

வெடித்து எழுந்தது சர்ச்சை

இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே லடாக் யூனியன் பகுதியை ஒட்டிய, சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய்சின் – லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மத்திய அரசு, சீனாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. இதில், சீனாவின் டிக்டாக் உட்பட 59 செயலிகளை தடை செய்தது.

நீயுஸ் 18 செந்திலின் துரோகம்

இதற்கு நியூஸ் 18 சேனலின் ஆசிரியர் செந்தில், ‘சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்றுவிடுமா’ என்று கிண்டல் டுவிட் அடித்தார். இதற்கு சமூக ஆர்வலர் மாரிதாஸ், ஆதாரத்துடன், ‘செயலிகள் தடை ஏன், எதற்கு’ என்று விரிவான விளக்கம் அளித்தார். ‘தெரிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லாவிட்டால் கிண்டல் வேண்டாம்’ என்று ஆவேசம தெரிவித்தார்.

பதறிய ஊடக நெறியாளர்கள்

தமிழகத்தில் தாங்கள் சொல்வதே செய்தி, ஒளிபரப்புவதே காட்சி, நிலை நிறுத்துவதே நீதி என்ற ரீதியில், கடிவாளம் இல்லாத குதிரையாக தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த இந்த மெய்ன் ஸ்ட்ரீம் மீடியாக்களுக்கு, மாரிதாஸ் கொடுத்த விளக்கம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெத்தியடி

காரணம் மிகச் சமீப நாட்களில் தங்களை இந்தளவுக்கு யாரும் வெளிப்படையாக விமர்சித்தது இல்லை என்பதால், ‘ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல்’ என்று கதறத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் பக்க வாத்தியம் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி( வெளிச்சம் டிவி) திருமாவளவன், திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், மே 17 திருமுருகன் காந்தி என்று பட்டியல் நீள்கிறது. பட்டியலைப் பார்த்தாலே, இவர்கள் பதட்டத்துக்கான காரணம் புரியும். இதில், கட்சி சார்ந்த திமுக சேனல்களான சன் நியூஸ், கலைஞர் நியூஸ் தவிர, நடுநிலை என்று கூறிக் கொள்ளும் நியூஸ் 7, நியூஸ் 18, புதிய தலைமுறை உட்பட பிற சேனல்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

திமுக, திக பிடியில் தமிழக ஊடகங்கள்…

அதிலும், நியூஸ் 18 சீனியர் எடிட்டர் குணசேகரன், திக கொள்கையாளர் கலி பூங்குன்றனின் குடும்ப வரிசையில் வந்தவர். இதுதவிர, திமுகவின் மகேஷ் அன்பில் பொய்யாமொழி 2014ல் தொடங்கிய ஒன் மைன்ட் ஜெனரேசன் என்ற மீடியா பயிற்சி பட்டறையில் விஷம் ஊற்றி வளர்க்கப்பட்ட நாற்றுகள்தான், ஒவ்வொ மீடியாவிலும் திணிக்கப்பெற்று, அது தமிழக மக்களிடையே விஷக்காற்றை பரப்பிக் கொண்டிருக்கின்றன. இதையும் கூட மாரிதாஸ் பட்டைய உரிக்கத் தொடங்கியதால், இப்போது திமுக வட்டாரத்திலும் ஏக்கப்பட்ட சலசலப்பு. ஆனாலும், கூட, தமிழகத்தில் எந்த ஒரு பெரிய சலசலப்பும் இல்லை. காரணம், கருணாநிதி அன்றே சொன்னதுதான். ‘தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள். அதிலும் இந்துக்கள். நீ என்னதான் அடித்தாலும், அவர்கள் நமக்கே ஓட்டுப்போடுவார்கள்’ என்ற சித்தாந்தம்தான்.

இது நியூஸ் 18 குணசேகரனின் லட்சணம்-அவலம்

2016ம் ஆண்டு விழுப்புரம் வ.பாளையம் கிராமத்தின் கூலி தொழிலாளி அங்கப்பன் மகள் நவீனா (17). பிளஸ் 2 மாணவியான நவீனா மினி பஸ்ஸில் பயணித்தபோது, கண்டக்டர் செந்தில் பாலியல் தொல்லை கொடுத்தான். அவனுக்கு பயந்து பள்ளிக்குப் போவதை நிறுத்தினாள். பொதுமக்கள் நாலு சாத்து சாத்தியதில் செந்தில் அமைதியானான். ஆனால், மீண்டும் நவீனா பள்ளி செல்லத் தொடங்கினால். குடிப்பழக்கம் கொண்ட கண்டக்டர் செந்தில், போதையில் ரயில்வே டிராக்கில் விழுந்தபோது, ரயில்மோதி கை, கால் துண்டானது.

புரளி

நவீனாவை காதலித்ததால், நவீனாவின் மாமன் செந்திலை வெட்டியதாக செந்தில் குடும்பத்தினர் கூறினர். இதையே மீடியாக்கள் ஒளிபரப்பின. இதை சாதி வெறிக் கொடுமை என்றும், 17 வயது பெண்ணை காதலிப்பது குற்றமா? என்று குணசேகரனும், அவரது டீமும் ஒரு தவறான செய்தியை தமிழகத்தில் ஒளி பரப்புகின்றனர். 17 வயது பெண்ணை, 35 வயது ஆண் காதலிப்பது குற்றமா? என்று நியாயம் கேட்காத குறைதான். ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு 17 வயது பெண்ணை காதலிக்க உரிமை இல்லையா?’ உரிமைக் குரல் எழுப்பினர்.

பொறுக்கி ஹிரோ ஆன கதை…

அதாவது, தவறேதும் செய்யாத நவீனாவை உயிருடன் சித்ரவதை செய்து கொல்லும் பணியை குணா அன்ட் கோ ஆபரேஷன் நடத்தியது. இதனால், பொறுக்கி ஹீரோ ஆனான். இப்போதைய எம்பி ரவிக்குமார், போராட்டம் நடத்துகிறார் கடுப்பான நவீனா குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுக்க, போலீஸ் விசாரணையில் செந்தில் போதையில் ரயிலில் அடிபட்டது தெரியவந்தது. இதையடுத்து செந்தில் கம்பி எண்ணினான்.

எரிக்கப்பட்ட நவீனா!!

ஜாமீனில் வந்த செந்தில், அதே ஆண்டு ஜூலையில் நவீன வீட்டுக்குச் சென்றான். போதையில் இருந்த அந்த அயோக்கியன், படிப்பை மட்டுமே காதலித்த நவீனாவை, தன்னை காதலிக்கச் சொல்லி துன்புறுத்துகிறான். மறுத்த நவீனா மீதும், தன்மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கட்டிப் பிடித்தான். தடுக்க வந்த நவீனாவின் தங்கை நந்தினியும் தீக்காயம் அடைந்து மயங்கினாள்.

ஊடகத்தின் கொலை இது…

இதில், ஆகஸ்ட் 2ம் தேதி நவீனா புதுச்சேரி ஜிப்மரில் இறந்தாள். செந்திலை ஹீரோவாக்கி ஜாதி வெறியைத் தூண்டிய குணசேகரனின் திராவிட சித்தாந்தம், நவீனாவின் படுகொலைக்கு செய்த செயல் என்ன தெரியுமா? ‘செந்திலின் மூர்க்கத்தால் பெட்ரோல் ஊற்றி துடிக்க துடிக்க மாணவி எரிக்கப்பட்டால்’ என்று டுவிட் மட்டுமே. அதாவது, தான் ஹீரோவாக்கிய செந்தில், கொஞ்சம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக ஆறுதல் கூறினான்.

என்ன அருகதை உள்ளது?

நவீனாவின் செய்தி, இந்த நடுநிலை ஊடக நெறியாளர்களின் தரத்துக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல்தான். வழக்கம்போல் கூக்குரல் போதும் திமுக தலைவர் ஸ்டாலின், அப்போதைய செயல் தலைவர், செந்திலுக்கு நீதிகேட்டு குரல் கொடுத்தார். ஆனால், நவீனா இறந்ததும் சத்தமின்றி சைலன்ட் மோடுக்குச் சென்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே, நவீனா குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்கக்கோரி குரல்கொடுத்தார் என்பது செய்திகளில் பதிவான செய்தி.

தடயங்களை அழித்தனர்…

செந்தில் தன்னையும், நவீனாவையும் எரித்துக் கொண்டதும், அதற்கு முன்னர் செந்திலை ஹீரோவாக்கி தாங்கள் போட்ட பதிவுகளை எல்லாம் குணசேகரன் அண்ட் கோ அடியோடு அழித்தெறிந்தது. இந்த வழக்கில் இல்லாத செயலை, நடக்காத ஒன்றை ஊதிப் பெரிதாக்கி, தங்களை புலன் விசாரணைப் புலிகள் என்று காண்பித்துக் கொண்ட, குணசேகரன், செந்தில், நியூஸ் 18 செய்தியாளர் ஹாசிப் முகமது போன்றோர்தான் ஊருக்கு நீதி சொல்கின்றனர்.

இன்று தமிழக ஊடகங்களின் கதி என்ன??

திமுகவின் பிடியில், திராவிட கொள்கை எனும் கேடுகெட்ட பாதையில், மத வியாபாரிகளின் பண பலத்தில் இன்று தமிழ் நாட்டு ஊடகங்கள் சிக்கி உள்ளன.
தலைமகனாக வந்தவர் குணசேகரன் என்பவர். திகவின் கலி பூங்குன்றம் அவர்களின் மாப்பிளை.
திராவிட கொள்கையை பற்றி சொல்லவே வேண்டாம். வெறும் சாக்கடை! தமிழர்கள் காட்டுமிராண்டிகள்! தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் ‘‘பெரியார்’’.

கார்ல் மார்க்ஸின் அடிப்பொடி…

கிறிஸ்துவம் இங்கு வேரூன்ற, வேண்டுமென்றால் இந்து மதம் ஒழிய வேண்டும். அதற்கு கோவில்களையும் வேதங்களையும் அழிக்க வேண்டும். அதனை கட்டிக் காத்து நின்ற பிராமணர்களை குறி வைக்க வேண்டும் என்ற தந்திரத்தை கற்றுக் கொண்டு இன்று வரை இந்த வியாபாரிகள் அந்நிய டாலர்களுக்காக தாய் நாட்டை பிரித்து, நமது கலாசாரத்தை சீரழிக்க முடிந்தவற்றை செய்து வருகிறார்கள்.
மூத்திர சட்டி பெரியாரின் பொன்னாசை அவருக்கு இழிவை தேடி கொடுத்தது. வளர்த்த மகளை மனைவியாக்கி கொண்ட ‘பெரியாரின்’ கழகத்தை விட்டு வெளியேறிய அண்ணா தலைவர் மற்றுமொரு திராவிட முன்னேற்ற கழகத்தை முன்னெடுத்தார்.

அழிவு பாதையில்

திராவிட ஆட்சி கடந்த 50 வருடங்களில் தமிழ் நாட்டின் கலாசாரத்தை அழிவு பாதையில் அழைத்து செல்கிறது.
ஊடகங்கள், திரைதுறை, தற்போது இணையதளம் என அவர்களது ஆதிக்கம் அனைத்திலும் உண்டு. மக்களுக்கு செல்லும் செய்திகள் அனைத்தும் அவர்களிடம் இருந்தே வரவேண்டும் என்பதே…
எல்லா செய்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும் இந்து நம்பிக்கைகளுக்கு எதிரானவை. தேச நலனுக்கு எதிரானவை, பிரிவினைவாதத்தை தூண்டுபவை, இது எப்படி சாத்தியமானது??
ONE MIND GENERATION எனும் ஒரு லாபமில்லா நிறுவனம் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதில் அன்பில் பொய்யா மொழி எனும் திமுக பிரமுகர் தான் முக்கிய இயக்குநர்.
இந்த அமைப்பின் பிரதான செயலே தமிழக ஊடகங்களில் பணிக்கு அமர்த்தக் கூடியவர்களின் மண்டையை திராவிட பிளிச்சிங் பவுடரால் கழுவுவது தான்!!
திராவிட கொள்கையை பின்பற்றியே, திமுகவை முன்னிறுத்தியே எல்லா செய்திகளும்… எல்லாவிவாதங்களும், மிகவும் முக்கியமானது இந்து மத எதிர்ப்பு, இந்து மத நம்பிக்கைகளை அவமதித்தல்…
இவரது குழுவில் உள்ளவர்கள் ஜீவ சகாப்தன், செந்தில், ஜான்பால், கருணாகரன், பிரகாஷ் பாண்டியன், ஹஸிப் மொகமத், எழில், விஷ்ணு, மதன் மற்றும் சொக்கலிங்கம்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்

இந்த அமைப்புடன் தான் குணசேகர் & கோ இணைந்து செயல்படுகிறார்கள்.
‘கறுப்பர் கூட்டம்’ எனும் ஒரு யூ டியுப் சானல் உள்ளது. நியுஸ் 18 நிருபர் ஒருவர் இதனை நிர்வகித்து வருகிறார். அவர் தான் ஹாஸிப் முகமது.

திராவிட ஆட்சி கடந்த 50 வருடங்களில் தமிழ் நாட்டின் கலாசாரத்தை அழிவு பாதையில் அழைத்து செல்கிறது.

இவர் அடிப்படைவாத நக்ஸல்! மோடி எதிர்ப்பாளர். இந்து மத நம்பிக்கைகளையும் இந்து கடவுளர்களையும் மிகவும் கொச்சையாக்கி செய்திகள் தருவார்.
நியூஸ் 18 சானலில் உள்ளவர் பெரும்பாலானவர்கள் இத்தகைய சிந்தனையுள்ளவர்கள் என்று மாரிதாஸ் நியூஸ் 18 நிர்வாகத்தினராகிய அம்பானிக்கு எழுதி போட, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தார் தவறை ஒப்புக் கொண்டு, நன்றி தெரிவித்துள்ளனர்.
இவர்களது விஷ வித்துக்கள் தமிழகத்தின் பிற சானல்களிலும் பரவி உள்ளது என்பது சர்வ நிச்சயம்.
ஏனென்றால் இந்த சதிகார கும்பல் முன் எடுக்கும் பொய் தகவல்கள் தான் மற்ற சானல்களிலும் வருவதை நாம் காண்கிறோம்.
அம்பானிக்கு உள்ள பெருந்தன்மையும், தொழில் நேர்மையும் நமது பிற தொலைகாட்சி அதிபர்களுக்கும் வரவேண்டும். அவர்கள் தைரியமாக நாட்டு நலனை மனதில் நிறுத்தி களையெடுக்க வேண்டும்.
நாட்டு மக்களுக்கு எது உண்மையோ அதை மட்டுமே கூறவேண்டும் என்ற நல்ல புத்தியை கொடுக்க வேண்டி எல்லாம் வல்ல கடவுளை வேண்டுவோம்.
ஏன் என்றால் பெரும்பாலான இந்த சானல் அதிபர்கள் பக்தி உள்ளவர்கள்!
இதில், இன்னொரு விஷயம் என்னவென்றால், தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில், மாரிதாசுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக எம்பியின் மிரட்டலில் புதிய விஷயம் ஏதும் இல்லை. 2007ம் ஆண்டு தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்டதும், கண்கள் பனித்து, இதயம் இனித்ததை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.
சகோதரர் மாரிதாஸ் அவர்கள் சரியான நேரத்தில், தமிழக மக்களுக்கு ஊடகங்களின் உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்… தகுந்த அத்தாட்சிகளோடு அவரது சேவைக்கு சமூகத்தின் சார்பாக வாழ்த்துகள்…
திமுகவின்
பிடியில், திராவிட கொள்கை எனும் கேடுகெட்ட பாதையில், மத வியாபாரிகளின் பண பலத்தில் இன்று தமிழ் நாட்டு ஊடகங்கள் சிக்கி உள்ளன.